Total Pageviews

Monday, March 5, 2012

ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!

வாழ்க்கை வரம் நமக்கு... வாழத் தெரிந்தால்! அப்படி வாழத் தெரிந்தவர்கள் இங்கே சில பேர். 

தெரியாதவர்கள்தான் பல பேர். அந்தச் சிலரைப் பலராக்கும் அக்கறைதான் இந்த இணைப்பின் நோக்கம்! 

நம் வாழ்க்கையில் ஆனந்தம் அட்சயப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதானே நம் அனைவரது விருப்பமும்?! அதற்கு எந்தப் புரட்டிப் போடும் புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம் மாற்றம் போதும்.

 ''என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன்'' என்பார் ஓஷோ ரஜினீஷ்! அப்படி உங்களை நீங்களும் கொண்டாடுவதற்கு உங்கள் மனதை இன்னும் அழகாக்கும் சூட்சமம் சொல்லத்தான்... இந்த 'ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'! வாருங்கள்... சதமடிப்போம்! 
 மனதில் ஊறட்டும் உற்சாகம்! 

1. சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே.

 2. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.

3. உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள். உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் 'எண்டோர்பின்'களால் (endorphins) மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.

 4. வேலை, கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது, நன்றாக ஒரு குளியல் போடுவது, இசை கேட்பது... இப்படி ஏதாவது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். அதேபோல், தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள். 

 5. ஆனந்தம் என்பது 'லக்' அல்ல, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள். அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும், ஆனந்தம் தருபவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களைக் கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.

 6. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர... நத்தை ஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது. 

7. உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

8. திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்கப் பழகுங்கள். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.

 9. புது இடங்களைப் பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள். எனவே, அவ்வப்போது 'அவுட்டிங்' செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இருப்பிடங்கள் இதற்கு பெட்டர் சாய்ஸ்! 

 10. ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.

 11. கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். காலம், கவலைகளை ஆற்றிவிடும். 

 12. விருப்பமிருந்தால் ஒரு செல்லப் பிராணியை வளருங்கள். அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு, அதனிடம் நிறையவே கிடைக்கும்! 

13. தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள். 'நல்ல அம்மா' நீங்கள்தான்! 

 14. குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால், அது தவறு என்பதை அவர்கள் உணரச் செய்யுங்கள். உணர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லாதீர்கள். 

 15. உங்களுக்குப் பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே, குழந்தைகளின் ரசனைக்கும் மதிப்பு கொடுங்கள்.

 16. குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும். மதிக்காதது போல் தோன்றும். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள்தானே?! 

 17. 'என்னால முடியல... நீயாச்சும் டாக்டராகு' என்று உங்கள் ஏக்கங்களை அவர்களின் லட்சியங்களாக திணிக்காதீர்கள். குழந்தைகளின் விருப்பங்களைச் சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்.

 18. 'அம்மா, அப்பா இருக்கோம்' என்று எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். பயத்தை பழக விடாதீர்கள்.

 19. குழந்தைகளின் ரசனையை ஊக்கப்படுத்துங்கள். மியூஸிக், டான்ஸ், விளையாட்டு என்று அவர்களுக்கு விருப்பமானவற்றில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள்.

 20. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம்.. தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் பழக்கத்தை அது குழந்தைகளிடம் ஆழமாகப் பதித்து விடும்.

 21. குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது, பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும்.                             
 22. 'உன்னைப் பத்து மாசம் சுமந்தவ நான்' என்றெல்லாம் டயலாக் விட வேண்டாம். அதைக் குழந்தைகள் அதற்குரிய பருவம் வரும்போது தானாக புரிந்துகொள்ளும்.

 23. குழந்தைகளின் சின்னச் சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம்தான். ஒவ்வொரு பருவத்திலும் சில சேட்டைகள் இருக்கும். அதை அனுமதியுங்கள். 

 24. குழந்தைகளின் சின்னச் சின்ன வெற்றிகள், திறமைகளைப் பாராட்டுங்கள். பாராட்டுகள் அவர்களுடைய வழியை அவர்களுக்கு உறுதிப்படுத்தும். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்தும்.

 25. 'முக வாட்டமா, மன அழுத்தமா, ஆனந்தமா...' என்று குழந்தைகளின் மனநிலையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒரு நல்ல அம்மாவின் அடையாளம் அது 

 26. குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள வேலைகளில் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பும் தவறுமாக அவர்கள் பழகட்டும். முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் தரும். 

 27. அம்மா ஆனவுடன் உடற்பயிற்சியையெல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்றா? தவறு. சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகளும் உடற்பயிற்சி செய்ய ஆர்வமாகும். 

28. வீட்டு வேலை ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டேதான் இருக்கும். எனவே, உடல் அசதியாக இருந்தால் தூங்கி ஓய்வெடுங்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்போது முகத்தில் அசதியைக் காட்டாதீர்கள்

. 29. குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். 'நான் அம்மா மாதிரி இருக்கணும்' என்று குழந்தை நினைக்க வேண்டும். உங்கள் சொல் ஒன்று... செயல் ஒன்றாக இருப்பது எப்போதும் பயன் தராது. 

 30. குழந்தைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருங்கள். ஸ்கூல் கதை, ஆட்டோ கதையை எல்லாம் அவர்கள் ஆர்வமாகப் பேச வரும்போது, அதைத் தட்டிக் கழிக்காமல் கேளுங்கள். து விடாதீர்கள்! 

