Total Pageviews

Friday, October 18, 2024

#"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது ? கவனம் தேவை !

 கவனம் தேவை !  விழிப்புணர்வு பதிவு !

சிவகங்கையை சேர்ந்த ஒருவருக்கு பத்து நாட்களுக்கு முன்பு தபாலில் ஒரு ATM கார்டு வந்திருக்கிறது. பிரித்து பார்த்தால் SBI மேலூர் கிளையில் இருந்து இவரது பெயர் விலாசமிட்ட கார்டு. மேலூரில் SBI பேங்க் எந்தப்பக்கம் இருக்கிறது என்பதுகூட தெரியாதவருக்கு எப்படி இவர் பெயரில் ATM கார்டு வந்தது?

பலவித சிந்தனைகளோடு மேலூர் போகிறார். SBI கிளை மேனேஜரை சந்தித்து நடந்ததை கூறுகிறார். அவரோ அங்கிருந்த ரெக்கார்டுகளை பரிசோதித்தபின் போன மாதம் நீங்க தான் இங்கு வந்து கணக்கு தொடங்கியிருக்கிறீர்கள். இதோ உங்க போட்டோ, கையெழுத்து என்று ரெக்கார்டுகளை காட்டவும் இவருக்கு அதிர்ச்சி. அச்சு அசலாக இவரது கையெழுத்து மற்றும் இவரது போட்டோ. தான் இங்கு வரவேயில்லை, கணக்கும் தொடங்கவில்லை. வேண்டுமானால் உங்கள் CCT கேமிராவை சோதித்து பாருங்கள் என்றபோது... அந்த மேனேஜரின் முகத்தில் சிறு அச்சம் பரவியிருக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் ஊகிக்கிறார். மேலும் இந்த போலியான கணக்கில் ஆயிரம் ரூபாய் கட்டி கணக்கு தொடங்கியிருக்கிறார்கள்.

உடனே நம்மவர் இந்த கணக்கை உடனடியாக முடிக்கும்படி கூறவும், அந்த மேனேஜரும் சட்டு புட்டென அதற்கான நடவடிக்கை எடுத்து கணக்கை குளோஸ் செய்து ரூ. 600 ஐ மட்டும் கொடுத்து அவசர அவசரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.


(கணக்கு தொடங்கி மூன்று மாதம் முடிந்தால் தான் முழுப்பணமும் கொடுப்பார்களாம்.)

இதை யார் இவ்வளவு மெனக்கெட்டு செய்திருப்பார்கள்?. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?.  இதுபோன்ற சந்தேகங்களுடன் பிரபல வக்கீலுடன் கலந்து பேசியபோது பல அதிர்ச்சியான செய்திகளை அறிய முடிந்தது!.

வழக்கறிஞர் கூறியதாவது.


இவரது ஆதார் காப்பியையும், அதிலிருந்த கையெழுத்தையும்  போர்ஜரி நபர் கைப்பற்றியதோடுஇவரது புகைப்படத்தையும் சேகரித்திருக்கிறார். பின் அந்த வங்கியில் இருக்கும் யாரோ ஒரு அதிகாரியின் கூட்டு முயற்சியோடு இந்த கணக்கு தொடங்கப் பட்டிருக்க வேண்டும். வங்கியில் இருக்கும் அந்த கருப்பு ஆடுதான் இங்கே மிக முக்கியமான குற்றவாளி. இந்த கணக்கின் மூலம் சிவில் 100% சரியாக இருந்தால், பிராப்பர்ட்டி செக்யூரிட்டி இல்லாமல் குறைந்தது ரூ. ஐந்து  லட்சம் வரை கடன் பெறமுடியும். அப்படி வாங்கிய கடனை ஒரு தவணை கூட கட்ட மாட்டார்கள். பின் இவருக்கு தகவல் வரும்போதுதான் இந்த விவரங்களே தெரியவரும்.

இப்போது இவர் இந்த வங்கி கணக்கை முடிக்காமல் இருந்திருந்தால் இந்த வங்கியின் மீது மூன்று வகையான வழக்கு தொடர்ந்திருக்க முடியும். மிகப்பெரிய தொகையை நஷ்டஈடாக பெற்றிருக்க முடியும். இதையெல்லாம் தெரிந்ததால்தான் இவரது வங்கி கணக்கை உடனடியாக முடித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது போன்ற தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது ஆதார் ஜெராக்ஸ் காப்பி , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை எங்கும் விட்டு வைக்காதீர்கள். ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் போது கவனமாக இருப்பதோடு, போட்டோ ஸ்டூடியோவில் கனிணியில் சேகரிக்கும்போது டெலிட் செய்யும்படி வலியுறுத்தல் அவசியம். குறிப்பாக உங்கள் கையொப்பம் இட்ட பேப்பர்களை வெளியிடங்களில் தவற விட்டுவிடாதீர்கள் என்றார்.

"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது பாருங்கள். எதில்தான் கவனம் வைப்பது? யாரைத்தான் நம்புவது?. இறைவா மக்களை காப்பாற்று."!

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...