Total Pageviews

Thursday, February 6, 2014

வாகனத்தை அதிக காலம் உழைக்கச் செய்வது எப்படி?





வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான முறையில் பராமரித்து வருவதன் மூலம் குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால உழைப்பு, இனிய பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம். இந்த தொகுப்பில் குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் பின்வருவனவற்றில் கவனம் தேவை:-

1. உங்கள் வாகனத்தின் டயர்களில் சரியான காற்று அழுத்தம் உள்ளதா? என்பதை குறைந்தது மாதத்திற்கு இருமுறை சரிசெய்து கொள்ளுங்கள், எப்பொழுதும் வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் முன் வாகனத்தின் டயர்களிலுள்ள காற்று அழுத்தம் சரியான நிலையிலுள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான காற்று அழுத்தமில்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் அதிக பெட்ரோல் செலவும், விரைவில் டயர்கள் தேய்ந்தும் விடுகிறது, இதனால் விரைவில் புதிய டயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.

2. வாகனத்தை 'Start' செய்தவுடன் அதிக Accelerate செய்யாமல் நிதானமான விதத்தில் Engine-க்கு தகுந்த Accelerate தரவும் அது போல் அதிக நேரம் நிறுத்த வேண்டிய தருணத்தில் எஞ்சினை ஓடவிடாமல் நிறுத்துவது சிறந்தது.

3. சரியான வேகத்திற்கேற்ற Gear-யை செலுத்தவும். அடிக்கடி திடீர் வேகம் திடீர் மிக நிதான வேகத்துடன் செல்வதால் பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதுபோல் Brake செய்யும்பொழுது சீரான முறையில் Brake- அழுத்தவும். அதனால் Brake தேய்மானத்தை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி திடீர் Brake போடுவதால் Brake Pad சீக்கிரமாக தேய்வதோடு அல்லாமல் வாகனத்தின் டயரில் ஒரு பகுதியிலும் அதிக தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

4. தேவையில்லாமல் கிளட்ச்சியோ (Clutch) அல்லது Brake Pedal-யோ மிதித்து கொண்டிருக்க வேண்டாம். நெடுஞ்சாலையில் ஓட்டுபொழுது அதிகப்படியான வேகமில்லாமல் சீரான முறையில் வாகனத்தை ஓட்டினால் அதிக பெட்ரோல் செலவழிப்பை தடுக்கலாம். Signal போன்ற இடங்களில் சிலர் தேவையில்லாமல் Clutch-யில் காலை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

5. உங்கள் வாகனத்தில் அதிக படபடப்பு (vibration) இருந்தால் Wheel Alignment செய்துக் கொள்ளுங்கள். Wheel Alignment செய்வதால் டயர் தேய்மானத்தை தவிர்ப்பதோடு அல்லாமல் Vibration (படபடப்பு) தவிர்த்து Steering நேராகவும், ஒரே சீராகவும் அமைதல் போன்ற பயன்களை பெறலாம்.

பின்வருவனவற்றில் வாகனத்தின் சில முக்கிய Maintenance service பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக 3000 கிலோ மீட்டரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு Engine Oil மாற்றுவது நல்லது. முக்கியமாக இது உங்கள் வாகனத்தை பொறுத்தும் மாற்றப்படும் Engine oil-யின் தரம் பொறுத்தது ஆகும். இஞ்சின் ஆயில்கள் உங்கள் வாகனத்தின் இஞ்சினுக்கு பாதுகாப்பாகவும், குளிரூட்டவும், தேய்மானத்தை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாகனத்தின் Engine Oil அளவு சரியாக உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் அதுப்போல் Oil Filter-யை குறைந்தது ஒவ்வொரு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

ஒவ்வொரு 20,000 கி.மீக்கு ஒருமுறை Spark plug நிலைமையை சரிபார்த்து தேவைப்பட்டால் புதிய Spark plug-யை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் Battery-யின் தண்ணீர் அளவு, Brake Pad மற்றும் அதன் Fluid அளவு, Clutch Fluid அளவு, Power Steering-ஆக இருந்தால் அதன் Fluid அளவை சரிபார்ப்பது நல்லது தேவைப்பட்டால் தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள்.


