Total Pageviews

Monday, July 11, 2022

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

 உணவின் சுவையை அதிகரிக்க நாம் சேர்க்கும் ஓர் பொருள் தான் உப்பு. ஆனால் நிபுணர்கள், அளவுக்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்து உட்கொண்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று கூறுகின்றனர்.

 உடலில் உள்ள திரவ அளவை கட்டுப்படுத்த, சிறிய அளவில் உப்பை சேர்த்தால் போதும். அளவுக்கு அதிகமாக உப்பை சேர்த்தால், இரத்த நாளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அதனால் தமனிகளில் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு வந்தால், அதனால் இதய நோய், உடல் பருமன், அதிகப்படியான டென்சன், பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.

 எனவே தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களை, உணவில் உப்பை சேர்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர்.

இங்கு உடலில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தாலேயே உடலில் உள்ள உப்பை வெளியேற்றிவிடலாம்.

பீன்ஸ் !

பீன்ஸ் புரோட்டீன் உணவுகளை அதிகம் சேர்த்து வந்தால், உடலில் இருந்து உப்புச்சத்தின் அளவு குறையும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களின் உணவில் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள உணவுகளைச் சேர்ப்பது நல்லது.

  தயிர்! தயிர்!

  தயிரை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும், உடலில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்றலாம். ஏனெனில் தயிரிலும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

 மீன்! மீன்!

 


மீனை உட்கொண்டு வந்தால், அதில் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பும் குறையும். எனவே சால்மன் மற்றும் சூரை மீனை மட்டும் உட்கொள்ளுங்கள்.

 வேக வைத்த உருளைக்கிழங்கு

  வேக வைத்த உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் தோலில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை வேக வைத்து உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உப்பு குறையும்.

  உலர் திராட்சை

 உலர் திராட்சை உலர் திராட்சையிலும் பொட்டாசியம் வளமாக உள்ளதால், இதனை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், உடலில் உப்பு அதிகம் சேர்வதைத் தடுக்கலாம். உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட் உலர்ந்த ஆப்ரிக்காட்டிலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் ஒரு உலர்ந்த ஆப்ரிக்காட்டை உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

 வாழைப்பழம்

 


வாழைப்பழம் வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகள் நார்ச்சத்துள்ள உணவுகள் ஓட்ஸ், நார்ச்சத்துள்ள காய்கறிகள், கோதுமை பிரட் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், அதிகப்படியான உப்பை உடலில் இருந்து வெளியேற்றலாம்.

 மேலும் இந்த உணவுப் பொருட்கள் உடலின் மெட்டபாலிச அளவை அதிகமாக பராமரிக்கும். உப்பை சேர்க்க வேண்டாம் உப்பை சேர்க்க வேண்டாம் முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரத்த அழுத்தம் வரக்கூடாதெனில் உப்பை அதிகமாக உணவில் சேர்க்காதீர்கள்.

 

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...