 31. வேலை முக்கியம்தான். ஆனால், வாழ்க்கை என்பது வேலை மட்டும் இல்லை. எனவே, அதற்கான நேரத்தை மட்டும் அதற்காக ஒதுக்குங்கள். வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை பாருங்கள், கூடுதலாக வேண்டாம். அலுவலகத்துக்காக குடும்ப ஆனந்தங்களை தலை முழுகாதீர்கள்.

 32. உங்களுக்கு விருப்பமான வேலையையே தேர்வு செய்யுங்கள். கிரியேட்டிவ் துறையில் ஆர்வத்தை வைத்துக்கொண்டு கணக்கெழுதப் போகாதீர்கள். 

 33. உங்களால் செய்ய முடியாதவற்றை, ஜென்டிலாக மறுத்துவிடுங்கள். மேலதிகாரியைத் திருப்திப்படுத்த அதிக வேலையைத் தூக்கித் தலையில் போட்டுக்கொள்வது மன அழுத்தத்தைத் தரும். 

 34. உடன் பணிபுரிபவர்களின் உதவிகள் தேவைப்படும்போது தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். தானே செய்வேன் என அடம் பிடிக்காதீர்கள். அதேபோல, இக்கட்டான நேரங்களில் அவர்களின் வேலையையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 35. வேலையையும் அது சார்ந்த டென்ஷன்களையும் முழுவதாக மறக்கும் சில நாட்கள் மிக அவசியம். எனவே, கிடைக்கும் ஓய்வு நாட்களில் குடும்பத்துடன் வெளியே எங்கேனும் சென்று வாருங்கள்.

 36. மேல் அதிகாரியிடம் வாக்குவாத சூழலை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். பலர் முன்பாக, மேலதிகாரியின் அறியாமையை வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.

 37. இங்கு பலரின் கவலையும் 'இந்த வேலையை எப்படி முடிக்கப் போறோம்?' என்பதைவிட, அந்த வேலையைத் தொடங்குவதில்தான். நம்பிக்கையான தொடக்கம் நேர்த்தியான முடிவைத் தரும். எனவே, எந்த வேலையையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.போடுங்கள் டைம்டேபிள்! 

 38. உங்கள் வாழ்க்கையின் சந்தோஷங்களை வரிசைப்படுத்துங்கள். பெரும்பாலும் அவை குழந்தைகள், வாழ்க்கைத் துணை, நல்ல வேலை, ஆன்மிகம், உடல்நலம் என நீளும். அதன் அடிப்படையில் உங்கள் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுங்கள்.

 39. எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அவற்றை ஒதுக்குங்கள் அல்லது சுருக்குங்கள். தொலைக்காட்சி, செல்போன் முதலியவை சில உதாரணங்கள்.

 40. உங்கள் பணிகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்துக்கான நேரத்தில் அலுவலகமும், அலுவலக நேரத்தில் குடும்பமும் தலையிட வேண்டாம். 

 41. வாரக் கடைசியில், நீங்கள் உணர்ந்த சந்தோஷ தருணங்கள், மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்த நிமிடங்கள் ஆகியவற்றைப் பட்டியல் போடுங்கள். இது, உங்கள் வாழ்க்கை எந்தளவுக்கு ஆனந்தமாகக் கழிகிறது என்பதை அறிவதற்கான சுய பரிசோதனை. 

 42. நேரம் தவறாமை, மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது.. பதற்றம், பரபரப்பு முதலியவற்றை நம் வாழ்வில் இருந்து விரட்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள், அடுத்த நாளுக்கான உடையில் இருந்து டூ-வீலரில் பெட்ரோல் செக் செய்வது வரை எல்லாவற்றையும் முதல் நாள் இரவே முடித்து விடுவது நலம். 

 43. இ-மெயில் பார்க்க, லெட்டர் எழுதவெல்லாம் காலை, இரவு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் வசதியாக இருக்கும். உங்களுக்கான அந்த நேரத்தைக் கண்டுபிடித்து, அந்த வேலைகளை அந்த நேரத்துக்கு ஒதுக்குங்கள். 

 44. டைரி எழுதுங்கள். வாரம், மாதம், வருட இறுதிகளில் உங்கள் டைரியைப் புரட்டுங்கள். உங்களது இலக்குகளையும், அதற்கு நீங்கள் கொடுத்துள்ள உழைப்பையும் அறியலாம். ரொமான்ஸ் ரோஜா பூக்க..! 

 45. நம்பிக்கை, குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரம். மற்றவர்கள் உங்கள் துணை மீது சொல்லும் குற்றச்சாட்டுகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அவரிடமே நேரடியாக கேட்டு விடுங்கள். அதேபோல, உங்கள் துணையை யாரிடமும் விட்டுக் கொடுத்தும் பேசாதீர்கள்.

 46. உங்கள் துணைக்கு நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருங்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதே நல்லது.

 47. வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். முடிவுகள் எடுக்கும்போது கலந்துரையாடுங்கள். ஒருவருக்கொருவர் முக்கியத்துவம் கொடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையின் அடையாளம்.

 48. மனம் விட்டுப் பேசுங்கள். அதற்காக தேவையில்லாத பழைய சோகக் கதைகளை கிண்டிக் கிளறாமல், ஆரோக்கியமான உறவுக்கு அழைத்துச் செல்லும் சந்தோஷமான விஷயங்களைப் பேசுங்கள்.

