Total Pageviews

Friday, July 12, 2024

''ஆசை'',பேராசை என்றால் என்ன?


''ஆசை'' (want) என்பது தமக்கு எது தேவையோ அதனைக் கொண்டு வருதற்கான உணர்வாகும்.

பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை தான் ''பேராசை''...

ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதிகமான பணத்தை விரும்புவது தான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும்.

அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசை கூட பேராசையாக அமைந்து விடும்.

முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும்.

 'ஆசை'', "பேராசை"

அத்தியாவசியம் - ஆடம்பரம்

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆசை: விருப்பமான எதிர்பார்ப்பு ஒன்றை செய்வதற்கான சொந்த சக்தி, புறச்சூழ்நிலைகள் இவைகளை ஆய்வு செய்து அடையக்கூடிய சாத்தியப்பாடு அறிந்து, கடின உழைப்பிற்குப் பிறகு வெற்றியை சூடுவது ஆசை.

பேராசை : எந்தவிதமான அக புற காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தாது. கனவு மட்டுமே கனா கண்டு பிறகு தோல்வியில் முடிவதும், குறுக்கு வழியில் பிறவற்றிற்கு சேதத்தையும், தனக்கு லாபத்தை உருவாக்குவது பேராசை!


 உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ''ஆசை'' காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது.

 எந்தப் பொருளின் அதிக ஆசை இல்லையோ, அவற்றினால் துன்பம் ஏதும் இல்லை.✍🏼🌹

1 comment:

  1. சுருக்கமாக எனினும் மிகச் சரியான விளக்கம்

    ReplyDelete

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...