Total Pageviews

Sunday, February 12, 2012

மன நிம்மதி பெறுவது எப்படி?



உங்கள முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோஅழிக்கவோ முடியாது.உங்களது தொழிலும்,உங்களது வாழ்கையும் உங்கள் முன்வினையாலேயே உருவாக்கபடுகிறது.தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஒருபோதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு அடுத்தவரை பழிக்காதீர்கள்.


சூழ்நிலைக்கு  ஏற்ப நாம் மாற வேண்டும்

உங்கள் அமைதியை குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.சூழ்நிலையை மாற்றுவதற்கு பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதைவிட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள்.நீங்கள் மென்மேலும் தூய்மை அடையும் போது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்தவிதத்தில் வளர்ச்சி அடையும்.முயற்சி செய்து பாருங்கள்!


பொறுமை தரும் பலம்

எது நடந்தாலும் அதை பொருத்து கொள்ளுங்கள்.எதைக் குணப்படுத்த முடியாதோ அதை பொறுத்தே ஆகவேண்டும்.மகிழ்ச்சியுடன் சக்தி ங்களிடம் அதிகரிக்கும்.


பொறுப்புகளை என்ன செய்வது?

பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்,தப்பி ஓடப் பார்க்காதீர்கள்.அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது.அதிகமான கவலைகள்தான் வந்துசேரும்."நான் செய்கிறேன்" என்ற ஆணவத்துடன் மென்மேலும் பொறுப்புகளை கூட்டி கொண்டு போகாதீர்கள்.(இதுதான் வம்பை விலைக்கு வாங்குவது).அதிக நேரத்தை பிரார்த்தனை,வழிபாடு மற்றும் த்யானத்தில் செலவிடுங்கள்.மனமே இல்லாதபோதுதான் பூரண திருப்தி கிட்டுகிறது.மனம் என்பது எண்ணங்களின் குவியலே.எண்ணமின்மைதான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.

தியானம் என்னும் அற்புத மருந்து

ஒழுங்கான தியான நேரத்தை கடைபிடியுங்கள்.தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது.மனதில் சஞ்சலமற்ற தன்மையை உண்டாக்குகிறது. முன்போல மனம் அலைந்து திரியாது.தியானம் உங்களது பல்வேறு திறமைகளை வளர்த்து குறைந்த நேரத்திலேயே வேலைகளை செய்வதற்கான ஆற்றலை வளர்க்கிறது.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...