 49. உங்கள் விருப்பத்துக்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை வளைக்கப் பார்ப்பதுதான் பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே, அவர்களை அவர்களாவே இருக்க விடுங்கள், அப்படியே நேசியுங்கள். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லைதானே?! 

 50. சின்னச் சின்ன அன்பில்தான் ஜீவன் இருக்கிறது. எனவே, அவரின் பிறந்தநாள், திருமண நாள், குழந்தையின் பிறந்த நாள் போன்றவற்றை நினைவில் வைத்து வாழ்த்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் ஸ்பெஷல் நாட்களையும் நினைவில் வைக்க முடிந்தால், அசத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

 51. வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்களின் டிபார்ட்மென்ட் என சோம்பேறித்தனமாக ஒதுங்காமல், ஷெல்ஃப் சுத்தம் செய்வது, பெட் ஸ்ப்ரெட் மாற்றுவது என்று பலவற்றை கணவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

 52. செஸ், கேரம்போர்டு போன்ற இண்டோர் கேம்ஸ் சிலவற்றை அவ்வப்போது கணவர், மாமியார், மகன், மகள் என குடும்பமாக அமர்ந்து விளையாடிப் பாருங்கள். இடைவெளிகள் குறையும்... ஆனந்தம் அதிகரிக்கும்.

 53. திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலே ரொமான்ஸ் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக மிகத் தவறு. அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது, வெளியே டின்னர் போவது, இருவருமாக தியேட்டருக்குப் போவது என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருங்கள். செய்வதை விரும்பிச் செய்யுங்கள்

. 54. தாம்பத்ய உறவு என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையின் சாவியைப் போன்றது. எந்தக் காரணம் கொண்டும் சாவியைத் தொலைக்காதீர்கள். 

 55. அவ்வப்போது பரிசுகள், பாராட்டுகள் வழங்குங்கள். சின்னச் சின்ன அங்கீகாரங்களிலும், பாராட்டுகளிலும் வாழ்க்கையின் சுவாரஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும். 

 56. ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, இன்னொருவர் கேட்டுக் கொண்டே இருப்பது ஆரோக்கியமான உரையாடல் அல்ல. எனவே, நிறைய பேசுங்கள்.. நிறைய கேளுங்கள். இரண்டும் முக்கியம்.

 57. உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும் அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை. 

58. மன்னிப்புக் கேட்பது, கொடுப்பது.. இரண்டும் சகஜமாக இருக்கட்டும். 'எப்படி நான் போய் மன்னிப்புக் கேட்பது' எனும் வீண் ஈகோவை விட்டு ஒழியுங்கள். அதேபோல மன்னிப்புக் கேட்டால் விநாடிகூட தாமதிக்காமல் மன்னித்துவிடுங்கள். உடனே அந்தப் பிழையை மறந்தும் விடுங்கள்.

 59. கடந்து சென்ற கசப்பான நிகழ்ச்சிகளை, உரையாடல்களை 'குத்திக் காட்டி'ப் பேசாதீர்கள். இவை ஆரோக்கியமான உரையாடல்களுக்குக் கொள்ளி வைக்கும்.

 60. ஒருவர் கோபமாக இருந்தால் அடுத்த நபர் கொஞ்சம் தணிந்து போகவேண்டும். சண்டைக்குச் சண்டை போட்டால் குடும்ப வாழ்க்கை அதோகதிதான். உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்!

 61. தரமான அன்புக்குரிய தூரத்துச் சொந்தக்காரர்களின் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இவை ஆனந்தத்தின் உற்சாக ஊற்றுகளை கண் திறந்துவிடும். 

62. 'தினமும் யாருக்காவது ஒரு நல்லது செய்வேன்' என முடிவெடுங்கள். அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதிலுள்ள ஆனந்தம் அலாதியானது. 
 
 63. பொறாமையைத் தூக்கி கடலில் போடுங்கள். அடுத்தவர்களின் உயர்வில் நீங்கள் மகிழுங்கள். ஆனந்தம், உங்களுக்கு நிரந்தரமாகும். 

 64. உச்சாணிக் கொம்புக்கு ஆனந்தம் தேடி வராது. ஆனந்தம் நதி போல. நடப்பவனுக்கே பயன்படும். பறப்பவனுக்கு அல்ல! எனவே, 'நான் உயர்ந்தவன்' எனும் எண்ணத்தைக் கைவிடுங்கள்.

 65. கடந்த கால சிந்தனைகளிலேயே மூழ்கி விடாதீர்கள். நிகழ்காலத்தின் நிஜங்களில் வாழுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையாக எதிர்கொள்ளுங்கள்.

 66. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என உங்கள் நலம் விரும்பிகளுடன் அதிக நேரம் செலவிடுவது ஆரோக்கியமானது.

 67. நிராகரிக்கப்பட்ட முதியவர்களைச் சந்திக்க முடிந்தால் மிகவும் நல்லது. அது உங்களுக்கு மனநிறைவையும் அவர்களுக்கு ஆனந்தத்தையும் தரும். 

 68. விஷத் தண்ணீர் ஊற்றினால் ஆனந்தப் பூக்கள் மலராது. எனவே... குறை கூறுவது, பிறரை நோகடிப்பது, மற்றவர்களை எதிரிகளாக்குவது என தேவையற்ற செயல்களை விட்டுத் தள்ளுங்கள்.

 69. 'அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்' என்பதை விட்டுத் தள்ளுங்கள். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை அட்ஜஸ்ட் செய்யப்பட்ட வாழ்க்கை. உங்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை.

