Total Pageviews

Wednesday, May 16, 2012

இந்திய ஜனாதிபதி ஆவதற்கான தகுதி


* இந்தியக் குடிமகனாக, 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்பவராக இருக்கக் கூடாது.

* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

* டெபாசிட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்.

ஜனாதிபதியின் அதிகாரம்

* லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியை, ஆட்சியமைக்க (பிரதமராக பதவியேற்க) அழைப்பது,

* பிரதமரின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சர்களை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது, அதில் உரையாற்றுவது இவரது பணிகள்.

* பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகும்.

* பிரதமரின் அறிவுரைப்படி, மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதர்கள் ஆகியவற்றை நியமித்தல்.

* அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

* சுப்ரீம் கோர்ட்டின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கும்; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது.

மொத்த ஓட்டு எவ்வளவு: ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்பு = (எம்.எல்.ஏ.,க்கள் + எம்.பி.,க்களின் ஓட்டு) மொத்த ஓட்டுகள் = 10,98,882 (5,49,474 + 5,49,408). இதில் “மெஜாரிட்டி’ பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார்.

எம்.எல்.ஏ., ஓட்டுகள்: ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு எத்தனை ஓட்டு என்பது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
மாநிலத்தின் மக்கள்தொகை

= ——————————————-
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை * 1000

விதி 52 (2)ன் படி, “1971 சென்செஸ்’ மக்கள்தொகை தான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது. (உதாரணமாக) தமிழகத்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர். எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 234. இதன் படி 4,11,99,168/ (234*1000)= 176. ஒரு எம்.எல்.ஏ., வுக்கு 176 ஓட்டு. அதன்படி தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234 * 176) 41,184. இதன்படி அனைத்து மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5,49,474.
எம்.பி., ஓட்டுகள்

அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு
————————————————-

மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை

இதன் படி 5,49,474/776 = 708. இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு 
மதிப்பு 708. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708) 5,49, 408


எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

 

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.



 

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...