Automobile மெக்கானிக் வெர்க்ஷாப் செல்லும்போது மேலே குறிப்பிட்டதை சரி செய்வதோடு அல்லாமல் Clutch Pedal, Brake Pedal, Brake, Steering wheel மற்றும் அதன் தொடர்புகள் Tire & battery போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


ஒழுங்கான பராமரிப்பும், அக்கறையும், சீரான வாகன வேகமும், உங்கள் வாகனத்தை அதிக காலம் உழைக்க வைப்பது மட்டுமில்லாமல்  இனிய பயணமாக அமைய உதவும்.


எல்லாம் வல்ல  ஆண்டவன்  உங்கள் பயணங்களை இனிமையானதாக ஆக்குவானாக!

மழை காலத்தில் வாகனங்களை ஓட்டுவது எப்படி ?



காரில் பயணம் செய்தால் நனையாமல் செல்லலாம் என்பது உண்மைதான்.


ஆனால் மழையில் பத்திரமாக செல்ல, சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து தான் ஆக வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக கவனம் வேண்டும்.


* ஸ்டைலாக ஒரே கையால் ஸ்டியரிங்கை வளைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இரு கைகளாலும் பிடித்து ஓட்டுவது பாதுகாப்பானது.


* காரை ஓட்டும்போது மொபைல் போனில் பேசுவது, ஹெட்போனில் பாட்டுக் கேட்பது ஆகிய கவனத்தை திசை திருப்பும் விஷயங்களை சுத்தமாக "கட்' செய்து விட வேண்டும்


உங்கள் கவனம் முழுவதும் ரோட்டின் மீதும், இடது, வலது பக்க ரியர் வியூ கண்ணாடிகளின் மீதும் மாறி, மாறி இருந்தால்தான், பயணம் பத்திரமாக முடிந்து நீங்கள் வீட்டில் இருக்க முடியும்.


அடை மழையில் செல்லும் உங்கள் காரின் முன்னே திடீரென ஒரு மரமோ, மின் கம்பமோ சாயலாம். மின் ஒயர்கள் துண்டாகி விழலாம் அல்லது தண்ணீரால் சூழப்பட்ட பெரிய பள்ளத்தில் டயர் இறங்கலாம். ஆகவே மிதமான வேகத்தில் கவனமாக ஓட்டுதல் முக்கியம்.


* மழையில் கார் ஓட்டும்போது, முகப்பு விளக்குகள் பத்திரம். அத்துடன் மிஸ்ட் லைட்டுகள் கட்டாயம் தேவை. இரவில் மட்டுமல்ல, விடாது மழை தட்டியெடுக்கும் பகல் வேளையிலும் தேவைப்படலாம்.


 எதிரே வரும் வாகனங்களுக்கு, விளக்குகளால் "டிம்,டிப்' அடிப்பது, உங்களுக்கு மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கும் பாதுகாப்பானது.

* மழையில் பயணிக்கும் போது, முன்னால் செல்லும் வாகனங்களை ஒட்டியபடி தொடர்வது நல்லதல்ல.

முன்னே செல்லும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு உங்களுக்கும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகலாம். ஆகவே குறைந்தது மூன்று கார் இடைவெளியில், முன்னே செல்லும் வாகனத்தை பின்தொடர்வது பாதுகாப்பானது.


* மழை நாட்களில் பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்குவது நல்லது. வேகமாக செல்லும்போது, நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளுக்கு உங்கள் கார் கட்டுப்படாமல் போகலாம்.


* தண்ணீர் அதிகளவில் பாயும் ரோடு வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்து விட்டால் கார் நின்று விடும்.


* மழையில் முக்கியமாக பிரேக்குகளை கவனிக்க வேண்டும். பிரேக்கின் ஈரமான டிரம்கள், சாதாரண நிலையை விட மந்தமாகவே செயல்படும். ஆகவே திடீரென பிரேக் போட்டால் கார் நிற்காமல் போகலாம்.


* தண்ணீர் எதிர்ப்பு திரவத்தை கண்ணாடிகளிலும் ரியர்வியூ கண்ணாடிகளிலும் ஸ்ப்ரே செய்யலாம்.

Wednesday, February 5, 2014

பித்த வெடிப்பு குணமாக 6 வழிகள்






01. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

02. மஞ்சள், வேம்பு இந்தியாவின் மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பதில் மிக முக்கியமானவை. வேப்பிலையை பறித்து மஞ்சள் அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்கவேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

03.  வேப்ப எண்ணெய் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

04.  வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

05. சுடுநீர், எலுமிச்சை பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

06. கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் இறந்துபோன செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாக பட்டுப்போல மாறும்.

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...