 70. அடுத்தவர்களோடு உங்களை ஒப்பீடு செய்வதை விட்டு விடுங்கள். 'நாம்தான் பெஸ்ட்' என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள். தன்னம்பிக்கை தலைக்கனம் ஆகிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங் கள். 

71. அடுத்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தேவையின்றி நுழையாதீர்கள். உங்களுடைய ஆலோசனையைக் கேட்டாலொழிய, 'உதவுகிறேன் பேர்வழி' என அவர்களுடைய உள் விவகாரங்களைக் கிளறாதீர்கள்.

 72. பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருக்காமல், முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துங்கள். சில பிரச்னைகள் கழுதை சுமக்கும் பொதியைப் போன்றது! இறக்கி வைத்து விட்டு நடையைக் கட்டுங்கள். நட்பைக் கொண்டாடுங்கள்! 

 73. உற்சாகமானவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். 'அது நடக்காது', 'இது முடியாது' என எதற்கெடுத்தாலும் தடை சொல்பவர்களை ஒதுக்கி வையுங்கள்.

 74. உங்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் நபர்களிடம் 'ஸாரி' சொல்லிவிட்டு நட்பைத் துண்டித்து விடுங்கள்.

 75. நட்பு என்பது பண்டமாற்றுப் பொருள் அல்ல. அது இயல்பாக வழியும் அருவி போன்றது. எனவே, எந்த ஆதாயமும் எதிர்பாராமல் நட்பு பாராட்டுங்கள். 
 
76. 'தோழி என்ன நினைப்பாளோ?' என அவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள். நல்ல 'நலம் விரும்பி'யாக இருங்கள்... நல்ல 'விசிறி'யாக அல்ல. 

  77. நண்பர்களுக்குள் பகிரப்படுவது உச்சபட்ச நம்பிக்கை உரையாடல்கள். எனவே, வெளியே அவற்றை அம்பலப்படுத்தாதீர்கள். 

78. நண்பர்களிடம் வெளிப்படையாக, உண்மையாக இருங்கள். நட்பில் போலித்தனம் தேவைஇல்லை.

 79. புதிய நபர்களைப் பார்த்தால் பேசத் தயங்காதீர்கள். ஒரு புன்னகை, ஒரு உரையாடல், ஒரு 'ஹாய்'... இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல நண்பனை சம்பாதித்துத் தரக் கூடும்.

 80. எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

 81. வெறும் பேச்சுடன் விலகிக் கொள்ளாமல், நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், தேவைப்படும் நேரங்களில் அருகில் இருப்பதும் உங்கள் நட்பை இன்னும் அர்த்தப்படுத்தும்.

 82. நல்ல நட்பு மனதை உற்சாகமூட்டும். சோர்வடையச் செய்வதும், தன்னம்பிக் கையைக் குலைப்பதும் நல்ல நட்பாக இருக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

83. அடிக்கடி நண்பர்களை நேரில் சந்தியுங்கள். நேரில் சந்திக்கும் நட்பு ஆரோக்கியமாக வளரும். 

 84. நல்ல நண்பர்களுக்கான முக்கியவத்துவத்தைக் குறைத்து, அவர்களை கடைசியில் தள்ளாதீர்கள். நண்பர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்கள். உங்களின் சின்னச் சின்ன வெற்றிகளும் அவர்களால் கொண்டாடப்படும். ஆரோக்கியமும் ஆனந்தமே!

 85. ஆரோக்கியமான உடல் இல்லையேல் ஆனந்தமாக இருப்பது ஏது?! உங்கள் திட்டங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற ஆரோக்கியமே அஸ்திவாரம். அந்தப் புரிதலே முதல் படி. 

 86. ஓய்வெடுக்காத உடல், நோய்களின் கூடாரமாகிவிடும். எனவே, தேவையான அளவு ஓய்வெடுங்கள்.

 87. சோம்பலான மனம் சோர்வான உடலைத் தரும். நடப்பது, ஓடுவது, நடனம், நீச்சல், சைக்கிளிங் என ஏதாவது ஒரு உற்சாகமான செயலை உடற்பயிற்சியாக்குங்கள். 

 88. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிய, ஆனால் பலரும் செய்யாத ஒரு செயல் இது. அதிக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியம். 

 89. எக்காரணம் கொண்டும் காலை, மதியம், இரவு உணவுகளை 'ஸ்கிப்' செய்து, சோர்வை சம்பாதிக்காதீர்கள். பெட்ரோல் போட்டால்தான் வண்டி ஓடும்! 

 90. நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற 'ஜங்க்' உணவுகளை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

 91. குழந்தைகளைப் பாராட்டவும், உற்சாகமூட்டவும் சாக்லெட்கள், சிப்ஸ் வகைகளைக் கொடுத்துப் பழக்காதீர்கள். 
 
 92. டி.வி. பார்த்துக்கொண்டே வெந்ததை விழுங்காமல், தினமும் அட்லீஸ்ட் இரவு உணவையாவது வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். ஆனந்தமும், உற்சாகமும், ஆரோக்கியமும் தங்கும். 

93. உப்பு, எண்ணெயை உணவில் குறைத்துப் பழகுங்கள். அவை, உங்கள் ஆரோக்கியத்தின் எதிரி. 

 94. புகை, மது, அதிக காபி போன்றவை ஆரோக்கியமான உடலின் எதிரிகள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் நிறுத்துங்கள்.

 95. மன அழுத்தத்தைக் குறையுங்கள். யோகா, தியானம், ஆன்மிகம் என உங்கள் மனதை அமைதிப்படுத்துபவற்றில் கவனம் செலுத்துங்கள். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா...' 

