ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தவறாமல் தெரியும்
காட்சியில், கருவேல மரங்களுக்கு முதலிடம்
உண்டு. கல்லூரிகள், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துமவனைகள், கலெக்டர் அலுவலகம், கண்மாய் நீர்
நிலைகள், புறம்போக்கு மற்றும் பட்டா
நிலங்களில் பாகுபாடின்றி படர்ந்து வளரும் உரிமை கருவேல மரங்களுக்கு மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் வறட்சி மாவட்டமாக முத்திரை குத்தப்பட்ட
நாளிலிருந்து, அதற்கான முக்கிய பங்காக கருவேல
மரங்களே இருந்து வருகின்றன.
பயனற்ற தாவரமாக
கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக
பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர்.
அந்த அளவுக்கு
இங்கு கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால்
ஏற்படும் பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு
வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு
பேருதவியாக இருப்பவை இந்த கருவேல மரங்களே. அதன்
பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டங்கள், எப்படி மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு:
கருவேல மரங்களின் இலை,
காய், விதை போன்றவை எந்த
உயிரினத்திற்கும் பயன்படாதவை.
இம்மரத்தின்
நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில்
கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை
விஷமாக மாற்றும் தன்மை கொண்டது.
அதே நேரத்தில் இவை
முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன்
மீது எந்த பறவையும் கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் (ஆடு, மாடுகள் தவிர) அனைத்தும், கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக
புறக்கணித்து வருகின்றன.
இதை அறியாமல்
மனிதர்கள் தான், தற்போது கருவேல மரங்களின்
பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும்
விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.
ஆமோதித்தது அறிவியல்:
கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என
நினைப்பவர்களுக்கு, அவற்றின் ஆபத்தை அறிவியலும்
உணர்த்தியுள்ளது. கருவேல மரங்கள் ஆக்சிஜனை மிக
குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது.
அதே நேரத்தில்
கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற காற்று
மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு
தன்மைக்கு மாறுகிறது என்றே கூறலாம்.
அந்த அளவுக்கு
காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல்
ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலாகும். அதன்
பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ
வைப்பதற்கும் சமமாகும். இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி
நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும்
வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள்
மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களும்
ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில்
இது குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.
கொடூரமும்,
கோரமும்:
பட்டா, புறம்போக்கு நிலங்களில்
கம்பீரமாய் காட்சி தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே
கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் செய்யும்
வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை.
எந்த வறட்சியிலும்
வளரக்கூடிய தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை
இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது
இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம்
அழைக்கிறோம். நமது நீரை உறிஞ்சி
வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல
மரங்களை என்னவென்று அழைப்பது?
நிலத்தடி நீரை
முடிந்த வரை இவை உறிஞ்சி விடுவதால்,
பூமி தானாகவே
வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது
பழியை போட்டு, பகைத்து வருகிறோம். கருவேல மரத்தின் இந்த
கொடூரம், தமிழகத்தில் தென்
மாவட்டங்களில்தான் அதிகம் அரங்கேறி வருகிறது.
காற்றையும் விட்டுவைக்கவில்லை:
நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன்
நிறைவடைவதில்லை. தன்னை சுற்றி தழுவி வரும்
காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், நிலையானதாகவும்
மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில்
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில்
காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக அளவில்
உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை
நாமே வளர்த்து வருகிறோம் என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள்
காற்றையும் விட்டு வைக்கவில்லை.
பஞ்சபூதங்களையும்
ஏதாவது ஒரு வகையில் பதம் பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள்
விரைவில் வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை
பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய விதையே இந்த
கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை
உறுதி செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் இந்த அளவு
கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில்
ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.
"வளர்ப்போம்'
கோஷத்தில்
மாற்றம்!:
உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு
மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள்
எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை
மட்டும் அழியுங்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை
களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட
விருப்பமில்லை,' என, நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது
முன்வாருங்கள். தென்மாவட்டங்களில் மரம் நடுவது
அவசியம் என்றாலும், அதே அளவுக்கு கருவேல மரங்களை
அகற்ற வேண்டியதும் அவசியமாகும்.
