Total Pageviews

Friday, February 17, 2012

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறை




மருந்து மாத்திரைகளை விட உணவு முறைகளே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. பாகற்காய், சோற்றுக்கற்றாழை முதலியவற்றின் மருத்துவ குணங்களை இந்த கட்டுரையில் காணலாம். 

சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் மாத்திரை சாப்பிடாமல் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. அதற்கு சில பழங்களையும், காய்கறிகளையும், மூலிகைகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். 

பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், கோவைக்காய் , சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், மஞ்சள் முதலியவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதே நேரத்தில் கூடுதலாக உள்ள சர்க்கரையின் அளவை மட்டுமே குறைக்கும். 

பாகற்காய் : 

பாகற்காயில் 3 வகை உண்டு. பந்தலில் தொங்கக்கூடிய பெரிய பாகற்காய் கொம்பை பாகற்காய், தரையில் படர்ந்த நிலையில் காய்க்கும் மீதி பாகற்காய். கொடியில் கிடைக்கும் வீரிய ரக பாகற்காய் ஆகியவை உள்ளன. இந்த 3 வகை பாகற்காய்களுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கக் கூடியவை ஆகும். பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் சேர்த்து சமைத்தல் கசப்பு தன்மை குறையும். 

அதேபோல, முட்டை வெள்ளைக்கரு அல்லது பருப்பும் சேர்த்தும் சமைக்கலாம். பாகற்காய் நல்ல நார்ச்சத்து கொண்டதும் ஆகும். மேலும், பச்சைப் பாகற்காயை அரிந்து உப்பு போட்டுக் காயவைத்து வற்றல் ஆக்கி பொறித்தும் சாப்பிடலாம். அது தவிர, பாகற்காயை விருப்பும் அளவுக்கு சாப்பிடலாம். 

கோவைக்காய் : 

இதைபோலத்தான், கோவைக்காயையும் சமைத்தும் சாப்பிடலாம். அதாவது காடுகளில் கிடைக்ககூடிய கோவக்காய் கசப்பாக இருக்கும். ஆனால் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய புதிய ரகக் கோவைக்காய் கசப்பு இல்லாமல் வெள்ளரிக்காய் போல உள்ளது. அதை சமைத்து சாப்பிடலாம். இதுவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய நல்ல நார்ச்சத்துள்ள காய் ஆகும். 

சோற்றுக்கற்றாழை : 

சோற்றுக்கற்றாழை கிராமப்புறங்களில் எளிதில் கிடைக்கக்கூடியது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் சோற்றுக்கற்றாழையின் மேல்தேலை நீக்கி உள்ளே உள்ள அல்வா போன்ற சதைப்பற்றை எடுத்து நான்கைந்து முறை கழுவி மருந்து போல் தினமும் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். இது கசப்பாக இருக்கும். இதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் மிக நல்லது. மோரை கலந்தும் சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் கசப்பு தன்மை எளிதில் குறையும். இதை சாப்பிடுவதால் சர்க்கரை நோயும் மிகவும் கட்டுப்படும். தலைமுடி உதிர்தலும் நிற்கும், முடியும் வளரும். நகர்புறத்தில் உள்ளவர்கள் தொட்டிகளில் வளர்க்கலாம். எளிதில் வளரக்கூடியது. பறித்த சோற்றுக் கற்றாழையும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இது வயிற்றுப்புண்ணுக்கும் மாமருந்தாக உள்ளது. 

வெந்தையம் : 

வெந்தையம் எளிதில் கிடைக்ககூடியது. வெந்தயத்தை தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, ஒரு ஸ்பூன் தினமும் மோர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெந்தையத்தை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வாயில் மென்று சாப்பிடலாம். அதிக அளவு கசக்காது. இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தையத்தை முளைகட்டி உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம். இது எவ்வளவு சாப்பிட்டாலும் நல்லதுதான். பாதிப்பு இல்லை . சளிப்பிடிக்கும் தன்மையுள்ளவர்கள் ஊற வைத்து சாப்பிடக்கூடாது. தினமும் குழப்பு தாளிக்கும் போது வெந்தயத்தை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயக்கீரை உருவாக்கி அதை பொறியலாக்கி சாப்பிடலாம் வெந்தயம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நன்றாக குறையும். குடல்புண் ஆறும். வாய்புண் ஆறும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதில் புழுங்கல் அரிசி மாவு கலந்து அதை களியாக செய்து சாப்பிடலாம். 