 96. பேச்சிலும் செயலிலும் உண்மையைப் பின்பற்றுபவர்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அமைவது உறுதி. பொய் பேசுபவர்களுக்கு ஆனந்தம் அந்நியமாகிவிடும். நீங்கள் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையும் சதா உங்களைத் துரத்திக் கொண்டிருக்கும். மற்றவர்களால் கண்டறியப்படும் உங்களின் சிறு பொய்கூட, சமூகத்தில் நீங்கள் பல காலம் சம்பாதித்து வைத்திருந்த நன் மதிப்பை பாழ் செய்துவிடும். 

 97. கடந்தகால கவலைகள், சோகங்கள், அவமானங்கள் போன்ற நிகழ்வுகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதில், பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, 'எதிர்காலத்தில் நோய் வந்துவிடுமோ, வேலை போய்விடுமோ' என கற்பனையான பயம் முன்பாக மண்டிட்டு பதறி, வாழும் நிகழ்காலத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். 'லிவ் த மொமென்ட்' என்பார்கள். இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்.

 98. வரவுக்கு ஏற்ற செலவு என்பது மிக முக்கியம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை, பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் எந்த தேதியில் வரும் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிந்துகொள்ள இயலுமென்பதால், அந்த செலவுகளுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே சேமியுங்கள். கூடவே, கடன் இல்லா வாழ்க்கையே ஒரு பெரிய நிம்மதிதான். தேவைக்கும், பேராசைக்கும் (Need, Greed) உள்ள வித்தியாசம் அறிந்திருப்பதும் நல்லது. 

99. பெற்றோர்களை மதியுங்கள். குறிப்பாக வயதான காலத்தில் அருகில் வைத்துப் பராமரியுங்கள். அவர்கள் மறைவுக்கு பிறகும் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மனநிறைவோடு வாழலாம்.

 100. உங்களை நேசிக்க, மதிக்க மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே உங்களைக் கொண்டாடுங்கள், உங்களை எப்போதும் மனதுக்குள் உயர்வாகவே நினையுங்கள். அதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடை ஆபரணங்களால் உடலை அலங்காரம் செய்வதுடன் மறக்காமல் முகத்தில் சிரிப்பை அணிந்து கொள்ளுங்கள். 

 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப்போல, நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்முடைய செயல்களே தீர்மானிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதன் ஒவ்வொரு எல்லைக் கல்லையும் கொண்டாடுங்கள். பயணம் நிறைவாக முடியும்!

Thursday, March 1, 2012

சூரிய ஒளி மின்சாரம்


தடையில்லா நிரந்தர சூரிய ஒளி  இலவச மின்சாரம்!

அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்த்தபடி பெற்று அதில் இந்த சோலார் பனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.


நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! 

Monday, February 27, 2012

எது சந்தோஷம்



சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறதுஎல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச் செய்து கொண்டே போனால் / எந்தச் சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது
.
ஓட்டைவாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ/ அதேமாதிரி இதுபோல திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தஙகாது.அவர்களின் மனம் சோகமயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப்படும்.

 வாளியில் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டால் ஒரு அளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பிவிடுவது போல்/ மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை அழித்துவிட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.இது கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும் என்று மண்டைக்குள் சில விஷயஙகளை நம் மனது ஏற்றுக் கொள்கிறது.

அந்த இதுகள் தான் மனதில் கரும் புள்ளிகள்.

சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா போக விசா கிடைத்தால்/ அதுதான் சந்தோஷம். அதாவது விசா கிடைக்கும்வரை நான் சந்தோஷப்படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன்... என்று அர்த்தம் ! ஆம்... வருஙகாலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப்போகிறது என்று சொல்லிக்கொண்டு/
நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷஙகளை ஓட்டை வாளியைப் போல/ இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள் !

இப்படிப்பட்ட பிளைண்ட் ஸ்பாட் மனமுடைய இளைஞர்களுக்கு/ அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. விசா கிடைத்த மறுகணமே/ அமெரிக்காவில்  வேலை கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும் என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச்
சொல்லி/இவர்களே தஙகளின் சந்தோஷஙகளை மீண்டும் ஒத்திப் போட்டுவிடுவார்கள்.

சரி... அமெரிக்காவில் வேலையும் கிடைத்துவிட்டது. அப்போதாவது
சந்தோஷப்படுவார்களா கிரீன் கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை என்பார்கள்.

அதுவும் கிடைத்துவிட்டால்அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா/ அம்மா/ அக்கா/ தஙகை/ மாமா/ உறவினர்கள்/ உற்றார்கள்/ நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லி/ மீண்டும் தஙகளின்சந்தோஷத்தை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்கள்/ சந்தோஷம் என்பது கடைகளில்
விற்பனையாகிறது என்ற கருத்து உடையவர்கள். ஆம்... அவர்களுக்கு சிகரெட்/ மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும்போது/ ரமண மகரிஷி சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.

வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து/தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்

 ரோட்டில் ஏற்கெனவே திரிந்துகொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதஙகள்காய்ந்த எலும்பு என்பதால்/ அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய்/ அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது

நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு/ ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருசித்த நாயோ/ ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர்/ மடநாயே ! அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் ! என்று சொல்ல... 

வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை ! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே/ இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது ! என்று சொல்லி/காய்ந்த எலும்பைப் மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது. தன்னையே அழித்துகொண்டு/ ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷஙகளைத் தேடிடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

சிந்தித்துப் பாருஙகள்... காய்ந்து போன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷ த்துக்கும் சிகரெட்/ மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது

Tuesday, February 21, 2012

தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணங்கள்



உடலை வளர்த்த பஞ்ச பூதங்களும் உயிர் பிரிந்த பின் பஞ்ச பூத பெருஞ் சக்திகளுடனே சேர்ந்துவிடும்.இந்த பஞ்ச பூத சக்திகளை பிரியாமல் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோமோ,அவ்வளவு காலம் உயிர் உடலில் நிலைத்திருக்கும்.

 அவைகளில் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள் (நோய்கள்) உண்டாகா!!! அந்த வழிகளையே கீழே விவரித்திருக்கிறேன்.

உணவு(மண்):-

):-சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்

):-பசி இல்லாத போது சாப்பிடக் கூடாது.

):- உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்

.):- நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவைகளையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.

):- சாப்பிடும் பொழுது கண்களை மூடி உதட்டை பிளக்காமல் (வாயை மூடியபடி மெல்ல வேண்டும்) மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.

 ஊ):- சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக் கூடாது.

):- சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று முறை உள்ளங் கையில் நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

 ஏ):- குளித்த பின் 45 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட பிறகு 2 1/2 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.

 ஐ):-சாப்பிடும் முன் கை, கால், முகம் கண்டிப்பாக கழுவ வேண்டும்.

):-டி.வி பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

):- பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.

):-கால்களைத் தொங்க வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது.

):- அம்மா தன் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது.

):- புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடக் கூடாது.

):-முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.குடி தண்ணீர்

(நீர்):-):- தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.

):-தாகம் எடுத்த உடனே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

):- மினரல் வாட்டர் பயன் படுத்தக் கூடாது.

):- நீரை பில்டர் செய்யக் கூடாது.

):-நீரை மண் பானையில் குறைந்தது 2 மணி நேரம் வைத்திருந்து பின் பயன் படுத்த வேண்டும்.

):- தாகம் இல்லாமல் நீர் அருந்தக் கூடாது.

):- சிறுநீர் கழித்தால் உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.

):- நீரை அண்ணாந்து குடிக்கக் கூடாது. மெதுவாக சப்பி குடிக்க வேண்டும்.

 ஓய்வு தூக்கம் (ஆகாயம்):

):- வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

):-டீ, காபி குடிக்க கூடாது.

):- வெறும் தரையில் படுக்கக் கூடாது.

):- உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.

):-மனதுக்கும், புத்திக்கும் வேலை கொடுப்பவர்கள் குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

):- தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

):- இரவில் பல்விளக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

):- தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

):- தலையில் உச்சிக்கும்,சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

காற்று (வாயு):-

):- கொசுவர்த்தி,ஆல் அவுட்,குட் நைட் பயன்படுத்த கூடாது.

):-வீடு, அலுவகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும்,எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும் .

):- தூங்கும் போது ஜன்னல்களை அடைத்து வைத்து தூங்கக் கூடாது.

):- கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.

உழைப்பு (நெருப்பு):-

):- பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

): A/c Machine 37'C ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

): உழைப்புக்கேற்ற உணவு (அல்லது) உணவுக்கேற்ற உழைப்பு வேண்டும்.

):-தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புக்களுக்கும் வேலை தர வேண்டும்.

):-இரத்தம் ஓட இதயம் உதவும்.ஆனால் நிணநீர் ஓட்டம் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும்.

):- உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் நிணநீர் ஓட்டம் இருக்காது.இதுதான் பல நோய்களுக்கு காரணம் .

ஐந்து திபேத்திய யோக அசைவுகளைச் செய்யுங்கள்.அவை உடலில் பல வித்தியாசங்களை உண்டாக்கும். நோயிலிருந்து விடுவிக்கும். எந்தக் காரியமானாலும் இருபத்தியோரு முறை இறை சன்னதியை நமது முன்னோர்கள் சுற்றச் சொல்வார்கள், அதயேதான் திபேத்திய யோக முறைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்

ஹீலர் பாஸ்கர் என்பவர் மருந்தின்றி நம்மை நாமே குணப்படுத்திக் கொள்ளும் சுய சிகிச்சை வழியினை வீடியோ மூலம் சொல்லிக் கொடுக்கிறார். தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை. இரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்" என்பது தாத்தா காலத்து நாட்டு வைத்தியர்கள் முதல் தாது புஷ்டி லேகியம் விற்கும் தெருவோர மருத்துவர்!வரை கூறகேட்டு சலித்துப்போன வார்த்தைகள் தான்.


 ஆனால் அதையே அனாடமி பாடத்தை நாழு மணி நேரம் நகைச்சுவையோடு விளக்கி நம்மை நம்பும்படி செய்கிறார் ஹீலர் பாஸ்கர் என்பது தான் விஷேசம். இந்த சிகிச்சையே எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் கூட உடற்கூறின் அடிப்படையை எளிமையாக விளங்கிக் கொள்ள பாஸ்கரின் கேசட்டுகளை கேட்களாம்.

Very Interesting. 

 பிறகு உண்ணல், பருகள், உறக்கம், சுவாசம் போன்றவற்றை நெறிப்படுத்தும் எளிய போதனைகளை தருகிறார்
 
சிற்சில இடங்களில் நேருடினாலும், நாமறிந்த அரைகுறை அனாடமி அறிவுக்கு அவர் சொல்வது தவறாகப் படவில்லை.


