Total Pageviews

Sunday, July 3, 2016

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

முருங்கையை நட்டவன் வெறுங் கையோடு போவான்!

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது.


இவைகள்  அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவில் பயன் படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள்

ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?.....

1 comment:

  1. முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் விளக்கம் நன்று

    ReplyDelete

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...