நாவல்பழம் - கொட்டை : 

நாவல்பழம் நாவல் கொட்டை ஆகிய இரண்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. நாவல்பழம் கிடைக்கும் சிசன்களில் சாப்பிடவேண்டும். சாப்பிடும் போது பழம் மட்டுமல்லாமல் அதன் கொட்டையையும் மென்று சாப்பிடலாம். சீசன் அல்லாத நேரங்களில் நாவல் பழக்கொட்டை பொடியை கடைகளில் வாங்கி தினமும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும். 

பூண்டு : 

நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு ஆகியவை உள்ளன. இதில் நாட்டுப்பூண்டு மிக மருத்துவகுணம் கொண்டது .குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைகிறது. அன்றாடம் குழம்பில் பூண்டு சேர்க்கலாம். வாரம் ஒருமுறை பூண்டுக்குழம்பு வைத்து சாப்பிடலாம். துவையல், ரசம் ஆகியவற்றிலும் சேர்க்கலாம். காலையில் தினமும் பச்சையாக 2 பூண்டு பல் சாப்பிடலாம். குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக சாப்பிடக்கூடாது. 

வேப்பிலை : 

வேப்பிலை எங்கும் கிடைக்கும் நிலை உள்ளது. தினமும் அல்லது வாரத்திற்கு 5 நாட்கள் வேப்பிலையை 2 கை அளவு பறித்து அதை நன்றாக கழுவி பிறகு 400 மில்லி தண்ணீர் விட்டு அவித்து அதை 100 மில்லியாக வந்த பிறகு அந்த கசாயத்தை ஆற வைத்து குடிக்கலாம். வேப்பிலையை கரைத்தும் குடிக்கலாம். ஆனால் மிகவும் கசக்கும். வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. பச்சையாக வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்பிலையை காயவைத்து அதை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது வேப்பம்பூவை பொறியலாக சமைத்து சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிக அளவில் குறைக்கும் தன்மை கொண்டது . அது மட்டும் அல்ல குடலில் உள்ள பூச்சிகளும் அழித்து விடும். வேப்பிலை பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. தாம்பத்திய உறவு கொள்ளக்கூடிய வயதில் உள்ள ஆண்கள் வேப்பிலை அதிகம் சேர்த்தால் வீரியம் குறையும் என்று கூறப்படுகிறது. 

மஞ்சள் தூள் : 

மஞ்சள் தூள் அன்றாடம் குழம்பில் சேர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் தூளை அதிக அளவில் குழம்பில் சேர்க்கலாம். அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன் சளிப்பிடிக்கும் தன்மையும் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகும். மேற்கண்டவற்றில் பாகற்காய், வேப்பிலை, சோற்றுக் கற்றாழை, வெந்தயம் ஆகியவை சர்க்கரை நோயை அதிக அளவில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேற்கண்டவற்றில் எதவாது இரண்டை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நலமுடன் வாழலாம். 

அது மட்டுமல்ல முருங்கைக்காய், பார்லி, கோதுமை, பச்சைப்பயறு, பீன்ஸ், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவற்றை நல்லப்படியாக செயல்பட வைக்கிறது. அதனால் சர்க்கரை அளவு குறைகிறது என்று சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். 

இவை அனைத்தும் அன்றாடம் நம் உணவில் பயன்படுத்தக்கூடிய ஆகும். எனவே இவற்றை அன்றாட உணவில் பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுபடுத்தி மாத்திரை மருத்து இல்லாமல் நலமுடன் வாழலாம். 

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...