Total Pageviews

Sunday, December 11, 2011

சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம்-முக்கியகாரணம்


பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம் முக்கிய காரணம் தான்.... அதை மறுக்க முடியாது.. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணம் தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும், சாலை விதிமுறைகளை மதிக்காததும் தான்...

காலம் காலமாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நின்ற லாரியில் மீது வாகனங்கள் மோதி உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.... நேற்று நடந்த பல விபத்துக்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன.


ஒரு வேளை லாரி லோடு புல்லா இருக்கும் போது டயர் வெடித்து ரோட்டில் நின்றால் அதை எப்படி ஓரம் கட்டுவது... உண்மைதான் அதை ஒரம் கட்ட முடியாதுதான்.. ஆனால்  லாரி பழுதாகி  நின்று விட்டது என்று பத்து மீட்டருக்கு முன் அறிவிப்பாக இரவு நேரத்தில் ஒளிரும் முக்கோண ரிப்ளெக்டர் வைக்க வேண்டும்.. ஆனால் பழுதாகி நின்ற எந்த லாரிக்கு பின்னால் இப்படிபட்ட அறிவிப்பை நான் எங்கேயும் பார்த்தது இல்லை...

அந்த முக்கோண ரிப்ளெக்டர் ஒரு கோடி ரூபாய் இருக்குமா? சரி தனியார் லாரிகளை விடுங்கள்.. அரசு பேருந்துகள்.. பழுதாகி நின்றால் அறிவிக்க இந்த முக்கோண ரிப்ளெக்ட்ர் இருக்கின்றதா? என்றால் இல்லை....

எப்படி சாலையை கடக்க வேண்டும்..? சிக்னலில் எப்படி நிற்க்க வேண்டும்? என்று  முதலில் இருந்து மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் விழிப்புணர்வு எற்படுத்துவது நமது கடமை அல்லவா... மிக முக்கியமாக வெகு ஜன ஊடகங்கள் இதனை திரும்ப திரும்ப  சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விபத்தில் இறந்தவர்களை விட டிவியில்  பத்து பேர் படுகாயம் அடைந்தவர்கள் என்று செய்தி வரும் போது அந்த பத்து பேருக்கு கை கால் போய் அவர்கள் எதிர்காலம் பாதிக்கபட்டு இருக்கும்.. இது போல தமிழகத்தில் விபத்தின் மூலம்  எதிர்காலத்தை இழந்தவர்கள் ஏராளம்.... பத்தரிக்கைகளும்  தொடர்ந்து சாலை விழிப்புணர்வு குறித்து  தொடர்ந்து எழுதுங்கள்.


டிவி தொடர்ந்து  விளம்பரம் மூலம்  நீங்கள் தயாரித்த மொக்கை படங்களை  தினமும் விளம்பரபடுத்தி மெஸ்மெரிசம் செய்து தியேட்டருக்கு மக்களை பார்க்க அழைப்பது போல்.. தொடர்ந்து  விபத்து விழிப்புணர்வு விளக்க படங்கள் ஒளிபரப்புங்கள்...

எத்தனை குறும்பட இயக்குனர்கள் களத்தில் குதிக்கிறார்கள் என்று???

பொது சேவை விளம்பரங்கள் எடுக்க எங்களால் முடியாது என்கின்றீர்களா?? நல்ல பொதுத்துறை விளம்பரங்கள் இயக்கி கொடுத்தால் அது நிச்சயம் நன்றாக இருந்தால் தினமும் ஒளிபரப்புவோம்... விளம்பரங்கள் ஒரு நிமிடத்தில் இருக்க வேண்டும் என்று உங்கள் தொலை காட்சியில் விளம்பரப்படுத்தி பாருங்கள்.. இது போலான விஷயங்கள் எல்லாம் செய்து விட்டு ஹெல்மெட் போட்டு வாகனம் ஒட்டுங்கள என்று சொல்லுங்கள்.. அதை விடுத்து விட்டு சாலை பாதுகாப்பு வாரம் என்றாலே ஹெல்மெட் போடுங்கள் என்று சொன்னால் ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. 

