Total Pageviews

Tuesday, January 1, 2013

ஒருவருக்கு ஒரு வீடு



இந்தியாவை போன்றே, சீனாவிலும் நிலம் மற்றும் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தது சீன அரசு. அதிக பணப் புழக்கத்தில் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கிக் குவிப்பதுதான் இதற்கு காரணம் என, கண்டு பிடித்தது. விளைவு, ஒருவர், ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது என தடை போட்டது. வீட்டு விலை, மளமளவென இறங்கியது. விலை குறைய குறைய, சாதாரண நடுத்தர மக்களும், புதிய வீடுகளை வாங்க ஆரம்பித்தனர்.

இந்தியாவிலும், புதிய வீடுகள் அநியாய விலையில் விற்கப் படுகின்றன. இதற்கு காரணம், டாக்டர்கள், வியாபாரிகள், சினிமாத் துறையினர், ஹாவாலா ஆசாமிகள், அரசியல்வாதிகள் ஆகியோர், கணக்கில்லாமல், பல பெயர்களில் வீடுகளை வாங்கி குவிக்கின்றனர். சீனா போலவே, இந்தியாவிலும், ஒருவர், ஒரு வீட்டிற்கு மேல் வாங்க தடை விதித்தால், விலை உயர்வு தானாக இறங்கி விடும். நடுத்தர மக்களுக்கும் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு செயல்படுத்துமா?

துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்.



பற்பசையின் சிறப்புக்கள்

நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் பற்பசையின் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே.

பற்பசை பற்றி நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:-

* பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

* சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

* முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

* பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

*பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

* துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

* குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

* வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

* சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

* குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

* வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

* நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.
மலர்களைச் சுற்றி மணம் வீசுவதைப் போல, செயற்கரிய செயல்களை புகழ் சூழ்ந்து கொள்ளும். - சாக்ரடீஸ்.

நன்றி- மங்கையர் மலர்

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...