Total Pageviews

Saturday, June 24, 2023

கடன் என்பது காலை சுற்றிய பாம்பு !

கடன் இல்லை என்றால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்:

கடன் கொடுக்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால்  சிக்கல் உங்களு க்குத்தான்! .

1. குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம்; கைமாற்று, வட்டியுடனோ வட்டி இல்லாமலோ திருப்பித் தர வேண்டியது.



2.  கடந்த காலத்தில் நீங்கள் எப்போதாவது ஒரு நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ நிதி உதவி அளித்திருக்கிறீர்களா, இப்போது நீங்கள் கொடுத்த பணத்தை உங்களால் மீட்க முடியவில்லையா?உங்கள் பணத்தை திரும்பப் பெற நீங்கள் கடுமையாக முயற்சித்திருக்கலாம், ஆனால் பணத்திற்கு பதிலாக தவறான வாக்குறுதிகளை மட்டுமே பெறுவீர்கள் !

3.       உங்கள் நல்லெண்ணத்தால் நீங்கள் அந்த நபருக்கு கடன் கொடுக்கிறீர்கள்.

 

  1. எனவே கடனாளிகள்  வாக்குறுதியளித்தபடி பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். நன்றியுணர்வு எதிர்பார்க்கப்பட்டால், அது நீட்டிக்கப்பட வேண்டும்.


  1. உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள். ஒருவர் உறவை மட்டும் கெடுத்துக் கொள்வார்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடலையொத்து  கடனாளிகள் கலங்குவதில்லை.

கடனாளிகளும் கடனை திருப்பித் தராமல் பல மோசடி உத்திகளைக் கையாண்டனர். 

பழைய பழமொழி சொல்வது போல், கடனை அடைக்க கடன் வாங்குபவர்,  கடன் வாங்கி கடன் கொடுத்தார்   நாசமாகிறார்.

கடனைத் திரும்பித்தரும் வரை கடன் பட்டவரை விட கடனைக் கொடுத்தவருக்கே கடனுக்கு அடகு வைத்த பொருளின் மேல் அதிக உரிமை உள்ளது. உதாரணமாக, ஒருவர் 20 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி அதில் 19 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் ரூபாய் 1 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் போனால் கூட வங்கியினால் வீட்டினை ஜப்தி செய்து கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

கடன் பட்ட பொருளுக்கு இரண்டு சொந்தக்காரர்கள் உள்ளனர். உதாரணமாக, கடனில் வாங்கிய வாகனம் அல்லது வீடு. பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர் (Registered owner) மற்றும் சட்டப்படி சொந்தக்காரர் (Legal owner). சட்டப்படி சொந்தக்காரருக்கே அதில் அதிக உரிமை. கடன் கட்டாத சமயத்தில் சட்டப்படியான சொந்தக்காரர் கடன் பட்ட பொருளை பறிமுதல் செய்ய உரிமை உண்டு .

 எனவே, கடன் கட்டும் வரை கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமையாகவே உள்ளார்.

 கடன் முன்பு சொன்னதைப் போல் கடன் கட்டும் வரை மனதிற்கு உளைச்சலைக் கொடுக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கூட கடன் தவணை கட்ட வேண்டுமே என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வைக்கும். உங்களுடைய மேலதிகாரியிடம் வேலை இழக்க கூடாது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டி தன்மானத்தை குலைக்க வைக்கும் மன உளைச்சலை கொடுக்கும். கடன் இல்லாத பட்சத்தில் உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும். நிம்மதியாக உறங்க முடியும். உடல் நலம், மன நலம் மேம்படும்.

 தேவையான பொருட்களை மட்டும் வாங்கு வீர்கள் . அதிகமான பொருட்களை வாங்கி குவிக்க மாட்டீர்கள்:

 உங்களிடம் பணம் இருந்தால் ஒரு பொருளை வாங்குவீர்கள். இல்லையென்றால் பணத்தினை சேர்த்து வைத்து வாங்குவீர்கள். கடன் வாங்கி அவசியமில்லாத பொருளையும் சேர்த்து பணக்கார மாயையை உண்டாக்கி கொள்ள மாட்டீர்கள். குழந்தைகளும் வீட்டின் நிதி நிலையை அறிந்து நடந்துக் கொள்வார்கள். கடன் வாங்கி எந்த பொருளும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலைமையைக் கொள்ளமாட்டார்கள்.

உன் வீட்டில் உப்பு இல்லை என்றால், கடையில் வாங்க பணவசதி இல்லாவிட்டால், உப்பில்லாமல் சாப்பிட கற்றுக்கொள். அடுத்த வீட்டில் கடன் கேட்காதே என்பது அந்த அறிவுரை.

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான்ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும் .. நம் எண்ணத்திற்கு சக்தி அதிகம் .. இப்போது நாம் அதிகம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . அதிகம் கெட்டதே நினைத்தால் கெட்டதுதான் நடக்கும்நம் எண்ணம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ! விதி இல்லை !

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் !

சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு!

 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்

இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்!

 


No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...