Total Pageviews

Wednesday, December 26, 2012

எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும்.

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளான தூண்டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் அது நம்மை பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழைந்தபின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது.

இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்பு கொள்ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டு கொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ வழிவகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!! how protect your marriage from adultery

1. அவரவர்களுக்கென சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக்காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், "எத்தனை விபரிதங்கள் வரும்?" என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்

 2.எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.

3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.

4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.

5.எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.

6.எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமாக, மனைவி கணவரிடமோ அல்லது கணவன் மனைவியிடமோ, எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, "அவர் என் நண்பர்." என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்

7.எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக இருக்கும்.

 8.ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்க வரும் போது, அது காதலாக மாறும். அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, "எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?
 உழைப்பால் உடல்நலமும், உடல்நலத்தால் அகநிறைவும் உண்டாகும். - பியாட்டி.
Thanks to One India.com

Tuesday, December 18, 2012

தாய் மொழி


எல்லா மனிதருக்கும் மொழி இன்றி அமையாதது. உலகில் பல மொழிகள் உள்ளன என்ற போதும், எது உயர்ந்தது என்பதும், எதை பயன்படுத்துவது என்பதும் ஒரு குழப்பமனதுதான்.

சிறந்த மொழி எது?

எது உன்னை கருவில் இருந்து வளர்த்ததோ,
எது உன் தேவைகளை பூர்த்தி செய்ததோ,
எது உன் தாயை மகிழ்வித்ததோ
எது உன்னை சமுதாயத்திற்கு அறிவித்ததோ
எது உன்னை உலகம் அறிய செய்ததோ- அதுவே சிறந்தது (தாய் மொழி).
உன் தாய்மொழி சிறப்பை நீ சொல்லவில்லை என்றால், பின்பு அதை யார் தான் சொல்வார்.

தாய்மொழியை வளர்க்க சில யோசனைகளை :

அ) உன் தாய்மொழி தெரிந்தவரிடம் , உன் தாய்மொழிலே பேசு (அந்நிய மொழி மோகம் கொள்ளாதே).

ஆ) முடிந்தால் தாய்மொழில் கவிதை, கதைகள் எழுத்து, இல்லையேல் கவிதை, கதைகளை படி.

இ) தாய்மொழியை பழிக்காதே.(மற்ற மொழியோடு ஒப்பிடாதே)

ஈ) மற்ற மொழிகளை படி, அவற்றில் நல்லதை உன் மொழியில் மக்களுக்கு சொல்லு.

உ) உன் செயலை வைத்தே உன் தாய்மொழி மதிக்க படுகிறதை நீ உணரவேண்டும்.

பகைமையை அன்பினால்தான் வெல்ல முடியும்.  இதுவே  பழமையான விதி. - புத்தபிரான்.
 

Sunday, December 16, 2012

வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு - நாய் கடிக்கு உடனடியாக என்ன செயவேண்டும்?



நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரிய வேண்டிய தகவல், அது நல்ல நாயா, வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான். ஆனால் எப்படியானாலும் நாய்க் கடித்த உடனே அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். உடனடி சரியான சிகிச்சை கட்டாயம் உயிரைக் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை; எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?

வெறிநோயின்  பாதிப்பு தகவல்கள்..!

வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய் (Rabies).  ரேபிஸ் வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது.

மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!

வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே - வருகிறது. அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது. ஆனால் அமெரிக்காவில் வௌவால் & பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons) ஷங்க்(skunks) ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது.

நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது. வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்பட பாதை போட்டுத் தருகிறது.

முற்றிய வெறிநோய்!

வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின் வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான் ஒரே முடிவாக இருக்கும்.

நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!

நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார். பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்...

வெறிநோயின் பயணப்பாதை..!

வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது. பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது. பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.

வைரஸின் அதிவேக செயல்பாடு!

 மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டி இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே, அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.

நோயின் அறிகுறிகள்..!

துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்; ஒழுகும். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். சுவாசிக்க முடியாமையால் உயிர்ப் பிரிதல் நேரிடும்.


வெறிநோய்த் தடுப்பு மருந்தும் உயிர் காத்தலும்!

 பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885ல் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) & எமைலி ரௌக்ஸ் (Emile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்கனவே வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர். இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.

முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.

வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?

முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும். ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம். 4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.

வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப்படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.

கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப்பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.

நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.

வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.

உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப்படுதலும் நிச்சயம்.

வெறிநோய் உற்பத்திக்கூடம்..!

 இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி, இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500/= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.

உலக வெறிநோய் தினம்..!

 செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப்பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன் போராடி வெற்றி கண்டார். இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில் 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில் 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர். வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.

வெறிநோய் பற்றிய ஆய்வு..!

 சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம்.

வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!

 ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. நம்மிடையே இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது. மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.

நீங்கள் செய்யவேண்டியவை..:

நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள். அதன் மூலமும் வெறிநோய் வரலாம்.

வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும்.

விலங்குகளால் ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.

நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி பழகக் கூடாது.

குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.

நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.

உலகம் முழுவதுமே வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதீர். - விவேகானந்தர்.
- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)

Tuesday, December 4, 2012

நாடு வளம் பெற கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்பட வேண்டும்

நாட்டு மக்கள் அனைவருக்கும்  முறையான மருத்துவமும், கல்வியும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும்

பல் லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனைக்குரியது. பல இலட்சங்கள் செலவு செய்து மருத்துவரான ஓருவரால் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டண்த்திலோ சிகிச்சை செய்ய இயலாது எனவே கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது

அனைவருக்கும் தரமான இலவசகல்வியின் முலம் திறமையானவர்களை கண்டறிந்து அவரவர்க்கு தேவையான கல்விதனை அளிக்க வேண்டும்.
 
மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும்.

கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்பட வேண்டும்.  இவ்வாறு இவை இரண்டும்  இலவசமாக அரசு வழ்ங்கினால் பல வகையான குற்ற நடவடிக்கைகள் குறைய்ம், நாடும் வளம் பெறும்.

எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.


By.K.P.Sithayan Sivakumar 

நேற்று என்பது உடைந்த பானை  இன்று என்பது கையிலுள்ள வீணை, நாளை என்பது மதில்மேல் பூனை
 



Sunday, December 2, 2012

வீட்டில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்!!!

ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாட்கள். 

பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்கள்

பொதுவாக் கொசுவின் சராசரி ஆயுட்காலம் 21 நாட்கள்.
 வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது
.
நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும்

ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போம்!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...

தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும்.

ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.


பூச்சிகள் பற்றிய தகவல்

1. தேனிக்கு ஐந்து கண்கள்.
2. கரப்பான் பூச்சி எப்போதுமே 16 முட்டைகள் இடும்.
3. ஈயின் ஆயுள் 10 நாட்கள் மட்டுமே.
4. ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாள்.
5. பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்.
6. மரவட்டைக்கு 7 கண்கள் உள்ளன.
7. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது.

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை 

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...