Total Pageviews

Monday, March 13, 2017

அதிகாலை வேளையில் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்வோர் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை

அதிகாலை வேளையில் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்வோர் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

accident.jpg



சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்[35]. சாஃப்ட்வேர் எஞ்சினியரான இவர் வார விடுமுறைக்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாப்பிரெட்டிப்பட்டிக்கு நேற்றுமுன்தினம் காரில் புறப்பட்டார். ராஜ்குமாரின் மனைவி நிரோஷா[30]. மகன் ஆதி[7] ஆகியோரும் காரில் உடன் சென்றனர்.


ராஜ்குமாரின் உறவினரான ராகேஷ் என்பவரும், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் அர்ச்சனா ஆகியோரும் அந்த காரில் சென்றனர். காரை ராகேஷ் ஓட்டி உள்ளார். வேலூர் அருகே பொய்கை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?


இந்த விபத்தில் ராகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராஜ்குமாரின் மனைவி நிரோஷா, மகன் ஆதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த கோர விபத்துக்கு காரை ஓட்டிய ராகேஷ் தூங்கியதே காரணமாக தெரிவிக்கப்படுகிறது.


இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?


வந்த வேகத்தில் கார் கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி சிக்கிக் கொண்டது. அத்துடன், கார் மோதியது தெரியாமலேயே, கன்டெய்னர் லாரி டிரைவர் 200 மீட்டர் வரை ஓட்டி சென்றுள்ளார். பின்னர், பின்னால் கார் மோதியதை அறிந்து லாரியை நிறுத்தியுள்ளார். இந்த கோர விபத்துக்கு காரை ஓட்டிய ராகேஷ் தூங்கியதே காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?


சில நொடிகளில் இரண்டு குடும்பத்தினரையும் இந்த விபத்து சின்னாபின்னபடுத்தி விட்டது. கோடை காலம் பிறந்துவிட்ட நிலையில், விடுமுறையை கழிக்க பலர் இதுபோன்று நீண்ட தூர பயணங்களுக்கு திட்டமிட்டு இருப்பர். விபத்துக்களை தவிர்க்க, சில எளிய வழிமுறைகளை மனதில் வைத்து சென்றால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும்.

இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?



நகர்ப்புறத்தில் இருப்போர், நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்ளும்போது போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, அதிகாலை காலை 3 மணி அல்லது 4 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவதற்கு முடிவு செய்கின்றனர். இது நல்ல திட்டம்தான் என்றாலும், கார் ஓட்டுபவரை யாரும் மனதில் கொள்வதில்லை.



ராஜ்குமாரின் கார் காலை 6 மணிக்கு வேலூர் அருகே விபத்தில் சிக்கியிருக்கிறது. அப்படியென்றால், அவர்கள் 3.30 மணி அல்லது 4 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு, புறப்பட்டதால், அரைகுறை தூக்கத்துடன் ராகேஷ் கார் ஓட்டியதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.



போதிய தூக்கம் இல்லாமல் அல்லது தூங்கி வழிந்து கொண்டு காரை எடுத்து நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது நிச்சயம் உடல் அசதி கூடுதலாகும். அந்த சமயத்தில் தங்களை அறியாமல் சிலர் தூங்கி விடுவதே, இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம். எனவே, போதிய தூக்கம் இல்லாமல் அதிகாலை பயணங்கள் செல்வதை தவிர்க்கவும்.



நாம் நன்றாக தூங்கி எழுந்து உடற்சோர்வு இல்லாமல் சென்றாலும் கூட, விடியற்காலையில் செல்லும் கனரக வாகனங்களின் ஓட்டுனர்களும் இதேபோன்று தூங்கி விடுவதால் பல விபரீதங்கள் நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. எனவே, முடிந்தவரை பகல் வேளையில் பயணத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவும். காலை 6 மணிக்கு பின்னர் நீண்ட தூர பயணங்களை துவங்குவது சிறந்தது.




திருவிழா, உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு சென்றுவிட்டு உடனடியாக திரும்பும்போதும் போதிய தூக்கமின்மை, உடல் சோர்வு காரணமாக சில நொடிகள் கண் சொக்கிவிடும். அதுவும் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துவிடும். எனவே, அதுபோன்ற சமயங்களில் வழியில் உள்ள ஓட்டல்களில் சில மணிநேரம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு பயணத்தை தொடரவும். மல்லுக்கட்டினால் உயிருக்கே உலை வைத்துவிடும்.



குடும்பத்தினர் எல்லோரும் கிளம்பி விட்டார்களே, எனவே, அரைகுறை தூக்கத்துடன் எழுந்து வண்டியை எடுத்து ஓட்டுவதை தவிர்க்கவும். உங்களது உடல்நிலை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவது சிறப்பு. இல்லையெனில், நீண்ட தூர பயணங்களின்போது நன்கு கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் இருந்தால் பரவாயில்லை.

இது மாதிரி விபத்து நடக்காம இருக்க என்ன செய்யணும்?

எப்போதாவது கார் ஓட்டுபவர், புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொண்டவர்களிடம் நெடுஞ்சாலையில் காரை கொடுக்க வேண்டாம். அதேபோன்று, உங்களது காரின் ஓட்டுதல் முறை, உங்களுக்கு அத்துப்படியாக இருக்கும். ஆனால், கார் ஓட்ட தெரிந்தாலும், பிறர் உங்களது காரை ஓட்டும்போது அவர்களுக்கு அந்த காரின் பேலன்ஸ் பிடிபட சற்று கால அவகாசம் எடுக்கும். எனவே, அதிவேகத்தில் ஓட்டுவதை தவிர்க்க சொல்லுங்கள்.




இரவு வேளைகளில் நெடுஞ்சாலை சந்திப்புகளில் கனரக வாகனங்கள் கடக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே, மிதமான வேகத்தில் காரை செலுத்துவதே, இதுபோன்ற சமயங்களில் காரை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். அருகில் சென்று கட்டுப்படுத்துவது மிக மிக கடினம்.




முன்னால் செல்லும் கனரக வாகனங்களை கடக்கும்போது வேகத்தை குறைத்து கவனமாக கடக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் சில வேளைகளில் புலப்படாது. சிலர் அதிவேகத்தில் இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்று, முன்னால் செல்லும் வாகனங்களை கவனிக்காமல் விபத்தில் சிக்கிக் கொண்டுவிடுகின்றனர்.



நள்ளிரவு நேரத்தில் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கார் டிரைவரை அமர்த்திக் கொண்டு செல்வது நலம். இல்லையெனில், நன்கு கார் ஓட்ட தெரிந்த மற்றொருவரை உடன் அழைத்துக் கொண்டு புறப்படுங்கள்.



இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காரை நிறுத்தி 15 நிமிடங்கள் காருக்கு ஓய்வு கொடுக்கவும். அந்த வேளையில், உங்களது உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைக்கும். கார் ஓட்டுபவர் தூங்குவதாக உணர்ந்தால், உடனடியாக காரை நிறுத்தி அவருக்கு ஓய்வு கொடுக்கவும். இந்த எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தால், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

Written By: Saravana Rajan
Published: Monday, March 13, 2017, 14:33 [IST]
THANKS TO ONEINDIA.COM

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...