Total Pageviews
Monday, March 21, 2016
இன்ப துன்பம்
மனிதர்களாகிய நமக்கு - தற்சமயம் தங்களுக்கு எந்த எந்த நிகழ்வுகள் அதிக சந்தோசத்தை தருகின்றனவோ அந்த நிகழ்வுகள் தங்களுக்கு பின் நாளில் அதிக துன்பத்தை தருகின்றன.
Friday, March 18, 2016
யார் யார் இரத்த தானம் செய்யலாம்?
🌺நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண் , பெண்.
🌷18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.
🌷குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
👍👍இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?💥
ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,
பெண்கள்
நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.🌷🌷
இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
10 நிமிடம்.👍
இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?🌺🌺
20 நிமிடம்.👍👍
இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?🌸🌸
350 மில்லி.👍👍
(நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
எடுக்கப்படுகிற
இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.🌺
இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?🔥🔥
10 லிருந்து 21 நாட்களில்.🌷
இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?🍁🍁
நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.
பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து
உயிர் காப்பது
நல்லதுதானே?🌺🌺
இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?🔥
நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?🌷
உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்.
💢சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.
💢 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.
💢ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.
💢குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.
💢 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

🌹குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.
🌹பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.
🌹 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்
🌹பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்
🌷 பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
🌷 இதய நோய்கள் _ வேண்டாம்.
🌷 இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.
🌺வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்.
மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.
🌺தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
🌺 நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
🍁மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.
🍁மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.
🍁 காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.
மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?
🔥 சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.
🔥 ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.
🔥 நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.
💦இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.
💦ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
💦இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.
இரத்ததானம்👍👍👍 கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?
💥 நல்ல திரவ உணவை அருந்துங்கள்.
ஹெவி உணவு வேண்டாம்.
💥 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
36 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.
💥 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.

நன்றி.
Thursday, March 17, 2016
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.
எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.
திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.

படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்.....
Wednesday, March 16, 2016
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்க விருப்பதை முன் கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.
பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!
1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]
2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]
3. சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]
*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! (சர்வபூதேஷு சமஹ்-கீதை)
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]
5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]
6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]
7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]
8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]
9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]
10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]
11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]
12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]
13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]
14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]
15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]
கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.
கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும். ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.
Thanks to G.Mohan ! Tamil ! Tamil !

பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”
மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…?
கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது…
பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும்
குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”
“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”
“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?”
“என்னாண்ணே சொல்றீங்க…?”
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”
“ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”
“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”
“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”
“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?
“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”
“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”(அது பேரு மினரல் ஆயில்)
“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”
“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”
“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”
“இல்லைண்ணே..”
“பாரு… உண்மை புரியும்…”
“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”
“ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”
“என்னா தெரியும்…”
“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”
“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”
“முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”
”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”
“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”
“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”
“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”
“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”
“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”
“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”
“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு…
“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”
“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”
“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை”
“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?
Thanks to Thillai !

பென்ஷன்! பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் ,,
மாதச்
சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும்.
பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் ,,
நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது.
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."
Tuesday, March 15, 2016
தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?
நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப் பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது, விளையாடும் போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக் கொண்டு பாடாகப் படுத்திவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை, தசைப்பிடிப்பு!
தசைப்பிடிப்பு என்றால் என்ன?
மனிதனின்
இயக்கத்துக்கு தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தசைகள்
சுருங்கி, தளரும் தன்மை கொண்டவை. இவை, இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை
ஏற்படுத்துவதைத் தசைப்பிடிப்பு என்கிறோம்.
தசைப்பிடிப்பு ஏன்?
உடலில்
அதிக வறட்சியின் காரணமாக, திடீரென தசைகளில் நீர்க்குறைவு ஏற்படுவதாலும்,
மிகவும் சோர்வு அடையும்போது தாதுஉப்புகளின் அளவு குறைவதாலும் தசைப்பிடிப்பு
ஏற்படும்.
கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்யாவிடில், உடலில் ஏற்படும் திடீர் வெப்ப இழப்பைத் தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.
அதிகத் தூரம் பயணம் மேற்கொள்ளும்போது ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்துஇருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.
