Total Pageviews

Friday, July 12, 2024

போங்கையா நீங்களும்,, உங்கள் சிக்கனமும்....

 


நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு நவீன திரை அரங்கில் பார்க்கையில் வராத சிக்கனம்...

இருபது முப்பது ரூபாய்க்கு சாப்பிடவேண்டிய உணவை முன்னூறு ரூபாய் கொடுத்து ஒரு குளிசாதன உணவகத்தில் சாப்பிடுகையில் வராத சிக்கனம்...

முன்னூறு ரூபாய் பெறுமானமுள்ள சட்டையை (உடுப்பை) முவ்வாயிரம் கொடுத்து பிரபல துணிக்கடையில் வாங்கையில் வராத சிக்கனம்...

பத்து ரூபாய் மட்டுமே மதிப்புள்ள காப்பியை இருநூறு ரூபாய் கொடுத்து நவநாகரீக காப்பி கடைகளில் குடிப்பதற்காக தரும்போது வராத சிக்கனம்...

பக்கத்துக்கு தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்,  
வீட்டுக்கே வந்து காய் விற்கும் தாத்தாவிடமும்  
பத்து ரூபாய் கொடுத்து வாங்கையில் வந்து விடுகிறது;  
ரெண்டு ருபாய் குறைத்து கொண்டு எட்டு ரூபாய் தருகிறோம்;

கேட்டால்... சிக்கனமாம்..!

போங்கையா நீங்களும் உங்கள் சிக்கனமும்.......

படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...