"நிம்மதி" என்பது கவலை, குழப்பம் அல்லது பயம் இல்லாத மனநிலையைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது.
நிம்மதி என்றால் என்ன?
· மன அமைதி: தேவையற்ற எண்ணங்களையும், அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் தவிர்க்கும் போது மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
· திருப்தி உள்ளதை கொண்டு திருப்தி அடைவது உண்மையான நிம்மதியைத் தரும்.
· ஒவ்வொரு வாழ்க்கை பிரச்சினைகள் தனித்தனி.
· எனவே பலருக்கு அவர்கள் பிரச்சினை தீர்ந்தாலே நிம்மதி தான்.
· பசியால் தவித்தவனுக்கு மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் மன நிம்மதி.
· நோயால் பீடிக்கப்பட்டவனுக்கு அது குணமானால் நிம்மதி.
· சுற்றத்தினரால் மனவேதனைப் பட்டவர்களுக்கு பந்த பாசமற்ற வாழ்க்கை நிம்மதியானது.
· பணக்காரனுக்கு காலையில் எழுந்த உடன், சொத்துகள் தங்கியிருந்தால் நிம்மதி.
· எல்லா தாயாருக்கும் வெளியே சென்ற கணவன், குழந்தைகள் வீடு திரும்பியதும் நிம்மதி.
நிம்மதியான வாழ்க்கை….
1. எதிர்ப்பார்ப்பு இல்லாத வாழ்க்கை!!
2. அன்பான உறவுகள் அமைந்துள்ள வாழ்க்கை!!
3. ஆரோக்கியமான உணவும்! ஆரோக்கியமான உடலும் அமைந்துள்ள வாழ்க்கை!!
4. கடன் இல்லாத வாழ்க்கை!!
5. அடுத்தவரின் உதவியை எதிர்ப்பார்க்காத வாழ்க்கை!!
6. இறைவனை அனுதினமும் நன்றியுடன் வாழ்கின்ற வாழ்க்கை!!
இவையே நிம்மதியான வாழ்க்கை!!
நிம்மதியான வாழ்க்கை தருவது பணமா இல்லை உறவா?
இரண்டுமே இல்லை.
எதிர்பார்ப்பு இல்லாத மனமே நிம்மதியை நிறைவாக தரும்!!
எனவே எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே நிம்மதியாக வாழும் வாழ்க்கை!!
பணமும் உறவும் நிரந்தரம் இல்லாதது. சுயநலம் சார்ந்தது.
பணம் செலவு செய்தால் உறவு இருக்கும். பணம் இருந்தாலும் செலவுகள் செய்ய வில்லை என்றால் உறவுகள் அருகில் இருந்தாலும் பாசம் இருக்காது. பணமே இல்லை என்றால் உறவுகள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.
கண்டிப்பாக ஒரு நாள் அனுபவம் கற்றுக் கொடுக்கும்!!
பணம், நிச்சயமாக, வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கருவியாக இருக்கிறது.
உணவு, உடைகள், வீடு—இவை அனைத்தும் பணத்தின் மூலம் கிடைக்கின்றன. ஆனால், பணம் மட்டுமே தாராளமான ஆனந்தத்தை தராது. கொஞ்சம் பணம் இருந்தாலும், நாம் ஒரு நிலையை அடைந்து விடுவோம். ஆனால் அடுத்து என்ன செய்வது? பணத்தைச் சேமிக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், அல்லது வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று நினைப்போம். இதோ, இது மனிதனை எப்போதும் ஓர் அடைக்கலத்தில் சிக்க வைக்கும்.
ஆனால், நிம்மதி என்பது மிகவும் முக்கியமானது.
பணம் இருந்தாலும், மனதில் அமைதி இல்லையென்றால், அது எந்த பயனும் தராது. நிம்மதியில் வாழ்வது, உள்ளார்ந்த அமைதியோடு, மற்றவரோடு அன்புடன், நேர்மையுடன் பழகும் முறையோடு வாழ்க்கையை அனுபவிப்பதை உணர்த்துகிறது. நிம்மதி பணத்திற்கு அடிப்படையாக இருக்காது; அது உள்ளார்ந்த அமைதியில் இருந்து எழுகின்றது.
