Total Pageviews

Wednesday, August 15, 2018

துளசியை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்*


ஒரு தாவரத்தை உண்ணும்போது, அதில் நோய் நீக்கும் தன்மை இருந்தால், அதை மூலிகை என்று கூறுகிறோம். அம்மூலிகைகளில் உணவாக சமைத்து உண்டபிறகு மருந்தாகும் தாவரத்தை கீரை என்கிறோம். அதே போன்று சமைக்காமல் பச்சிலையாக மருந்தாகும் தாவரத்தை பச்சிலை மருந்து என்று குறிப்பிடுகிறோம்.

உண்ணாமல் தாவரத்தின் காற்றுபட்டால் நோய் நீங்கும் தாவரத்தை தெய்வ மூலிகை என்கிறோம். அப்படி எண்ணற்ற தாவரங்களின் காற்றுப்படுவதால் நோய் நீங்குவதோடு, அவை தரும் அதிகப்படியான உயிர்காற்றான பிராண வாயுவால் உயிரினங்கள் உயிர் வாழ முடிகிறது.

அத்தகைய தாவரங்களில் ஒன்றுதான் துளசி. இதன் காற்றுப்பட்டாலே நோய் நீங்கும். அதிகளவில் பிராணவாயுவை உண்டு பண்ணி தருவது துளசி.


இத்துளசியை வீடுகளில் வைத்து பெண்கள் அவற்றை சுற்றி வருவதை பார்க்க முடியும். அப்படி சுற்றி வரும்போது, பெண்களுக்கு அதிகளவு பிராணவாயு கிடைக்கிறது. இதனால் மூச்சுத் திணறல் உண்டாகாமலும், நோய் வராமலும் துளசி பாதுகாக்கிறது.

இது தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் துளசி என்றும், கன்னடத்தில் விஷ்ணு துளசி என்றும் அழைக்கப்படுகிறது. துளசியில், துளசி, கருந்துளசி, செந்துளசி, நாதுளசி என நான்கு வகை உண்டு. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதை அப்படியே சாப்பிடக்கூடாது.

துளசியில் இனி துளசி என்றால் 21 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மிளகு சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் தொடர்ந்து காலையில் கொடுத்தால் நுரையீரல் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் வராது.

துளசி இலையில் ஒன்பது மிளகு வைத்து அரைத்து மூன்று நாள் சாப்பிட்டால் பேய் சொறி என்கிற தோல் அலர்ஜியை போக்கும். இதே இலையில் ஐந்து மிளகு வைத்து அரைத்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் மூன்று, நான்கு, ஐந்தாவது நாட்களில் மூன்று நாள் சாப்பிட்டால் மாதகால வயிற்று வலியை போக்கும்.

இதையே திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றால், மூன்று நாள் வீதம் மூன்று மாதங்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். துளசியில் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து, அதை வெள்ளைத்துணியில் நனைத்து நீண்டநாள் ரணம், புண் ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஐந்து நாள் வைத்து வந்தால் புண் ஆறிவிடும்.

விஷக்கடிகளுக்கு ஒன்பது மிளகு வைத்து அரைத்து தினமும் காலை ஏழுநாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விஷம் முறியும். தோல் வெடிப்பு, தலையில் பொடுகு, சொறி, தலைப்புண், மீசை மீது ரணம், தாடிப்புண் போன்றவை சரியாகும். துளசியுடன், இரண்டு மிளகு அளவு புதினா உப்பு, ஐந்து மிளகு ஆகியவற்றை அரைத்து, மூன்று நாளைக்கு கொடுத்தால் பக்கவாதம், ஜன்னி, ஈர சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

மேலும் துளசியுடன் ஐந்து மிளகு, மூன்று மிளகு அளவு மஞ்சள் தூளும் சேர்ந்து அரைத்து மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் மூச்சு பயிற்சி (யோகாசனம்) போன்றவைகளுக்கு உகந்தது. நீர் உடல் குறையும். இதே துளசியுடன் மூன்று மிளகு, போதிய கற்கண்டுடன் அரைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

இப்படி துளசியின் மருத்துவ குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதனால் தான் கோவில்களில் தீர்த்தத்துடன் துளசி உள்ளதோடு பல வீடுகளில் வணங்குவதற்குரியதாகவும் துளசி செடி விளங்குகிறது. ஆனால், துளசியை மட்டும் தனியாக உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...