Total Pageviews

Friday, February 17, 2012

பெற்றோர் சொல்




அன்னை தந்தை நலன் மறந்தாய்டா


ஆசான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா

இனியசொல் உன் நாவும் மறந்து போனதேனடா

ஈனமன்றோ தாய் தந்தை வெறுப்பது, அறிவாயடா

உடன்பிறந்தார் நலனில் நாட்டம் இல்லை ஏனடா

ஊன உள்ளம் உயர்ந்ததில்லை உன்னில் நீயும் உணரடா!

எண்சாண் உடம்பில் ஒரு சாண்தான் உதரமடா

ஏன்தான் இதற்காய் பேய்போல் வாழ்வில் ஆட்டமடா

ஐம்புலன் அடக்காதானை இழிநிலை தேடி வருமடா

ஒருத்து இல்லான் எம்மையிலும் தாழ்வது திண்ணமடா!

ஓருயிரில் ஈருயிர் சுமந்தாள் வார்த்தை நினக்கு

ஔடதமாய் கசந்தாலும் உயர்த்தும் கீதையென்று கொள்ளடா.

No comments:

Post a Comment

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் (Easily Digestible Foods)

  எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் (Easily Digestible Foods) செரிமான மண்டலத்திற்கு அதிக வேலை தராமல், உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகின்...