Total Pageviews

Sunday, February 5, 2012

உங்கள பயணம் இனிமையானதாக அமைய



இன்று பயணங்கள் தவிர்க்க முடியதாகிவிட்டது.ஆனால் அந்த பயணம் இனிமையானதாக அமையுமா என்பது நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.

 குறிப்பாக, பயணங்களின்போது வாந்தி, காய்ச்சல், தலைவலி போன்ற தொந்தரவுகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும்.

இதற்கான தீர்வுகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சங்குமணி கூறியதாவது :பயணத்தின்போது, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அடிவயிறு வலி, நீர்க்கடுப்பு ஏற்படும்.

இருமல், சளி, காய்ச்சல்:பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் இருமல், சளி, காய்ச்சல் ஏற்படும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதாலும்,அவர்கள் இருமும்போதும்,ஒரே அறையில் அவர்களுடன் தங்குவதாலும் இந்நோய் பரவலாம். மாஸ்க் அணிவதாலும், நோயாளி பயன்படுத்திய பேனா, பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் இந்நோயை வராமல் தடுக்கும்.

வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி : பயணம் செய்யும் போது மிக அதிகமானவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். "இ-கோலி' என்ற பாக்டீரியாவாலும், "ரோட்வைரஸ்' என்ற வைரஸாலும், "ஜியார்டைசிஸ்' என்பதாலும் வருகிறது. உணவு, குடிநீர்தான் முக்கிய காரணம். இதை தடுக்க, வேகாத உணவுகளை உண்ணக்கூடாது. பச்சை உணவுகளை உண்ணக்கூடாது.

 தெருவில் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது. கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டும்தான் பருகவேண்டும்.

ஐஸ்கட்டிகளில் குளிரூட்டப்பட்ட பானங்களை பருகக்கூடாது.

தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி: உயரமான மலைபகுதிகளுக்கு செல்லும்போதும், கார், பஸ் பயணத்தின்போது கட்டாயம் தலைசுற்றல் ஏற்படும். இதை தடுக்க, பயணத்தின்போது நிறைய சாப்பிடக்கூடாது.

எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுகள்,திண்பண்டங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. டாக்டர் ஆலோசனைபடி, மாத்திரைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பயணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பே அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அடிவயிறுவலி, நீர்க்கடுப்பு: பயணம் செய்யும் இடமும், தங்கும் இடமும் புழுக்கமாக இருந்தால் நீர்க்கடுப்பு ஏற்படும். பயணத்தின்போது சரியான அளவு தண்ணீர் குடிக்காததாலும் இந்த பாதிப்பு ஏற்படும். பயணத்தின்போது இரண்டு முதல் மூன்று லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அருந்த வேண்டும்.

பயண முதலுதவி பெட்டி: செல்லும் இடம், தங்கும் நாட்கள், பயணத்தின் தன்மை, தங்கும் இடத்தில் உள்ள மருத்துவ வசதிகள், தங்கும் இடங்களில் உள்ள வியாதிகளை கணக்கிட்டு,முதலுதவி பெட்டியில் வைக்கும் மருந்துகளின் அளவும்,மருந்து தன்மையும் மாறலாம்.

காய்சல், தலைவலிக்கு Paracetamol மாத்திரை, வாந்திக்கு Domperidone, Metaclopromide மாத்திரை,வயிறு எரிச்சல், வயிறு வலிக்கு  மாத்திரை, வயிற்றுபோக்கிற்கு Pantaprazole, Rabiprazole, Ranitidine மாத்திரை, தலைசுற்றுக்கு Lopramide, codiene sulphate, metronidazole மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இம்மாத்திரைகளை டாக்டர் மருந்துச்சீட்டுடன், மருந்து அளவு மற்றும் மருந்து சாப்பிட வேண்டிய நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பயணத்தின்போது காயம் ஏற்பட்டால், களிம்பு, மருந்துகள், பிளாஸ்டர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு: அதிகநேர பயணம், மோசமான ரோடு, கடும் வெயிலில் பயணத்தை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் 36வது வாரம் வரை உள்நாட்டு சிறிய பயணங்கள் மேற்கொள்ளலாம். 32 வாரங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது.

மாரடைப்பு நோயாளிகளா நீங்கள்?விமானம் பயணம் மேற் கொள்ளும் போது,உங்களது உடல்நிலை குறித்த தகவல்களை டாக்டர் கைப்பட எழுதிய சான்றிதழ் டெலிபோன் எண்ணுடன் இருக்க வேண்டும். நீங்கள் "பேஸ்மேக்கர்' வைத்து இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். ஜன்னல் இருக்கைகளை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து,ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை விமானத்துக்குள்ளேயே நடக்கலாம்
.
நுரையீரல் நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக சளி, மூச்சு முற்றல், நுரையீரல் தமனி அழுத்தம், நெஞ்சக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், மூன்று மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் "இன்ஹேலர்' வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டியவை : அதிக நேரம் விமான பயணம் மேற்கொள்ளும்போது, சர்வதேச நேர மாற்றங்களை குறிந்து உணவு உட்கொள்ள வேண்டும். தவறினால், சர்க்கரை குறைநிலை ஏற்படலாம்.

 இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இன்சுலின் ஊசி, குளூகோஸ் மானிட்டர், சாக்லெட் தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் ரத்தஅழுத்தம் உள்ளவரா? பயணத்தின்போது ரத்தஅழுத்தத்திற்குரிய மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். பயணத்திற்கு முன்பு டாக்டரிடம் ரத்தஅழுத்தம் சரியான அளவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Source: Dinamalar

சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும்  நாடு சீர்குலைந்து அழிந்துவிடும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...