Total Pageviews

Tuesday, July 5, 2016

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...!



1) இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்......!

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள். எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக்கொண்டே செல்லுங்கள்......!

( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்......!

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால்,  அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காகதிரு திருவென முழிக்க கூடாது...பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள். தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்......!

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். தயவு செய்து சந்தேகப்படும் நபரை, முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்......!

6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ்
செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும்
தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள் ......!

7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே.. என்று, நீங்களும் அது போல இருக்க ஆசைபட வேண்டாம்.

8.உங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளுங்கள். அதன்படி நடந்தால், ஒருபோதும் பிரச்சனை வராது.

9.தனியே இருக்கும் நேரத்தில் என்னை பாதுகாக்க என்னைவிட, சிறந்தவர் யாரும் கிடையாது என்ற, தைரிய நோக்கம் கொள்ளவேண்டும்.

10. உங்களை தாக்குபவரை, திரும்ப தாக்கும் அளவு இல்லாவிட்டாலும், தடுக்கும் அளவிற்க்காவது, தைரியம் வேண்டும். ஒருபோதும், கண்ணில் பயத்தையும், உடம்பில் பதட்டத்தையும்காட்டிவிடக் கூடாது...!

👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽

1 comment:

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...