Total Pageviews

Monday, July 11, 2016

உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..




மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன்,  அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, 

" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
 
வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.
 
தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "
 
என்னை உற்று நோக்கியவராக,
 
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...