ஆனால் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்களுக்கு ஹெல்மெட் மட்டுமே தீர்வு அல்ல... என்பதே என் கருத்து... எத்தனை குடும்பத்தில் சாலையை எப்படி கடக்க வேண்டும்.. வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றார்கள்.. பள்ளியில்  இதை பற்றி சொல்லிக் கொடுக்கின்றார்களா? அதுவும் இல்லை... எல்லாத்திலேயும் ஒரு அலட்சியம்.... அப்புறம் இது போல விபத்துகள் ஏன் நடக்காது? வெகு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ரயில்வே  லெவல் கிராசிங் விபத்துகளுக்கு கார்ட்டூன் மூலம் ஒளிபரப்பிய விளம்பரம் மக்களிடம் நல்ல ரீச்...


நிறைய ரோந்து வாகனத்தை அதிக படுத்துங்கள் ! தேவையில்லாமல் சாலையில் வாகனத்தை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்! பழுதாகி நிற்கும் வாகனம் என்றால் 20 மீட்டருக்கு முன் அறிவிப்பு செய்யும் முக்கோண ரிப்ளெக்டரை ரோட்டில் வைக்க சொல்லுங்கள்!

ஓய்வில்லாமல் வாகனம் ஓட்ட வைக்கும் முதலாளிகள்  மீது நடவடிக்கை எடுங்கள் தினமும் விளம்பரத்தின் மூலம் பல  கோடிகளை கல்லா கட்டுகின்றீர்கள்.. உங்கள் உழைப்பு அதனால் விளையும் நன்மை உண்மை தான்.. உங்கள் இஷ்ட்டம் தான்... ஆனால் ஒரு நாளில் ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக, பத்து நிமிடங்கள் நாம் வாழும் சமுக அமைப்புக்கு பயன் பெறும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதால்  உங்கள் பேங்க் பேலன்சுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது

ப்ளிஸ்.... யாராவது புதிதாக கார் வாங்கி அவர்கள் கார் பழுதாகி நின்றால் அதை அறிவிக்க முக்கோண ரிப்ளெக்டர்களை  தமிழகத்தில் பயன்படுத்தி வருகின்றார்கள்.. ஆனால் எந்த   லாரியோ, பேருந்தோ  பழுதாகி நின்றால் வேப்ப மரத்து கிளையும், நெய்வேலி காட்டாமணி செடிகள் மட்டுமே வாகனம் பழுதாகி நிற்க்கின்றன என்றுஅறிவிக்க வைக்க காரணம்  என்னலாரிகள் சரக்குகள் எடுத்து சென்று  நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொடுக்க இரவு பகல் பாராது பணியாற்று கின்றன.. அதை  மறுக்க முடியாது... ஆனால் சாலையில் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு ரோட்டில் ஒதுங்கும் நிறைய வண்டிகளை நான் காட்டுவேன்... பல அனுபவம் வாய்ந்த லாரி டிரைவர்கள்...  நன்றாக ரோட்டு ஒரத்தில்  லாரியை  நிறுத்திவிட்டு செல்வதை நான் பார்தது இருக்கின்றேன்..  அதே போல கார்களும்தான்... ஆனால் ஒரு சில டிரைவர்களின் அலட்சியம் பலரது கனவுகளை சிதைக்கின்றது.. ஆனால்  ரோட்டில் வாகனம் நிறுத்தும்  லாரிகள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை...


மனிதநேயத்தை வளர விடுங்கள்.

உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன கொடுத்தோம் ?


மனித எண்ணிக்கைகள் தான் அதிகமே தவிர, மனித நேயத்தில் இல்லை. இன்று வாகன விபத்துக்கள் நடப்பது மிக சகஜமான விஷயமாகிவிட்டது.  அதிலும் விபத்தில் பெரும் பாலும் இறப்பது இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போது அவனிடம் இருக்கும் செயின், பணம், பொருள் எல்லாம் திருட நினைக் கிறார்களே தவிர அவனை ருத்துவமனையில் சேர்த்து உதவ நினைப்பதில்லை. அப்படி மருத்துவமனையில் சேர்த்தலும் போலீஸ், கோர்ட் எல்லாம் செல்ல வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். உதவுவதற்கு அஞ்சுகின்றனர், திருடுவதற்கு அஞ்சுவதில்லை. இப்படி நம் நாட்டில் மனித நேயம் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதத்தில் எத்தனை உயிரை இழந்து இருக்கிறோம். பத்து நிமிடம் முன்னாடி வந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர் கூறும் போது நாம் யாரை நொந்துக் கொள்வது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பற்றி கவலை பட முடியாத அவசர உலகத்தில் இருக்கிறோம்.