அந்த
வகையில் "மரங்களை வளர்ப்போம்” கோஷத்தில், "கருவேல மரங்களை
அகற்றுவோம்” என்ற, கோஷமும் இணைக்கப்பட
வேண்டும்!.
வெளிநாட்டில் ‘கெட் அவுட்’:
உலக ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து
வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை
வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல்
பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள மரங்கள் குறித்த பட்டியல்
குறிப்பிடப்பட்டிருக்கும்,
அதில் முதலிடம்
நம்ம ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது
மட்டும் போதாது, அவர்களின் செயலையும்
கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும்
கருவேல மரங்கள், வீட்டின் வேலிகளாக கருவேல
மரங்கள், என, முழு புழக்கத்தில்
உள்ளனர். வெளிநாடுகளில் "கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு
இங்கு "வெல்கம்' கூறி, நமக்கு நாமே வேட்டு
வைக்கிறோம்.
கேரள குளுமைக்கு காரணம் என்ன?:
ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டவாசிகள்; கோடை சுற்றுலாவுக்கு
கொடைக்கானல், ஊட்டி அல்லது கேரளாவுக்கு
செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம்
இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை
எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த
விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். இதனால் அங்கு கருவேல மரங்களை
காணமுடியாது. அதேபோல் தமிழகத்திலுள்ள கருவேல
மரங்களை அகற்றினால், நமது மாநிலமும் கேரளவின்
பொலிவுக்கு திரும்பும். கடலோர மாவட்டமாக ராமநாதபுரம்
இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை
என்றால், அதற்கு காரணம் கருவேல மரங்களின்
தலையீடே ஆகும்.
காசு செய்யும் வேலை:
உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை
தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும்
கருவேல மரங்களை வளர்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், விவசாயிகள் பலரும் கருவேல
மரங்களை விரும்புகின்றனர்.
எந்த செலவும்
இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும்
வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன. லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை
அறிவதில்லை. கரி மூட்டம் போட்டு மேலும்
புகையை கிளப்பி, காற்றை
மாசுபடுத்துகின்றனர். இருந்தும் கெடுத்தது போதா
தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும்
வேலையை கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் கருவேல
மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ஆண்டு கணக்கில்
வளரச்செய்து, அறுவடைக்கு காத்திருக்கும்
பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர்.
வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...:
தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள்
வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் இந்த
மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை
பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப
வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை
அதிகாரிகளை தொடர்பு கொண்டு,
தேவையான
மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம்.
பிற மாவட்டங்களில்
எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை
தேர்வு செய்து நட, மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர
வேண்டும்.
கருவேல மரங்கள் சார்ந்த தொழிலுக்கு தேவை தடை:
தென் மாவட்டங்களில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடந்து
வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய
விசயம் அல்ல. விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல
மரங்களின் பாகங்களை பிரித்து விற்பணை செய்கின்றனர். தனிநபர் லாபத்திற்காக ஒட்டு
மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி
மறுக்க வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு
ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து
வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு
வழிகாட்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட
ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக
கூறுகின்றனர். ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை
பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு பாதிப்புகள்
வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள்
தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...: வறட்சி, பின்தங்கிய மாவட்டம் என
தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள்,
எதனால் இந்நிலையில்
உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள தம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும்
தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த
கருவேல மரங்களை ஏலம் எடுப்பது,
மற்றும் விற்பதில்
தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள்
பிரதிநிதிகள் விரும்புகின்றனர்.
நம்மை நாமே காக்க
வேண்டிய கட்டாயம் இருப்பதால்,
பொதுமக்களே இவற்றை
ஒழிக்க முன்வர வேண்டும்.
ஆளுக்கு ஒரு கருவேல மரத்தை வெட்டி அழிப்போம்!,
பயனுள்ள இதர பல நல்ல மரக்க்கன்றுகளை நடுவோம்!.
நன்றி:
கருவேல மரம் தொடர்பான இந்த ஆச்சரியமான தகவலை அறிய உதவிய
செய்தித்தாள்கள்,
புத்தகங்கள், இ-மெயில்
மற்றும் இணைய தளங்களுக்கு நன்றி.
த.
சரவணன்
கல்பாக்கம்
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
No comments:
Post a Comment