உடலில்
உள்ள ஒரே உறுப்பை அதிக நேரம் பயன்படுத்தும்போது, தசைப்பிடிப்பு ஏற்பட
வாய்ப்பு உள்ளது.அடிகுழாயில் தொடர்ந்து தண்ணீர் அடிக்கும்போது, கையில்
தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
வாழைக்காய், உருளை போன்ற வாயு நிறைந்த உணவுப் பொருட்கள், உடலில் வாயுவை அதிகரிக்கும். இதன் காரணமாகவும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய அதிகக் காரம், மசாலா வகைகளை தொடர்ந்து உண்பதால், நாளடைவில் தசைப்பிடிப்பு எளிதில் ஏற்படும்.
தசைப்பிடிப்பு ஏற்படும்போது செய்யக் கூடாதவை
நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.
தசைப்பிடிப்பு
ஏற்பட்ட இடத்தில், அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. அந்த
இடத்தில் தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்துத்
தேய்ப்பதால், உள் காயம் ஏற்படும்.
குளிர்ந்த நீரையோ அல்லது குளிர்பானங்களையோ அருந்தக் கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்?
தசைப்பிடிப்பு ஏற்பட்டால் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும்.
சூடாக சுக்கு மல்லி காபி குடிக்கலாம். சுக்கு, வலியைப் போக்கும் தன்மை உடையது.
வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
நல்லெண்ணெயில்
உப்பு கலந்து தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை
வேர்க்கச் செய்ய வேண்டும். குணமாகும் வரை இப்படி ஒரு நாளைக்கு இருமுறை
செய்யலாம்.
அடிபட்டு,
தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, ரத்த ஓட்டம்
நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும். எனவே, அடிபட்ட இடத்தில் எண்ணெயை ஊற்றி,
மிதமாக அல்லது மெதுவாகத் தேய்துவிட வேண்டும்.
முழுமையான குணம் பெற…
கற்பூராதித்
தைலம், முறிவு எண்ணெய், காயத்ரி மேனித் தைலம், நாரயணத் தைலம் ஆகியவற்றை
ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.
தசைப்பிடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சைகள்
‘கிழிச்சல்’முறைப்படி
மருத்துவக் குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் மிதமான வேகத்தில் ஊற்ற
வேண்டும். ‘வத்தி’ முறைப்படி மருத்துவக்குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில்
பாத்தி போல் கட்டி, குறிப்பிட்ட நேரம் தேக்கிவைக்கும் சிகிச்சை நல்ல பலன்
கொடுக்கும்.
ஆமணக்கு,
நொச்சி, கல்யாண முருங்கை, முருங்கை இலை, புங்கன் இலை, புளி இலை, எருக்கம்
இலை, ஊமத்தம் இலை இதனுடன் வாதநாரயண இலை ஆகியவற்றைச் சேர்த்து, வதக்கி ஒரு
துணியில் கட்டி, தினமும் இருமுறை ஒத்தடம் கொடுத்தால், தசைப்பிடிப்பு குணம்
அடையும். இந்த முறைக்கு ‘பத்திரப் போட்டலி அல்லது இலைக் கிழி’ என்று பெயர்.
Thanks to Seythivayal.com
பற்களில் மஞ்சள் கறை நீக்க வழி !
ஒருவரின் அழகை அதிகரித்து
காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக
இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள்
மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல்
பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை
கூறலாம்.
இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு
சென்று பற்களை அடிக்கடி பிளீச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள்.
இப்படி செய்வதால், பற்கள் வெண்மையாகும். ஆனால், பற்களின் ஆரோக்கியம்
கெட்டுவிடும். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க, சில எளிய ஆரோக்கியமான
இயற்கை வழிகள் உள்ளன.
பற்களை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தேய்ந்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தை கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.
தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிங் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது. கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும்.
உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும். சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.
பணம் ஈட்டும் சுலப வழிகள் !
நம் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. ஆனால் அவை நமக்கே தெரிவதில்லை என்பது தான் உண்மை. கீழ்க்கண்ட விஷயங்களில் நமக்கு ஆர்வமும், திறமையும் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்.
* உங்களுக்கு தையல் வேலையோ, எம்பிராய்டரிங்கோ தெரியுமா? பொம்மை செய்வது, ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது என்று ஏதேனும் தெரியுமா? அதையே மூலதனமாக வைத்து நீங்கள் ஏதேனும் சம்பாதிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த வர்களிடம் உங்கள் கைவினைத் திறமை களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்தவற்றை அவர்களுக்கு மாதிரிக்குக் காட்டுங்கள். கொஞ்ச நாட் களில் அவற்றை மலிவு விலைக்கு விற்றுப் பாருங்கள். பிறகு அப்படியே வியாபாரத்தைப் பெருக்கலாம்.
* உங்களுக்கு டைப் ரைட்டிங் தெரியுமா? கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்குத் தெரிந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டைப் ரைட்டிங் வேலைகளைச் செய்து கொடுங்கள்.
* நீங்கள் வீட்டு விலங்குப் பிரியரா? அப்படியானால் கொஞ்சம் இட வசதிக்கு ஏற்பாடு செய்து விட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தலாம். அதில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளை, அவர்கள் ஊருக்குச் செல்லும்போதும், மற்ற தேவையான சந்தர்ப்பங்களிலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம்.
* மெஹந்தி வரைவதில் நீங்கள் கில்லாடியா? உங்கள் வீட்டு வாசலில் ஒரு போர்டு வைத்து விடுங்கள். கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு மெஹந்தி டிசைன் போட்டு விடலாம். வீட்டிலேயே அதற்கான வகுப்பையும் எடுக்கலாம்.
* சாக்லேட், கேக், பிஸ்கட் போன்ற வற்றைத் தயாரிப்பதில் நீங்கள் நிபுணியா? பண்டிகை நாட்களுக்கு, பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என ஆர்டர் எடுத்து அவற்றைச் செய்து விற்கலாம். அருகிலுள்ள பேக்கரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்கலாம்.
* குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இட வசதி இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தலாம். உதவிக்கு ஒன்றிரண்டு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.
* உங்கள் வீட்டில் தோட்டம் போடுகிற அளவுக்கு இட வசதி உண்டா? மொட்டை மாடியாக இருந்தாலும் பரவாயில்லை. காய்கறித் தோட்டம் போடுங்கள். தினசரி சில மணி நேரத்தை அதைப் பராமரிப்பதில் செலவிடுங்கள். உங்கள் வீட்டுக்கான காய்கறிச் செலவை மிச்சப்படுத்தலாம். நீங்களே பயிரிட்ட காய்களை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.
* உங்களுடையது பெரிய வீடா? உபயோகிக்க ஆளில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டை சினிமா மற்றும் டி.வி படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடலாம். தினசரி வாடகை கிடைக்கும்.
* நல்ல குரல் வளம் உள்ளவரா நீங்கள்? பாடகியாகும் அளவுக்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை. படங்களுக்கு, விளம்பரங்களுக்கு, டி.வி தொடர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம். விளம்பர நிறுவனங்களுடன், டி.வி தொடர் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
* எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள வராக இருந்தால் உங்களைக் கவர்கின்ற செய்திகளை, சுவாரசியமாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்.
* படித்த படிப்பு வீணாகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாமே? உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப குறிப்பிட்ட வகுப்புகள் வரை கற்றுத் தரலாம்.
* டெய்லரிங் தெரிந்திருந்தால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்குத் துணிகள் தைத்துக் கொடுக்கலாம். பெரியளவில் தைக்கத் தெரியாவிட்டாலும் கூட மேல் தையல் போட்டுக் கொடுப்பது, ஓரம் அடித்துக் கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து தரலாம்.
பணம் ஈட்டும் தொழில்கள் - உடனடி சப்பாத்தி!
உணவுப் பொருட்கள் தயாரிப்பு எப்போதுமே லாபகரமான தொழில். குறிப்பாக,
உடனடி உணவுகளுக்கான சந்தை அதிகரித்து வருவதால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி
உணவுத் துறை சார்ந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் இந்த வாரம்
நாம் பார்க்கப்போகிற தொழில், உடனடி சப்பாத்தி தயாரிப்பு.
நமது
அன்றாட உணவுப் பழக்கத்தில் சப்பாத்தி இடம் பெற்றுவிட்டது. உடல்நலம்
சார்ந்து மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பதால், மார்க்கெட்டிங்
செய்வதில் பெரிய சிரமங்கள் கிடையாது. நினைத்த நேரத்தில் தயார் செய்து
சாப்பிட முடியும்; இதனால் நேரமும் வேலையும் மிச்சம் என்பதால், இதற்கு நல்ல
வரவேற்பும் இருக்கும்.
தவிர, நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் ஹோட்டல்கள், ஹாஸ்டல்களை
குறிவைத்து இறங்கினாலே போதும் நல்ல வருமானம் பார்க்கலாம். உணவு பொருட்களைப்
பொறுத்தவரை, தரமாகவும், சுவையாகவும் கொடுத்தால் எந்த ஏரியாவிலும் ஜோராக
விற்கலாம்!
தயாரிப்பு முறை!
கோதுமை மாவை மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு மாவை, மாவு
பிசையும் இயந்திரத்தில் கொட்டி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும்
எண்ணெய்விட்டு பிசைந்துகொள்ள வேண்டும்.
பிசையப்பட்ட இந்த மாவை சிறிய
உருண்டைகளாக உருட்டும் இயந்திரத்தில் விட்டு உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த
உருண்டைகளை சப்பாத்தி சுடும் இயந்திரத்தில் இட்டு சப்பாத்தியாகச்
செய்துகொள்ள வேண்டும். தயாரித்த சப்பாத்திகளைக் குளிரவைத்து பாக்கெட்களாக
அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். பேக்கிங் கவரில் தயாரித்த தேதி
மற்றும் பயன்படுத்தும் காலம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.
தேவையான இயந்திரங்கள்!
மாவு பிசையும் இயந்திரம், உருண்டை இயந்திரம், சப்பாத்தி செய்யும்
இயந்திரம், குளிரூட்டும் கன்வேயர்கள், ஏர் கம்ப்ரஸர், தொடர் சீலிங்
இயந்திரம். இந்த இயந்திரங்கள் மொத்தமும் ரூ.7 லட்சத்துக்குள் கிடைக்கும்.
திட்ட மதிப்பீடு! (ரூ.)
இடம் : கட்டடம் வாடகை
இயந்திரங்கள் : 7 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
இயந்திரங்கள் : 7 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில் மானியம் பெற முடியும்.
நமது மூலதனம் (5%): ரூ. 40,000
மானியம் 25% : ரூ.2,00,000
வங்கிக் கடன் 70% :ரூ.5,60,000
மானியம் 25% : ரூ.2,00,000
வங்கிக் கடன் 70% :ரூ.5,60,000
நடைமுறை மூலதனம்: 2 லட்சம் (இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்)
உற்பத்தி!
ஓர் இயந்திரத்தின் மூலம் தினசரி 10 ஆயிரம் சப்பாத்திகள் வரை உற்பத்தி
செய்ய முடியும். நாம் 8,000 சப்பாத்திகள் எனக் கணக்கு வைத்துக்கொள்வோம்.
இதை 800 பாக்கெட்களாக அடைத்துக் கொள்கிறோம். ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.22
முதல் ரூ.25 வரை கிடைக்கிறது. நாம் 25 என்கிற வகையில் வாங்குவதாக
வைத்துக்கொள்வோம். இதனோடு தண்ணீர், உப்பு, எண்ணெய் சேர்க்கும்போது 1,700
கிராம் எடையும், கூடுதலாக ரூ.6 செலவாகும். ஒரு சப்பாத்தி சுமார் 45 கிராம்
எடை என்கிற அளவில் தயாரிக்க வேண்டும். இதன்படி கணக்கிட்டால், நமக்கு 38
சப்பாத்திகள் கிடைக்கும். நாம் 35 சப்பாத்திகள் என்று கணக்கில்
எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, ஒரு சப்பாத்தியின் உற்பத்தி செலவு 88 பைசா.
10 சப்பாத்திகள் வீதம் பேக்கிங் செய்ய ஒரு பாக்கெட்டுக்கு ரூ.2.50
செலவாகும்.
ஒருநாள் மூலப்பொருள்: ரூ.8,000X0.88 = 7,040
பேக்கிங் செலவு : 800X2.5 = 2,000
தினசரி உற்பத்தி செலவு ரூ.9,040 என்கிறபோது மாதம் 25 வேலைநாட்கள் எனக் கொண்டால், மாதத்துக்கு ரூ.2.26 லட்சம் உற்பத்தி செலவாகும்.
பணியாளர்கள்: (ரூ.)
மேற்பார்வையாளர் 1: 12,000
பணியாளர்கள் 3X8: 24,000
விற்பனையாளர்கள்: 2 X 8000 : 16,000
மொத்தம்: 52,000
விற்பனை!
10 சப்பாத்திகள் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.25-க்கு விற்பனை செய்யலாம். (இதை
அதிகபட்சமாக ரூ.40 வரை கடைக்காரர்கள் விற்பனை செய்ய முடியும்) தினசரி 800
பாக்கெட்கள் மூலம் கிடைக்கும் விற்பனை வரவு ரூ.20,000. மாதம் 25
வேலைநாட்கள் என்கிறபோது
மாத வருமானம் ரூ.5 லட்சம்.
மொத்த செலவுகள்! (ரூ.)
வாடகை : 10,000
மூலப்பொருட்கள் : 2,26,000
மின்சாரம் : 10,000
வேலையாட்கள் : 52,000
மூலதனக் கடன் வட்டி (12.5%) : 5,900
கடன் தவணை 60 மாதங்கள்: 9,500
நடைமுறை மூலதன வட்டி(12.5%) : 2,100
இயந்திர பராமரிப்பு : 10,000
மேலாண்மை செலவுகள் : 10,000
தேய்மானம் : 8,800
போக்குவரத்து : 20,000
விற்பனை ஊக்க செலவுகள் : 50,000
மொத்தம் : 4,14,300
மொத்த வரவு : 5,00,000
மொத்த செலவு : 4,14,300
லாபம் : 85,700
மூலப்பொருட்கள் : 2,26,000
மின்சாரம் : 10,000
வேலையாட்கள் : 52,000
மூலதனக் கடன் வட்டி (12.5%) : 5,900
கடன் தவணை 60 மாதங்கள்: 9,500
நடைமுறை மூலதன வட்டி(12.5%) : 2,100
இயந்திர பராமரிப்பு : 10,000
மேலாண்மை செலவுகள் : 10,000
தேய்மானம் : 8,800
போக்குவரத்து : 20,000
விற்பனை ஊக்க செலவுகள் : 50,000
மொத்தம் : 4,14,300
மொத்த வரவு : 5,00,000
மொத்த செலவு : 4,14,300
லாபம் : 85,700
நன்றி-நாணயம் விகடன்
Friday, March 4, 2016
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர் !
மயிலாடுதுறையில் ஒரு மனித நேய டாக்டர்!
81 வயதான ஒரு டாக்டர், அவர் பார்க்கும் சிகிச்சைக்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை. போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.
இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? யார் அவர்?என்ற கேள்விக்கு விடையாக நிற்பவர்தான் டாக்டர் வி.ராமூர்த்தி.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள டாக்டர் ராமமூர்த்தி கிளினிக்கில்தான் இந்த அதிசயம் கடந்த 57 ஆண்டுகளமாக நடந்தேறிவருகிறது.
ஏழை விவசாய குடும்ப பின்னனியில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆகவே மருத்துவத்திற்காக அதிகம் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆரம்பகாலத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தார். அது கூட இவர் கைநீட்டி எப்போதுமே வாங்குவது இல்லை. போகும் போது மேஜை மீது வைத்துவிட்டு போய்விடுவர். அதுதான் இன்று ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.
ஒரு வேளை சாப்பாடு , இரவு 2 இட்லி இதற்கு இந்த 5 ரூபாயே அதிகம் ஆகவே கிராமத்தில் இருந்து வருபவர்கள் பலருக்கு பஸ், சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.
57ஆண்டுகால அனுபவம் காரணமாக ஒரு நோயாளியிடம் 5 நிமிடம் பேசிய உடனேயே நோயாளியின் பிரச்னையை தெரிந்து கொள்வார் 2 நாளைக்கு மட்டுமே மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார். 90 சதவீதம் ஊசி போடுவது கிடையாது. அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளும் விலை மிகக்குறைவாகும். இரண்டு நாளைக்கு வாங்கினாலும் இருபது ரூபாய்தான் பில் வரும். மாத்திரை சாம்பிள்கள் இருந்தால் அதையும் இலவசமாக தந்துவிடுவார். நம்மால் முடியாது, பிரச்னை தீவீரமாக இருக்கிறது என்றால் மட்டும் எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிவிடுவார்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை இடைவிடாமல் நோயாளிகளை கவனித்துவந்தவர், இப்போது மதியம் இடைவௌிவிட்டு பார்க்கிறார். தொழில் பொழுது போக்கு எல்லாமே இவருக்கு மருத்துவம்தான். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மருத்துவர்கள் விடுமுறையில் இருப்பதால் அன்று அவசியம் இவர் கிளினிக்கில் இருப்பார்.
மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் யாருக்கு என்ன உடல் பிரச்னை என்றாலும் முதலில் செல்வது ராமமூர்த்தியிடம்தான். இதனால் அவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது, அவருக்கு தெரியாதவர்களும் யாரும் கிடையாது.
''எளிமையின் உறைவிடமான காமராஜரே என் எளிமையைப் பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் அதைவிட பெரிய பாராட்டு பதக்கம் எதுவும் தேவையில்லை. இன்னும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் என்னைத்தேடிவரும் ஏழை மக்களுக்காக இரங்குவேன்... இயங்குவேன்.''.
வாழ்த்துக்கள் ஐயா

Wednesday, March 2, 2016
மூல நோய்க்கு தீர்வு
மூல நோய்க்கு தீர்வு
மூலம் என்பது ஆசன குழாயில் சதை கொத்து கட்டிகள் வீங்கும் பொழுது எழும் பிரச்சனை. ஹெமராய்ட்ஸ் எனப்படும் இந்த சதை கட்டிகள் ரத்த ஓட்டம், தசை, தசை நார் கொண்டவை.

இவை வீங்கும் பொழுதே மூல நோய் ஏற்படுகின்றது. இந்த மூலம், ஆசனக் குழாயினுள்ளும் ஏற்படலாம். ஆசன வாயின் வெளியிலும் உள்ளிலிருந்து வெளிவரலாம்.
* மூலம் என்பது இந்த சதை கொத்தின் வீக்கம் ஆசனக் குழாயில் ஏற்படுவதாகும்.
* இதன் அளவு வேறுபடும். ஆசனக் குழாய் உள்ளேயும் இருக்கலாம். ஆசன வாயின் வெளியிலும் வரலாம்.
* அநேகருக்கு 50 வயதிற்குள்ளாகவே ஏற்படுகின்றது. 10 சதவீதம் நோயாளிகளுக்கே அறுவை சிகிச்சை அவசியமாகின்றது.
* சில மூலம், தானே சில நாட்களில் சரியாகின்றது.
* மூலம் நெடுங்காலமாக ஏற்படும் மலச்சிக்கல், நெடுங்காலமாக ஏற்படும் பேதி, அதிக எடையினை தூக்குவது, கர்ப்பம், அதிகம் முக்கி கழிவுப்பொருள் வெளியேற்றுதல் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றது.
மூல நோயின் அறிகுறிகள் :
* ஆசன வாயில் அருகே ஏதோ தடித்த கட்டி போல் இருக்கும். வெளி மூலம் வலியுடன் கூடியதாக இருக்கும்.
* காலைக்கடன் முடித்த பிறகும் முடியாதது போலவே தோன்றும்.
* வெளிப் போக்கிற்குப் பிறகு ரத்தம் வெளிப்போகும்.
* ஆசன வாயிலில் அரிப்பு இருக்கும்.
* வெளிப் போக்கில் சளி இருக்கும்.
* வெளிப் போக்கில் வலி இருக்கும்.
* ஆசன வாயில் சிவந்து தடிக்கும்.
உள் மூலம் 4 பிரிவு படும். :
1. ஆசன குழாயில் சிறு சிறு வீக்கங்கள் இருக்கும். வெளித் தெரியாது.
2. முதலாவதை விட இவை பெரியவை. வெளிப் போக்கு இருக்கும் பொழுது இந்த தசை கட்டியும் வெளியாகும். பிறகு தானே உள்ளே சென்று விடும்.
3. மூன்றாவது பிரிவு ஆசன வாயில் வெளியிலே தொங்கும்.
4. மூன்றாவதை விட பெரியது. விரலாலும் உள்ளே தள்ள முடியாது. இதை அடுத்து மற்றொரு பிரிவு உண்டு. அது ஆசன வாயிலைச் சுற்றி சிறு சிறு கட்டிகள் போல் இருக்கும்.
இதனை அறிவது எப்படி?:
* உங்கள் உறவினருக்கு அதாவது ரத்த சம்பந்த உறவுகளில் யாருக்கேனும் மூலம் இருக்கின்றதா?
* வெளிப்போக்கில் ரத்தம் உள்ளதா?
* வெளிப்போக்கில் சளி உள்ளதா?
* காரணமின்றி திடீரென எடை குறைவு ஏற்பட்டுள்ளதா? மருத்துவரை அணுகுங்கள்.
* நார்ச்சத்து உணவு, காய்கறி, பழம் இவை நல்ல தீர்வு கொடுக்கும்.
* வலி மாத்திரைகள் மருத்துவர் கொடுப்பார்.
* மிக அதிக மூலத்திற்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படுகின்றது
Monday, February 29, 2016
அவசரம்! அறிவை இழக்க வைக்கும்!
அவசரம்! அறிவை இழக்க வைக்கும்!
எந்த ஒரு செயலையும் நிதானமாக பொறுமையுடன் அறிவுப்பூர்வமாக யோசனை செய்து செயல் படுத்த வேண்டும். அவசரமாக செய்யும் எந்த வேலையும் ஆக்கப்பூர்வமாகவோ சரியாகவோ இருந்ததில்லை. இதனை பல நேரங்களில் நான் அனுபப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்.
ஒரு நாள் காலை 8.50 மணிக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்குவதற்க்காக மருந்து கடை ஓன்றிக்கு சென்றிருந்தேன். அங்கே வாங்கும் மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களுக்கு 15 % தள்ளுபடி உண்டு எனவே காலையில் அதிக கூட்டமாக இருந்தது. இருப்பினும் ஓருவர் எனக்கான மருந்துகளை எடுத்துவிட்டு பில் செய்து கொண்டிருந்தார். பணத்தினை செலுத்தி விட்டு மணியை பார்த்தேன் மணி 9.05 ஆகி விட்டது. காலை 9 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டுமே நேரமாகி விட்டதே என எண்ணி சரியான பாதைக்கு பதில் சற்று உயரமான பகுதியில் இருந்து தாழ்வான இடத்தில் காலை வைத்து இடறி விழுந்து காலில் மாவு கட்டுடன் 6 மாத காலம் அவஸ்த்தை பட்டேன். அவசரமானது! எனது அறிவை இழக்க வைத்து விட்டது !
அதே போல் ஒரு நாள் காலை 8.30 மணிக்கு அவசரம் அவசரமாக இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்க்கு கொடுத்துவிட்டு 9 மணிக்குள் அலுவலகம் சென்றுவிட வேண்டும் என வேகமாக சென்று சர்வீஸ் செய்யும் நபரிடம் என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டு இருந்தேன். சார், உங்கள் சர்வீஸ் புத்தகத்தை தாருங்கள் என்றார். நானோ சர்வீஸ் புத்தகத்தை எடுத்து செல்லவில்லை, காரணம் அவசரம் ! அவசரமானது! எனது அறிவை இழக்க வைத்து விட்டது ! சர்வீஸ் புத்தகத்தை வீட்டில் வைத்து சென்றுவிட்டேன் ! பிறகு வேறு ஒரு நாள் சென்று சர்வீஸ் செய்தேன்.
எனவே நண்பர்களே நாளை என்ன வேலை செய்ய வேண்டும், அதற்க்கு தேவையான ஆவணங்கள், பொருட்கள் என்னென்ன போற்றவற்றை முதல் நாளே எடுத்து வைக்க பழகிக்கொண்டேன் நண்பர்களே !
எனவே எந்த ஒரு செயலையும் நிதானமாக பொறுமையுடன் அறிவுப்பூர்வமாக யோசனை செய்து செயல் படுத்த வேண்டும்.
sithayan sivakumar, Madurai
சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர் !

இன்றைய
காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர்.
இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை
நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்...
பயத்தம் பருப்பு - அரை கிலோ,
சம்பங்கி விதை - 50 கிராம்,
செண்பகப்பூ-50 கிராம்,
பொன் ஆவாரம் பூ - 50 கிராம்,
கோரைக்கிழங்கு - 100 கிராம்.
இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும்போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks to Rani Krishna
காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?
காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைகாய்
4. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
5. தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
6. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
7. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
8. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
9. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
10. பீர்க்கங்காய் : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
11. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
12. கருணை கிழங்கு: முழுவதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள்புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
13. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
14. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
15. கத்திரிக்காய்: தோல் soft ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்
16. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
17. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
18. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
19. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
20. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு. நல்ல காய்
21. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்.
22. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

Thanks to Rani krishna
குங்குமப்பூ - இது தொண்ணூறு வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும், படித்தவர் படிக்காதவர் என்ற பேதமின்றி நம்பப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் பெண்கள் தங்களது கற்பகாலங்களில் காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை கலந்து தொடர்ந்து இரவு வேலையில் குடித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதாகும்.
இது இன்றல்ல நேற்றல்ல சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள மக்களிடையே இந்த பழக்கம் ஒருவித நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குங்குமப்பூவை பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அட அவ்வளவு ஏன் வடமேற்கு இரானில் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு வரையப்பட்ட ஓவியம் ஒன்று சமீபத்தில் கண்டறியப்பட்டது, அதில் குங்குமபூவின் பயன்பாடுகள் குறித்து வரையப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், மக்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த குங்குமபூவை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்று.
சாப்ரன் குரோக்கஸ் (Saffron Crocus) என்ற தாவரத்தின் பூவிலுள்ள சூலகதண்டு, மற்றும் சூலகமுடிகள் ஆகியவை தனியே பிரிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்டு பின்பு அதனை பொடியாக்கித்தான் குங்குமபூவை தயாரிக்கிறார்கள். இதனுடன் வேறு எந்த பொருளும் சேர்க்கபடுவதில்லை. தூய்மையான குங்குமபூ செம்மை கலந்த சிவப்பு நிறம் கொண்டது, இதனை காய்ச்சிய பாலில் கலக்கும் போது கலக்கப்பட்ட பால் தங்க நிறத்தை அடைகிறது. ஒரு கிராம் குங்குமபூ தயாரிக்க சுமார் நூற்றிஐம்பது பூவிலிருந்து நூற்றிஎழுபத்தைந்து வரையிலான சாப்ரன் குரோக்கஸ் பூக்கள் தேவைப்படும், ஆகையால்தான் நறுமண பொருட்களில் குங்குமபூ காலம்காலமாக விளையுயர்ந்த பொருளாக உள்ளது.
சரி உண்மையில் குங்குமப்பூவை கற்பஸ்திரிகள் பயன்படுத்தி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்றால் அதில் துளி கூட உண்மையில்லை என்பதே உண்மை. குழந்தை சிவப்பாக பிறப்பதும், கருப்பாக பிறப்பது நமது பரம்பரையினர்களின் ஜீன்கள் சம்மத்தப்பட்ட விஷயம் தானே தவிர இதில் குங்குமபூவிற்க்கு எந்த பங்கும் இல்லை, ஆனால் இதனைகாட்டிலும் பல எண்ணற்ற பயன்களை கர்ப்பிணிப்பெண்களுக்கு தரக்கூடியது குங்குமபூ.
குங்குமபூவின் சூலகதண்டுகளும் சூலகமுடிகளும் இரெண்டு வகையான வேதிப்பொருட்களை உள்ளடக்கியது. ஒன்று குரோசின் மற்றொன்று பிக்குரோசின். குரோசின் என்ற வேதிப்பொருள் நிறமியாக செயல்படுகிறது இதுதான் குங்குமபூ கலக்கப்பட்ட உணவுப்பொருள் செம்மை கலந்த தங்கநிறம் அடைவதற்கு காரணம் ஆகும். மற்றொரு வேதிப்பொருளான பிக்குரோசின் ஒரு கிருமி நாசினியாகும். இது தொண்ணூறு வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அடையாளம் கண்டு அவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது, அதோடு மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. ஆகையால் கர்பிணிப்பெண்கள் குங்குமபூவை பாலுடன் சேர்த்து பருகிவந்தால் குழந்தை கர்ப்பப்பைகளில் வாழும் காலத்தில் கர்ப்பபைகளில் நிலவும் வெப்பம் குறைக்கப்பட்டு கர்ப்பபைகளின் வழியே பரவும் நோய்களின் தாக்குதல் இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.
குங்குமபூவின் மருத்துவ குணங்கள் பற்றி சமீபத்தில் ஆராய்ந்த மருத்துவக்குழு ஒன்று, குங்குமபூ மாலைக்கண் நோயின் தாக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரகாசமான வெளிச்சத்தின் நேரடிதாக்குதலால் கண்களில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குங்குமபூவை பெண்கள் மட்டுமல்ல எல்லோரும் எல்லா காலங்களிலும் அவ்வப்போது பயன்படுத்தி வந்தால் எண்ணற்ற நோய்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்...
Saturday, February 27, 2016
எந்த விலங்குக்கும் தொப்பையில்லை ..........................
“சீ மிருகமே!”/
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே
கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்
கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்
அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்
இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு
மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …
சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
Thanks to Srinivasan Krishnamoorthy
Subscribe to:
Posts (Atom)
எது கெடும் ? கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......
எது கெடும் ? அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிர...
-
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர...
-
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களி...
-
Old Age Homes Madurai Christian Seva Sangam Trust kennet garden, Alagapan nagar, Paandiyan nagar Madurai Cell :098430 52242 ...