நெடுஞ்சாலையில் லாரியை வேகமாக ஓட்டி ஒரு மனிதர் மீது இடித்து விடுகிறான். சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர மருத்துவமனையில் சேர்ப்பவர்கள்  மிக குறைவானவர்கள் தான். அந்த வண்டி ஓட்டுனர் கூட அபராதம் மட்டும் கட்டிவிட்டு வெளியே வந்துவிடுவான். இறந்தவர் குடும்பத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை மதிக்காமல் தான் வண்டியை ஓட்டி செல்கிறான்.

மனிதர்களை பாதுகாக்கும் சட்டங்களை விட மான்களை பாதுகாக்கும் சட்டங்கள் சரியாகவே இயங்குகின்றன. காரணம், மானின் தோளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மனிதனின் தோளுக்கும், உயிருக்கும் மதிப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மிஞ்சி இருக்கும் மனி
நேயம்

இப்பொது பிச்சையாக மாறும் நேரம்!  என்று கருதி கை, கால் இருப்பவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். பேரூந்து நிலையம், பொது இடம் போன்ற இடத்தில் நின்று பேசுபவர்களி
டம் அம்மா தாயே.. குழந்தைக்கு பசிக்குதுமா... தர்ம பிரபுவே... இப்படி எத்தனை வார்த்தைகளை சேகரித்து வைத்து இருக்கும் மனிதநேயத்தை காசாக மாற்றுவது தான் இவர்களது முதல் வேலை. 

நம் நாட்டில மனிதநேயத்தை காசாக மாற்ற பல வித்தைகளை கற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்க்கத்தான் யாருமில்லை. உதவி செய்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் தான் மனித நேயங்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன. உதவி செய்வது போல் ஏமாற்றுபவர்களை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால் இரக்கப்பட்டு உதவி செய்ய செல்லும் போது நம்மை ஏமாற்றும் அனுபவமே மிகவும் கசப்பாக இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்குகிறோம். நம் நாட்டில் பாதி மனிதநேயங்கள் செத்ததற்கு மிகப் பெரிய காரணம் உதவி செய்ய வந்தவர்களை ஏமாற்றி லாபம் அடைவது தான்.

மிக இக்கட்டான நேரத்தில் பணம் வேண்டும் என்று காலில் விழாத குறையாக விழுந்து கெஞ்சுவார்கள். பணம் கொடுத்த பிறகு அவர்களிடம் பணம் வாங்க நம்மை அலைக்கழிப்பார்கள். கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம் கொடுத்தால் திரும்பி வருமா ? என்ற அச்சம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது.

இன்று உதவி செய்யச் சென்றாலும் அதில் வரும் ஆபத்துகளை மனதில் வைத்தே செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.  எந்த அச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயத்தை வளர விடுங்கள். இனியாவது மனிதனை மனிதனாய் வாழவிடுங்கள்.

பைக் திருட்டை தடுக்கும் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்


கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் பைக்குகள் திருட்டுப் போவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனத்தை வடிவமைத்துள்ளார். டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் என்று பெயரிட்டுள்ள இந்த சாதனத்தை பைக்குகளில் பொருத்திவிட்டால், கள்ளச்சாவி போட்டோ அல்லது ஒயரை இணைத்தோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது.

மேலும், வண்டியின் உரிமையாளர் ஒரிஜினல் சாவியை போட்டாலும், ஸ்பீடோ மீட்டர் கன்சோலில் பொருத்தப்படும் பட்டன்களில் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ் வேர்டு) பதிவு செய்தால் மட்டுமே பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.

மேலும், இந்த கருவி ஸ்பார்க் ப்ளக்கையும் கட்டுப்படுத்துவதால் எந்த வகையிலும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது என்று அடித்து கூறுகிறார் கார்த்திக். மேலும், தவறான பாஸ்வேர்டை பதிவு செய்து வண்டியை எடுக்க முயன்றால் அலாரம் அடித்து உரிமையாளரை இந்த சாதனம் உஷார்படுத்திவிடும்.

