Total Pageviews

Thursday, June 30, 2016

மலச்சிக்கல், மூல வியாதி, உடல் சூடு தணிய :

மலச்சிக்கல், மூல வியாதி தீர துத்திக் கீரை,துத்தி இலை :

துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக் கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மலச்சிக்கல் தீர :

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
 
மூல வியாதி குணமாக :

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
 
உடல் சூடு தணிய :
 
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
 
வெப்பக்கட்டி குணமாக :
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல் ஈறு நோய் குணமாக :

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற :

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி :

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

மற்ற கீரைகளைக் கடைவது போல துத்திக் கீரையையும் பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து, கடைந்து சாப்பிடலாம். துத்திக் கீரையைத் தினமும் ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் எந்தப் பிணியும் அணுகாது. தேவையான சக்தியும் கிடைத்து விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் மேற்கண்ட பிணிகளில் இருந்து நிவாரணம் அடையலாம்.

துத்திக் கீரையை மருந்தாகத் தயாரித்துச் சாப்பிட்டால் முழுமையான நிவாரணம் பெறலாம்.
துத்தி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து கஷாயம் தயாரித்து, இதில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேகச்சூடு தணியும்.

துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவு சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.

துத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டாலும், துத்தி இலையைக் காய விட்டு அரைத்துப் போட்டாலும் சில தினங்கள் உபயோகத்தில் பருக்கள் மறைந்துவிடும். துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஆசனவாயில் வைத்துக் கட்டினால் மூலக் கட்டிகள் உடைந்து மூல ரணங்கள் ஆறிவிடும். மூல நோய் அகன்று விடும். பால்துத்தியை தண்ணீர் விடாமல் அரைத்து வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்டினால் காயங்கள் விரைவில் ஆறிவிடும். பால்துத்தியின் அடையாளம் காண பால்துத்திக்காயின் மேல் தண்ணீர் தெளித்தால் வெடிக்கும்.


Thanks to Viswanathan 

1 comment:

  1. சிறந்த வழிகாட்டல்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...