Total Pageviews

Monday, February 27, 2012

எது சந்தோஷம்



சந்தோஷத்துக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கிறதுஎல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச் செய்து கொண்டே போனால் / எந்தச் சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது
.
ஓட்டைவாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ/ அதேமாதிரி இதுபோல திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தஙகாது.அவர்களின் மனம் சோகமயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப்படும்.

 வாளியில் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டால் ஒரு அளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பிவிடுவது போல்/ மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை அழித்துவிட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.இது கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும் என்று மண்டைக்குள் சில விஷயஙகளை நம் மனது ஏற்றுக் கொள்கிறது.

அந்த இதுகள் தான் மனதில் கரும் புள்ளிகள்.

சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்த்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கா போக விசா கிடைத்தால்/ அதுதான் சந்தோஷம். அதாவது விசா கிடைக்கும்வரை நான் சந்தோஷப்படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன்... என்று அர்த்தம் ! ஆம்... வருஙகாலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப்போகிறது என்று சொல்லிக்கொண்டு/
நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷஙகளை ஓட்டை வாளியைப் போல/ இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள் !

இப்படிப்பட்ட பிளைண்ட் ஸ்பாட் மனமுடைய இளைஞர்களுக்கு/ அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. விசா கிடைத்த மறுகணமே/ அமெரிக்காவில்  வேலை கிடைத்தால்தான் என் மனசு சந்தோஷப்படும் என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச்
சொல்லி/இவர்களே தஙகளின் சந்தோஷஙகளை மீண்டும் ஒத்திப் போட்டுவிடுவார்கள்.

சரி... அமெரிக்காவில் வேலையும் கிடைத்துவிட்டது. அப்போதாவது
சந்தோஷப்படுவார்களா கிரீன் கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை என்பார்கள்.

அதுவும் கிடைத்துவிட்டால்அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா/ அம்மா/ அக்கா/ தஙகை/ மாமா/ உறவினர்கள்/ உற்றார்கள்/ நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லி/ மீண்டும் தஙகளின்சந்தோஷத்தை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்கள்/ சந்தோஷம் என்பது கடைகளில்
விற்பனையாகிறது என்ற கருத்து உடையவர்கள். ஆம்... அவர்களுக்கு சிகரெட்/ மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும்போது/ ரமண மகரிஷி சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.

வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து/தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்

 ரோட்டில் ஏற்கெனவே திரிந்துகொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதஙகள்காய்ந்த எலும்பு என்பதால்/ அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய்/ அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது

நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு/ ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருசித்த நாயோ/ ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர்/ மடநாயே ! அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் ! என்று சொல்ல... 

வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை ! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே/ இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது ! என்று சொல்லி/காய்ந்த எலும்பைப் மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது. தன்னையே அழித்துகொண்டு/ ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷஙகளைத் தேடிடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.

சிந்தித்துப் பாருஙகள்... காய்ந்து போன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷ த்துக்கும் சிகரெட்/ மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...