நாம் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று தேர்வு செய்யும்போது, பணம் மட்டுமே முக்கியம் அல்ல. பணம் எவ்வளவு தேவை என்பதை நாம் உணர்ந்தாலும், அந்த பணத்தை சம்பாதிக்கும் பயணத்தில் ஏற்படும் மன அமைதி, உடல்நலம், உறவுகளின் நிலை—இவை அனைத்தும் முக்கியமானவை.
முடிவாக, பணமும், நிம்மதியும் சமநிலையாக இருந்தால் தான், நமக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கும்.
பணமும் இல்லை, உறவும் இல்லை. இரண்டுமே நிலையானதில்லை.
சுய ஒழுக்கமும், மனித நேயமும் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கும்.
வாழ்க்கைக்கு தேவை பணம் என்றாலும் நிம்மதி இல்லாமல் பணத்தை மட்டும் வைத்து வாழ்வது பயனில்லை.
இந்த இரண்டுக்கும் மேலாக வாழ்க்கைக்கு தேவையானது உடல் ஆரோக்கியம். அது இல்லாமல் இந்த இரண்டுமே பயன்படாது.
குறையை குறையாக பார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை இருந்தால் எல்லாம் வசப்படும்…வாழ்க்கையில் !
அந்த காலத்திலேயே திருவள்ளுவர் கூறிவிட்டார். "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை " அப்புறம் என்ன? நாம் இந்த உலகில் கௌரவமாக வாழ வேண்டும் என்றால் பணம் தான் உங்களை முன்னிருத்தும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்குமாம். அப்புறம் நாம் மட்டும் என்னவாம்?
கோடி இல்லை இல்லை ஒரு நூறு கோடி இல்லை ஆயிரம் கோடி இருந்தாலும் இன்னும் கோடிகளை தேடி அலைவார்களைப் பாருங்கள். அவர்கள் ஏழு தலைமுறைகளுக்கு சம்பாதிக்க?? அலைகிறார்கள்.
நாம் அன்றாட பிழைப்புக்கு அல்லது நமது உடன் immediate தலைமுறைக்காவது சேர்க்க வேண்டாமா??
இந்த மனிதன் இருக்கிறான் பாருங்கள் என்ன அறிவு. குழந்தையில் இருந்து 17அலலது 18 வரை தனது தாய் தந்தை உழைப்பில் உண்கிறார்கள். அப்புறம் அவனுக்கு ஒரு வாழ்க்கை தன் குடும்பம் பிள்ளை என ஓடி ஓடி அவர்களுக்கும் சம்பாதிக்கிறார்கள்.
ஒருசிலர் நியாயமான முறையில் பணத்தை தேடி தனக்கான வாழக்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
ஒருசிலர் தர்மம் . நியாயம் என்ற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று அலைகிறார்கள்.என்னமோ ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து போல்.
ஈட்டி எட்டும் வரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும் என்பர். அந்த பாதாளம் எது என்பது யாருக்கும் தெரியாது.
கூட்டை விட்டு பறக்காத பறவை இறந்து விடும்.
வில்லை விட்டு புறப்பட்டாத அம்பு ஒன்றும் செய்யாது.
தேங்கிக் கிடக்கும் தண்ணீர் நாற்றம் எடுத்து விடும்
எந்த ஒரு விலங்கு அல்லது பறவை இனமாயினும் தனது குட்டி/ குஞாசுக்கு வளரும் வரை தான் இறை தேடி வந்து ஊட்டும். பின்னர் அவைகள் தனக்கான இரையை தாங்களே தேடிக் கொள்ளும்.அப்படி போகவில்லை என்றால் அவைகள் இறக்க நேரிடும்.
எந்த ஒரு நபருக்கும் தனது வாழ்க்கையை பற்றிய தெளிவான சிந்தனை/ அறிவு வேண்டும். தன் இலக்கு என்ன ? அதற்கான முயற்சி இவைகளை பற்றிய ஒரு புரிதல் வேண்டும்.
எதுவும் இன்றி நானும் சம்பாதிக்கிறேன் பேர்வழி என்பது போல் காற்று வீசும் காலத்தில் மாவு விற்கவும் மழை பெய்யும் காலத்தில் உப்பு விற்க போவதைப் போல்.
எந்த தொழில்களில் உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறதோ அதை தேடிப் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment