Total Pageviews

Tuesday, November 3, 2026

இன்றைய காலத்தில் மணப்பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது? இரு வீட்டரின் எதிர்பார்ப்பு அதிகமுள்ளதா?

 

மணப்பெண்கள் அரிதாகவில்லை.

அவர்களின் எதிர் பார்ப்புத் தான் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் கவலைப் படவேண்டாம் உலக அளவில் பெண்கள் சதவிகிதம் அதிகமாக உள்ள நாடுகளான ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ள தயாராகி விடுங்கள். இப்போது உள்ள தமிழ் பெண்களுக்கு

  1. சமைக்கத் தெரியாது
  2. வீட்டை சுத்தமாக வைத்திருக்க தெரியாது.
  3. ஆனால் மாப்பிள்ளைக்கு சொந்தமா வீடு இருக்கணும்
  4. பேங்கில் 10 லட்சம் பேலன்ஸ் இருக்கனுமா, எதற்கெனில் வெளிநாடு ஹனிமூன் சென்றுவர.
  5. இரண்டு பேரும் தானே போறீங்க அப்ப உன்னிடம் 10 லட்சம் இருக்கான்னு கேட்டா, அவுக இரண்டு கையையும் வீசிகிட்டு வருவாகளாம். ஆண்தான் செலவு செய்யனுமாம்.
  6. திருமணம் ஆனதும் தனிகுனித்தனம் போகவேண்டுமாம்.
  7. ஆணின் அப்பா, அம்மா, சகோதரிகள் அவனுடம் பேசக்கூடாது.
  8. யப்பா, இன்னும் என்னென்னவோ நிபந்தனைகள் விதிக்கப் படுகின்றது.
  9. இருவீட்டார் எதிர்பார்ப்பை விட, பெண்களின் எதிர்பார்ப்பு தான் அதிகம் உள்ளது.
  10. ஆண் நல்ல குணமா, குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் வருமானம், வசதி உள்ளதா என பார்ப்பதை விட்டு விட்டார்கள். அதற்கு பதில் பேங்பேலன்ஸ் இருக்கா, அப்பா, அம்மா இல்லாமல் இருக்காங்களா?
  11. ஒரே பையனா? என தேடுகின்றார்கள்.
  12. இதெல்லாம் வேலைக்காவாது நைனா, பேசாம வெளிநாட்டு பெண்ணையே தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள்.
  13. சும்மா சாதி, மதம் என கதைச்சிக்கிட்டு இருக்காதீங்க. 

    Nageshwaran

செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்!

1. எந்தத் தலைபோகும் அவசரமாக இருந்தாலும் – ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையைச் செய்யுங்கள்.

2. பிரச்னையை முழுவதும் புரிந்து கொண்ட பின் செயல்படத் துவங்கவும்.

பிரச்னை எதுவாக இருந்தாலும் – அதை முதலில் புரிந்துகொள்ளவும்.

அடுத்தது அலசி ஆராயவும்.

கடைசியில் பிரச்னை முடிச்சை அவிழ்க்கவும்.

(Understand the problem – Analyse the problem – Attack the problem)

3. காது கொடுத்துக் கேளுங்கள்.

எதிராளி – (உங்கள் செல்ல பப்லுக்குட்டியோ... உங்கள் ஜெனரல் மானேஜரா) அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லட்டும். குறுக்கே பேசாமல் உன்னிப்பாக கவனியுங்கள். கேட்பதை மனதில் வாங்கிக்கொண்டு பிறகு பதில் பேசலாம்.

4. கேள்வி கேளுங்கள்.

மிகவும் அற்புதமாகத் தோன்றும் சந்தேகத்தைக் கூட உதாசீனப்படுத்தாமல் விடை காண முயலவும், ஒர சிறிய கேள்வி வரவழைக்கும் விடைகளால் உங்கள் பிரச்னைக்கு முற்றிலும் ஒரு புதிய பரிமாணமே கிடைத்தாலும் கிடைக்கும்.

5. யாரொருவருடன் பேசும்போதும் அவருடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அடுத்தவர் உங்களிடம் பேசும்போதும் அவர் கண்களையும் முகபாவங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பது முக்கியம். இதனால் நீங்கள் எதிராளியின் நம்பிக்கையை எளிதில் பெறுவீர்கள்.

6. மாறுதல்களை எளிதாக ஏற்றுக்கொள்ளுங்கள். நேற்று சரியான முறை என்று நாம் நினைப்பது இன்று மாறிவிடுகிறது. திறந்த மனதுடன் புதிய முறைகளை வரவேற்பது உங்கள் வெற்றியைச் சுலபமாக்கும்.

7. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நம்மில் யாருமே ‘சூப்பர் பர்ஃபெக்ட்’ இல்லை. தவறைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள முற்பட்டால் யாருமே உங்களைத் தாழ்வாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உங்கள் மதிப்பு உயரக் கூடும்.

8. சொல்ல வந்ததை எளிமையாகச் சொல்லுங்கள். சுற்றி வளைத்த, ஜாடை மாடை பூடகப் பேச்சோ, உங்கள் மொழிப்புலமையை வெளிக்காட்ட உதவும் பல்லை உடைக்கும் சொற்களோ தேவையில்லை.

ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய எளிய முறையில் பேசுங்கள். அதற்குத்தான் எதிர்பார்த்த பலன் இருக்கும்.

9. அமைதியாக இருங்கள். வீட்டிலோ - வெளியிலோ – எங்குதான் பிரச்னைகளில்லை? அதுவும் நம் ரத்தக் கொதிப்பை எகிற வைக்கும் விஷயங்களுக்குக் குறைவா, என்ன?

சட்டென்று பதிலடி (வார்த்தைகளால்தான்!) கொடுக்கும் முன் ஒரு நிமிடம் ஆழமாக மூச்சிழுங்கள். பிறகு சொல்ல வேண்டியதை அழுத்தமாகவும் நிதானமாகவும் யோசித்துச் சொல்லுங்கள்.

படபடப்பாய் பொரிந்து தள்ளுவது சுலபம். ஆனால் அது பிரச்னையை திசை மாற்றிவிடும். அதனால் நிகர நஷ்டம் உங்களுக்குத்தான்.

10. கடைசியாக... அடிக்கடி புன்னகையுங்கள்.

காசா பணமா செலவு? ஒரு சிறு புன்னகை பல சிக்கல்களை அவிழ்க்கும். பாதைகளை சீராக்கும். உங்கள் முகத்தையும் கூட இன்னும் அழகாக ஆக்கும்!

நன்றி-மங்கையர் மலர்

விவாகரத்து !

 

நீண்ட !  நான்கு ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு, எங்கள் விவாகரத்து முடிவுக்கு வந்தது;

நீதிமன்றத்திலிருந்து விவாகரத்து ஆவணங்களைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தபோது, நான் ஒரு காட்சியைக் கண்டேன்.

💔 நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த தேநீர் கடை ஒன்றின் அருகே, என் கணவர் தனியாக அமர்ந்திருந்தார்; ஏன் என்று தெரியவில்லை, நான் அவரிடம் சென்று அவருக்கு அருகில் அமர்ந்தேன். ☕

என்னிடம் கேட்காமலேயே, அவர் தேநீர் கடைக்காரரிடம் இரண்டு கோப்பை காட்டமான இஞ்சித் தேநீர் போடுமாறு கூறினார்; எனக்கு இஞ்சித் தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும்

என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

சிறிது நேரம் கழித்து, நான் அவருக்கு இன்னும் நெருக்கமாக நகர்ந்து அமர்ந்தேன்; நீண்ட அமைதிக்குப் பிறகு, "நீங்கள் தினமும் மருந்துகளைச் சரியாகச் சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்டேன். 🫖

அவர் ஒன்றும் சொல்லவில்லை; தலையை மட்டும் அசைத்தார்; மீண்டும் எங்களுக்கிடையே மௌனம் சூழ்ந்தது. சிறிது நேரம் கழித்து,

மருத்துவர் தனக்கு இன்னும் அதிகபட்சம் ஓராண்டு காலம் மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்; அடுத்த வாரம் முதல் அவருக்குக் கீமோதெரபி சிகிச்சை தொடங்க விருக்கிறது என்று சொன்னார். 😢

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், நான் ஏதோ ஒரு அதிர்ச்சி நிலைக்குள் — ஒருவித மயக்க நிலைக்குள் — சென்றது போல உணர்ந்தேன்; நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடந்த சண்டைகள், கோபங்கள், கண்ணீர் எல்லாம் ஒரு நொடியில் அர்த்த மற்றதாகிப் போனது.

🍂 அவர், "உனக்கு எட்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் என்னிடம் இப்போது அவ்வளவு பணம் இல்லை" என்றார். 🍂

"அதற்குப் பதிலாக ரோஹினியில் உள்ள பிளாட்டை நீ எடுத்துக் கொள்ளேன்; தங்க நகைகளும் உன்னிடமே இருக்கட்டும் — பிட்டோவின் திருமணத்திற்கு அவை பயன்படும்.

என் வீட்டையும் உன் பெயருக்கு மாற்றித் தருகிறேன்; நான் இல்லாத பிறகு, அதுவும் உனக்குத்தான்" என்று அவர் சொன்ன போது, என் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. 💍🏠

நான், "போதும்...!" என்று கூறினேன்; "இன்னொரு வார்த்தை கூட பேசாதீர்கள் — நான் எங்கும் போகப்போவதில்லை; உங்களை விட்டு விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன்!" என்று கண்ணீருடன் கத்தினேன்.

"எல்லாம் நீங்கள் நினைத்தபடியே நடந்துவிடும் என்று எப்படி நினைக்கிறீர்கள்?" என்று கேட்டு, நான் கட்டுப்படுத்த முடியாமல் உரக்க அழத் தொடங்கினேன். 😭

என் கண்ணீரைப் பார்த்ததும், என் கணவரும் உடைந்து போய், விம்மி விம்மி அழத் தொடங்கினார்; "தயவுசெய்து என்னை மட்டும் தனியாக விட்டுச் சென்றுவிடாதே" என்று கெஞ்சினார், "நான் இப்போதே இறந்துவிட விரும்பவில்லை." 🤔 அவருடைய கண்ணீரைப் பார்த்ததும், நான் அவரை என் அணைப்பில் சேர்த்துக் கொண்டேன்; அப்பொழுதே, என் வழியில் செல்வதற்குப் பதிலாக, அவருடன் நேராக என் மாமனார்- மாமியார் வீட்டிற்கே சென்று விட்டேன். ☺️

அந்தத் தேநீர் கடையின் இஞ்சித் தேநீர் ஆறிப்போனாலும், அந்த நிமிடம் எங்கள் இருவரின் இதயங்களும் ஒன்றாக இணைந்தன; விவாகரத்து ஆவணங்கள் எங்கள் கைகளில் இருந்தன,

ஆனால் எங்கள் உறவு அந்த ஆவணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை அன்று உணர்ந்தேன். அன்பு என்பது சண்டையில்லாத வாழ்க்கை அல்ல, சண்டைக்குப் பிறகும் விட்டுவிட மனமில்லாத பிடிவாதம்;

என் கணவரின் நோய் எங்களைப் பிரிக்க முடியவில்லை, மாறாக அது எங்களை மீண்டும் இணைத்தது.

Preeti

இன்றைய காலத்தில் மணப்பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது? இரு வீட்டரின் எதிர்பார்ப்பு அதிகமுள்ளதா?

  மணப்பெண்கள் அரிதாகவில்லை. அவர்களின் எதிர் பார்ப்புத் தான் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் கவலைப் படவேண்டாம் உலக அளவில் பெண்கள் சதவிகிதம் அதி...