தனது கண்டுபிடிப்புக்கு கார்த்திக் காப்புரிமையையும் பெற்றுள்ளார். மேலும், வாகன நிறுவனங்களுக்கு தனது கண்டுபிடிப்பு குறித்து தெரியப்படுத்தியுள்ளார். வர்த்தக ரீதியில் தனது கண்டுபிடிப்பை தயாரித்து வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,"சிறு வயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. இந்த ஆர்வமே டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் கண்டுபிடித்தற்கு முக்கிய காரணம்.

எனது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களை பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன். வர்த்தக ரீதியில் இந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

பைக் திருட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் நிச்சயம் பேரூதவி புரியும். மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பிற சாதனங்களை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாகவும், 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இருசக்கர வாகனங்களில் இந்த சாதனத்தை பொருத்துவதற்கு ரூ.700ம், கார்களுக்கு பொருத்த ரூ.2,000மும் செலவாகும்.

மேலும், கார்களில் பொருத்தப்படும் சாதனத்தில் கார் திருடப்பட்டால் அதுகுறித்து உரிமையாளருக்கு மொபைல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது," என்று கூறினார்.

தனது கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக கார்த்திக் நம்மிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தை பெறுவது குறித்த விபரங்களுக்கு 09894282845 என்ற மொபைல் எண்ணிலும்,
kartikplayer@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


தேவை - மனித நேயம்!

சாலையோரங்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு நீதிமன்றம் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம், கடந்த ஜூலையில் காவல்துறை டிஜிபிக்கு ஓர் உத்தரவை பிறப்பித்தது.

மனநலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி உத்தரவிட்டு அதனை 6 மாதத்துக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியது.

திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிப் பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக சுற்றுலா இடங்களான ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.

இவர்கள், சில நேரங்களில் ஆடையின்றி அலைவது பார்ப்பவர்களை வேதனையடையச் செய்கிறது. இவர்களில் மனநலம் பாதித்த பெண்களும் விதிவிலக்கு அல்ல.

அரசு மருத்துவமனைகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் பலர் உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் சாலைகளில் செல்லும் போது வாகனங்கள் மோதி இறக்கின்றனர். நோயால் ஒரே இடத்தில் பல நாள்கள் கிடந்து சிலர் இறக்கின்றனர். இவ்வாறு இறந்தவர்களை போலீசார் மீட்டு அனாதை பிணமாக அடக்கம் செய்கின்றனர்.

மனநலம் பாதித்தவர்களில் சிலர் நீண்ட தொலைவுக்கு நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும்போது இரவில் வாகனங்கள் மோதி இறக்கின்றனர். அடுத்து சாலையில் வரும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சடலத்தில் ஏறிச் செல்வதால் கடைசியில் சடலம் சிதைந்து அடையாளம் தெரியாமல் ஆகிவிடுகிறது.

மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப நிலையில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் 90%சதம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இவர்களை யார், எப்படி மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பது என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்னை.

காவல்துறையால் மட்டும் இதனைச் செய்துவிட முடியாது.தொண்டு நிறுவனங்கள் முழுமையாக இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் இவர்களைப் பற்றி மாவட்டவாரியாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் தெரிய வரும்.

இன்றைய சூழ்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மனநோயாளிகளாகத் திரிவதை பார்க்க முடிகிறது.

தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து மனநலம் பாதித்தவர்களை போலீசார்  மீட்க வேண்டும்.

மீட்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் மூலம் மனநலப்பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும்.

குணப்படுத்தக்கூடிய தன்மையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் தனி வார்டு ஒதுக்கி சிகிச்சை அளிக்கலாம்.

ஏனைய மனநலம் பாதித்தவர்களை சென்னை கீழ்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கலாம்.

மனநோயாளிகளை கையாளுவது என்பது சற்று கடினம் என்றாலும் மனிதநேயத்துடன் இதைச் செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் இதற்கென தனியாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். வார்டுகள் தனியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு அரசின் நிதிஒதுக்கீடு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.

மனநலம் பாதித்தவர்களை மீட்க நீதிமன்றம் அக்கறையுடன் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் அனைத்துத் துறைகளும் கைகோர்த்து இதனைச் செய்வதுதான் மனித நேயச் செயலாகும்.

Thanks to Dinamani.com

எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

  எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...