அதே நேரம் ஆரம்பம் முதல் வரிசையாக அனைத்து கேசட்டுகளையும் பார்க்க வேண்டியது கட்டாய அவசியம். இல்லை என்றால் பூ.. இவ்வளவு தானா என அலட்சியம் கொள்ள நேரிடலாம்
 
நானே இன்னும் முழுமையாக பரிசோதித்தறியா ஒன்றை அவசர அவசரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இந்த கோரிக்கையை முன்வைக்கத்தான்.எனது அன்பான கோரிக்கை: ஏற்கனவே அதை செய்து பார்த்தவர்கள் உங்கள் அனுபவத்தை பதியுங்கள்.

புதியவர்கள் முயலுங்கள் இன்னும் உங்கள் அனுபவத்தை கூறுங்கள்
 
தயவு செய்து சிரமம் பாராமல் உங்கள் அனுபவத்தை கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்; அப்பொருள்  மெய்பொருள்  காண்பதறிவு" என்பதற்காக.

கால் காசு செலவு இல்லா இந்த சிகிச்சைப் பற்றிய 'மெய்பொருளை' நமது மெய்யே சொல்லட்டுமே.
 

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள் ?



தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45நிமிடங்களுக்கு உணவோ,நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம். காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்முதியோர், நோயாளிகள் மற்றும் 4டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம்.

 மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.

புற்றுநோய் - 180 நாட்கள்.

காசநோய் - 90 நாட்கள்.
 

பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.


சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய் தான். எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட

 இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்து ள்ளதுஇது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதி காலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை
 
.
அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்

புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்

 இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசிய மில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.  

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.  

அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்
 

Friday, February 17, 2012

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறை




மருந்து மாத்திரைகளை விட உணவு முறைகளே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. பாகற்காய், சோற்றுக்கற்றாழை முதலியவற்றின் மருத்துவ குணங்களை இந்த கட்டுரையில் காணலாம். 

சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் மாத்திரை சாப்பிடாமல் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. அதற்கு சில பழங்களையும், காய்கறிகளையும், மூலிகைகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். 

பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், கோவைக்காய் , சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், மஞ்சள் முதலியவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதே நேரத்தில் கூடுதலாக உள்ள சர்க்கரையின் அளவை மட்டுமே குறைக்கும். 

பாகற்காய் : 

பாகற்காயில் 3 வகை உண்டு. பந்தலில் தொங்கக்கூடிய பெரிய பாகற்காய் கொம்பை பாகற்காய், தரையில் படர்ந்த நிலையில் காய்க்கும் மீதி பாகற்காய். கொடியில் கிடைக்கும் வீரிய ரக பாகற்காய் ஆகியவை உள்ளன. இந்த 3 வகை பாகற்காய்களுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கக் கூடியவை ஆகும். பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் சேர்த்து சமைத்தல் கசப்பு தன்மை குறையும். 

அதேபோல, முட்டை வெள்ளைக்கரு அல்லது பருப்பும் சேர்த்தும் சமைக்கலாம். பாகற்காய் நல்ல நார்ச்சத்து கொண்டதும் ஆகும். மேலும், பச்சைப் பாகற்காயை அரிந்து உப்பு போட்டுக் காயவைத்து வற்றல் ஆக்கி பொறித்தும் சாப்பிடலாம். அது தவிர, பாகற்காயை விருப்பும் அளவுக்கு சாப்பிடலாம். 

கோவைக்காய் : 

இதைபோலத்தான், கோவைக்காயையும் சமைத்தும் சாப்பிடலாம். அதாவது காடுகளில் கிடைக்ககூடிய கோவக்காய் கசப்பாக இருக்கும். ஆனால் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய புதிய ரகக் கோவைக்காய் கசப்பு இல்லாமல் வெள்ளரிக்காய் போல உள்ளது. அதை சமைத்து சாப்பிடலாம். இதுவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய நல்ல நார்ச்சத்துள்ள காய் ஆகும். 

சோற்றுக்கற்றாழை : 

சோற்றுக்கற்றாழை கிராமப்புறங்களில் எளிதில் கிடைக்கக்கூடியது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் சோற்றுக்கற்றாழையின் மேல்தேலை நீக்கி உள்ளே உள்ள அல்வா போன்ற சதைப்பற்றை எடுத்து நான்கைந்து முறை கழுவி மருந்து போல் தினமும் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். இது கசப்பாக இருக்கும். இதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் மிக நல்லது. மோரை கலந்தும் சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் கசப்பு தன்மை எளிதில் குறையும். இதை சாப்பிடுவதால் சர்க்கரை நோயும் மிகவும் கட்டுப்படும். தலைமுடி உதிர்தலும் நிற்கும், முடியும் வளரும். நகர்புறத்தில் உள்ளவர்கள் தொட்டிகளில் வளர்க்கலாம். எளிதில் வளரக்கூடியது. பறித்த சோற்றுக் கற்றாழையும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இது வயிற்றுப்புண்ணுக்கும் மாமருந்தாக உள்ளது. 

