Total Pageviews

Thursday, April 27, 2023

சிறந்த சமையல் குறிப்புகள் !

 

    வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றி வைதால்,   நான்கு நாட்கள் வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!
     
    *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
     
    *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
     
    *தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
     
    *கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
     
    *வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
     
    *கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
     
    *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
     
    *சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
     
    .*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
     
     
    *கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
     
    *காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.
     
    *மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
     
    *இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
     
    *உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
     
    *வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
     
    *சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
     
    *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
     
    *காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
     
    *முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
     
    *இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
     
    . *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
     
    *கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
     
    *உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். 
     
    குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
     
    *சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
     
    *காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
     
    *அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
     
    *சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
     
    *புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
     
    *இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். 
     
    *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
     
    *சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
     
    *தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
     
    *காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
     
    *ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
     
    *ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
     
    *கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
     
    *தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
     
    *தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
     
    *வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. 
     
    அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
     
    *மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
     
    *நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
     
    *இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்
     
     *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

Tuesday, February 7, 2023

சூரிய சக்தியில் ஓடும் கார் சாத்தியமா? ஆட்டோமொபைலின் அடுத்தக்கட்டம்!

Image result for SOLAR CAR IMAGES

சூரிய சக்தியில் இயக்கும் கார்

முழுமையாக பயன்படுத்தக் கூடிய சூர்ய சக்தியால் இயங்கும் கார்கள் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ உள்ள சாத்தியக் கூறுகள் பற்றி தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவது சிந்திக்க வைக்கவுள்ளதாக உள்ளது.

 

ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பம் மட்டும் இன்றி காலத்திற்கு ஏற்ற நவீன சாதனங்களும் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்களில் மேலும் நவீன வளர்ச்சியடைந்து முழுமையாக சூரிய சக்தியில் இயக்கப்படும் கார்கள் உற்பத்தி செய்யப்படுமா என்ற கேள்வி கண்டிப்பாக எழுகிறது. இந்த கட்டுரையில் கார்கள் முழுமையாக சூரிய சக்தியில் இயங்க உள்ள வாய்ப்புகள் மற்றும் அதன் பயனபாட்டை பற்றி பார்ப்போம். நடையணம், காளை வண்டிப் பயணம், சைக்கிள் பயணம், இரு சக்கர வாகனப் பயணம், கார் பயணம், செகுசு பார் பயணம் என நாளுக்கு நாள் நம் பயணத்தின் பாதை பரிணமத்துக்கொண்டே வருகிறது. நமக்கு ஏற்படுகிற தேவை கண்டுபிடிப்பின் அவசியத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.

எலெக்ட்ரிக் கார் வரை வந்து விட்டோம். அடுத்து சோலார் கார் தான். இந்த நினைப்பில் பலரும் சோலார் காரை தயாரி்க்கும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் சோலார் காரை நமது பயன்பாட்டிற்கு தடையில்லாமல் பயன்படுத்தும் வகையில் தயாரிக்க முடியுமா? இது சாத்தியமா? என எழும் பல கேள்விகளுக்கு ஆணித்தரமாக பதில் கொடுக்க முடியவில்லை . சோலார் கார் தயாரிக்கும் சாத்தியக் கூறுகள் பற்ற இப்போது பார்க்கலாம்.

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் அல்லது டீசல் பவரில் இயங்கும் திறன் கொண்டவை, இந்த எரிபொருள் பூமியி்ல் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கச்சா எண்ணெய் கிடைக்கும் என நமக்குத் தெரியாது. இதனால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதை முன்னெடுத்து வருகிறார்கள். இதையடுத்து தற்போது ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் கார்கள் தயாரிப்பில் உள்ளன.

எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மின்சார சக்தி தேவை. இந்த மின் சக்தி ஏதாவது எரிபொருள் மூலம்தான் கிடைக்கிறது. இதை மாற்றி சூரிய சக்தியில் இந்த மின்சாரத்தை எடுத்து எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தும்படியான சூரிய சக்தி கார்கள் குறித்து சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Image result for SOLAR CAR IMAGES

இதை அடிப்படியாகக் கொண்டு சில நிறுவனங்கள் சூரிய சக்தியில் இயங்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சூரிய சக்தி என்பது நமக்கு எப்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் ஒரு சக்தி. இது என்றைக்குமே தீர்ந்து போகாத ஒரு ஆற்றல் என்பதால் இந்த சக்தியைப் பயன்படுத்தி கார்களை வடிவமைத்தால் அது இயற்கை வளங்களை அழிக்காமல் இயங்கும்.

தற்போது உள்ள கார்களுக்கு நல்ல மாற்றாக அமையும். ஆனால் அது அவ்வளவு எளிதில்லை. ஒரு சதுர மீட்டர் அளவிலான சூரிய ஒளியில் 1000 வாட்ஸ் மின்சாரம் பூமிக்கு வரும். ஆனால் அதில் 20 சதவீதம் அதாவது 200 வாட்ஸ் மின்சாரத்தைத் தான் தற்போது உள்ள சோலார் பேனல்களால் கன்வெர்ட் செய்ய முடியும். இப்பொழுது ஒரு கார் முழுவதும் சோலார் பேனல்களாக வைத்து டிசன் செய்தாலும் அதிகபட்சம் 2 கிலோ வாட் மின்சாரத்தைத் தான் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் மின்சார கார் இயங்க 100 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் தேவை.

அப்படி என்றால் கார் மூலம் நமக்கு கிடைக்கும் சூரிய சக்தியை விட 50 மடங்கு அதிக திறன் கொண்ட மோட்டார் அது. அதனால் சூரிய சக்தியை மட்டும் ஒரே சக்தியைக் கொண்டு கார்களை வடிவமைக்க முடியாது. கார் முழுவதும் சோலார் பேனல்கள் கொண்டு தயாரிப்பது காரின் வடிவமைப்பில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது போக ஹைட்லைட், வைப்பர், ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியாது.

இது போக சோலார் பேனல்கள் ஒரே இடத்தில் இருக்கும் போது தான் சிறப்பாகச் செயல்படும் நகர்ந்து கொண்டேயிருந்தால் காற்று காரணமாக அதன் திறன் குறையும். அதனால் தற்போது உள்ள தொழிற்நுட்பத்தின்படி சோலார் கார் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

தமிழக அரசு நினைத்தால்.,. எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !

தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !   நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அ...