Total Pageviews

Wednesday, May 29, 2013

மனக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை தத்துவம்


 


பிறரை தண்டனைக்குள்ளாக்காதீர்கள் !

நீங்களும் தண்டிக்கப்படமாட்டீர்க்ள் !.

பிறரை மன்னியுங்கள்!

நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள் !

உன்னிடத்தில் / உங்களிடத்தில் உதவி கேட்கின்ற எவருக்கும் உங்களிடம் உள்ளதைக் கொடுங்கள்!.

உன்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்பவனிடம் அதைத் திரும்பக் கேட்காதீர்கள்!.

ஏனெனில்,எதுஎடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே அதாவது இந்த பூஉலகில் இருந்தேஎடுக்க ப்பட்டது. எது இன்று உன்னுடையதாக இருக்கின்றதோ, அது நாளை வேறொருவருடையதாகின்றது. எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எது கொடுக்கப்பட்டதோ அதுவும் இங்கிருந்தே கொடுக்கப்பட்டது. இந்த உண்மை தெரியாமல்,  இது என்னுடையது,   இது அவனுடையது என்பது அறியாமையே !

வாழ்க்கை என்றல் என்ன?

வாழ்க்கை நம் கையில் ஒப்படைக்கப்படிருக்கிறதா?  அல்லது அது விதிப்படி நடக்குமா?

நீங்கள் போகும் பாதையில் ஒரு கல் கிடக்கிறது நீங்கள் அதை காலால் உதைத்தால் உங்களுக்கு அடிபட்டு துன்பம் வந்துவிடும் அந்த கல்லை எடுத்து ஒரு சிற்பம் செய்தீர்களானால் அந்த சிற்பத்தின் அழகு உங்கள்ளுக்கு மட்டுமல்லாமல் அதை காண்கிற அனைவருக்கும் இன்பத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கையும் அந்த கல் போன்றதே நீங்கள் அதனுடன் தொடர்புகொல்லாதவரை அது விதிப்படியே நடக்கும் நீங்கள் வாழ்க்கை என்னும் கல்லின் மீது மேற்கொள்ளும் வினையின் தன்மையை பொறுத்தே உங்கள் வாழ்க்கை மாறுபடும் நீங்கள் மேற்கொள்ளும் வினையின் தன்மை நன்மையாக இருக்குமாயின் உங்களுக்கு நன்மை ஏற்படும் தீமையாக இருக்குமாயின் தீமை ஏற்படும்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் மாசற்றவராக எதிலும்  எங்கேயும்  நிறைந்து  இருக்கிறார். யார் ஒருவர் நல்ல ஓழுகத்துடனும், பிறருக்கு கனவிலும் துன்பம் இழைகாதிருப்பவரும், தூய நெறி, நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவரும், தான,  தர்ம, வழிகளைப்பின்பற்றுபவருமே  கடவுளாகிறார். உங்களை சுற்றியுள்ள உலகை கூர்ந்து கவனியுங்கள் பூமியில் பிறக்கிற எந்த ஒரு சிசுவும் மாசற்றுத்தான் பிறக்கிறது அதற்க்கு ஏதும் செய்ய தெரியாது பொய்சொல்ல தெரியாது தவறு என்பதே அந்த சிசுவிடம் இருக்காது ஏனெனில் கடவுள் மாசற்றவர் அவருடைய படைப்பும் அவ்வாறே இருக்கும்,

பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

கொலை, களவு, செய்யாதிருப்பாயாக.

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

உன் தாயையும் தகப்பனையும் கணம் பண்ணுவாயாக.

உன்னிடத்தில் உள்ளவற்றை பாவப்பட்டவருக்கு கொடுப்பாயாக்!

நீங்கள் பிறரிடத்தில் என்ன  எதிர் பார்க்கின்றீகளோ  அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

பிற உயர்களிடத்தில் அன்பாய் இரு.

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடத்த நாம் மாடுகள் போல் இயந்திரதனமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.

நமது கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்பமான வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவருடைய இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம்.

நம் மனதிலிருந்து தான் தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது.

நம் மனம் எப்பொழுது தான் தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால் நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.



No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...