வெந்தையம் : 

வெந்தையம் எளிதில் கிடைக்ககூடியது. வெந்தயத்தை தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, ஒரு ஸ்பூன் தினமும் மோர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெந்தையத்தை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வாயில் மென்று சாப்பிடலாம். அதிக அளவு கசக்காது. இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தையத்தை முளைகட்டி உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். இது எவ்வளவு சாப்பிட்டாலும் நல்லதுதான். பாதிப்பு இல்லை . சளிப்பிடிக்கும் தன்மையுள்ளவர்கள் ஊற வைத்து சாப்பிடக்கூடாது. தினமும் குழப்பு தாளிக்கும் போது வெந்தயத்தை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயக்கீரை உருவாக்கி அதை பொறியலாக்கி சாப்பிடலாம் வெந்தயம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நன்றாக குறையும். குடல்புண் ஆறும். வாய்புண் ஆறும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதில் புழுங்கல் அரிசி மாவு கலந்து அதை களியாக செய்து சாப்பிடலாம். 

நாவல்பழம் - கொட்டை : 

நாவல்பழம் நாவல் கொட்டை ஆகிய இரண்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. நாவல்பழம் கிடைக்கும் சிசன்களில் சாப்பிடவேண்டும். சாப்பிடும் போது பழம் மட்டுமல்லாமல் அதன் கொட்டையையும் மென்று சாப்பிடலாம். சீசன் அல்லாத நேரங்களில் நாவல் பழக்கொட்டை பொடியை கடைகளில் வாங்கி தினமும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும். 

பூண்டு : 

நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு ஆகியவை உள்ளன. இதில் நாட்டுப்பூண்டு மிக மருத்துவகுணம் கொண்டது .குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைகிறது. அன்றாடம் குழம்பில் பூண்டு சேர்க்கலாம். வாரம் ஒருமுறை பூண்டுக்குழம்பு வைத்து சாப்பிடலாம். துவையல், ரசம் ஆகியவற்றிலும் சேர்க்கலாம். காலையில் தினமும் பச்சையாக 2 பூண்டு பல் சாப்பிடலாம். குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக சாப்பிடக்கூடாது. 

வேப்பிலை : 

வேப்பிலை எங்கும் கிடைக்கும் நிலை உள்ளது. தினமும் அல்லது வாரத்திற்கு 5 நாட்கள் வேப்பிலையை 2 கை அளவு பறித்து அதை நன்றாக கழுவி பிறகு 400 மில்லி தண்ணீர் விட்டு அவித்து அதை 100 மில்லியாக வந்த பிறகு அந்த கசாயத்தை ஆற வைத்து குடிக்கலாம். வேப்பிலையை கரைத்தும் குடிக்கலாம். ஆனால் மிகவும் கசக்கும். வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. பச்சையாக வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்பிலையை காயவைத்து அதை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது வேப்பம்பூவை பொறியலாக சமைத்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிக அளவில் குறைக்கும் தன்மை கொண்டது . அது மட்டும் அல்ல குடலில் உள்ள பூச்சிகளும் அழித்து விடும். வேப்பிலை பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. தாம்பத்திய உறவு கொள்ளக்கூடிய வயதில் உள்ள ஆண்கள் வேப்பிலை அதிகம் சேர்த்தால் வீரியம் குறையும் என்று கூறப்படுகிறது. 

மஞ்சள் தூள் : 

மஞ்சள் தூள் அன்றாடம் குழம்பில் சேர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் தூளை அதிக அளவில் குழம்பில் சேர்க்கலாம். அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன் சளிப்பிடிக்கும் தன்மையும் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகும். மேற்கண்டவற்றில் பாகற்காய், வேப்பிலை, சோற்றுக் கற்றாழை, வெந்தயம் ஆகியவை சர்க்கரை நோயை அதிக அளவில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேற்கண்டவற்றில் எதவாது இரண்டை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நலமுடன் வாழலாம். 

அது மட்டுமல்ல முருங்கைக்காய், பார்லி, கோதுமை, பச்சைப்பயறு, பீன்ஸ், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவற்றை நல்லப்படியாக செயல்பட வைக்கிறது. அதனால் சர்க்கரை அளவு குறைகிறது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். 

இவை அனைத்தும் அன்றாடம் நம் உணவில் பயன்படுத்தக்கூடிய ஆகும். எனவே இவற்றை அன்றாட உணவில் பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுபடுத்தி மாத்திரை மருத்து இல்லாமல் நலமுடன் வாழலாம். 

கடுகு




வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

விஷம் வெளியேறும்,

பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை  சாப்பிட்டவர் களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி உட் கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்...

தேனில் கடுகை அரைத்து உட் கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாக்கும்.

கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணப்படுத்தும்

கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும் கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப் பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக  விரைப்பு சீராகும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடி கட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்...

பெற்றோர் சொல்




ன்னை தந்தை நலன் மறந்தாய்டா


சான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா

னியசொல் உன் நாவும் மறந்து போனதேனடா

னமன்றோ தாய் தந்தை வெறுப்பது, அறிவாயடா

டன்பிறந்தார் நலனில் நாட்டம் இல்லை ஏனடா

ன உள்ளம் உயர்ந்ததில்லை உன்னில் நீயும் உணரடா!

ண்சாண் உடம்பில் ஒரு சாண்தான் உதரமடா

ஏன்தான் இதற்காய் பேய்போல் வாழ்வில் ஆட்டமடா

ம்புலன் அடக்காதானை இழிநிலை தேடி வருமடா

ருத்து இல்லான் எம்மையிலும் தாழ்வது திண்ணமடா!

ருயிரில் ஈருயிர் சுமந்தாள் வார்த்தை நினக்கு

டதமாய் கசந்தாலும் உயர்த்தும் கீதையென்று கொள்ளடா.

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...