Total Pageviews

Tuesday, June 14, 2016

வாழ்க்கை !

 
வாழ்க்கை 
 

ஒரு கிராமத்தில் வசித்து வந்த
ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன்
கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]

#கடவுள் :
"வா மகனே....
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."

#மனிதன் :
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?"

#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."

#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."

#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?"

#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது.."

#மனிதன் :
அப்படியானால்,
"என்னுடைய நினைவுகளா?"

#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."

#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"

#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...."

#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய
குடும்பமும் நண்பர்களுமா?"

#கடவுள் :
"மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...."

#மனிதன் :
"அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா?"

#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும்
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்...."

#மனிதன் :
"என் உடலா?"

#கடவுள் :
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."

#மனிதன் :
"என் ஆன்மா?"

#கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல...,
அது என்னுடையது......."

●மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன்,
காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய
கடவுளிடம்,
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,

#கடவுள் சொல்கிறார்,

"அதுதான் உண்மை..
நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..

வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வதுடன்
நல்ல செயல்களை மட்டும் செய்..

எல்லாமே உன்னுடையது என்று
நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்

அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது●

♡வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும் ஒழுக்கத்துடன்🙏
சந்தோஷமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...