Total Pageviews

Saturday, February 9, 2019

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் அறிவிப்பின் படி இலவச தொலைக்காட்சிகளுக்கு கட்டணம் ஏன் ?

டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 பிப்ரவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சென்ற வாரம் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.

கேபிள் நெட்வொர்க்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் செட்-ஆப் பாக்ஸ் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

கேபிள் டிவி இல்லாமல் ஐபி டிவி, டிடிஎச், ஓடிடி மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து வருகின்றனர்.

இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனலகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள்.

புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்.

இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.

திட்டம் 1: 1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க ரூ. 130 + 18% ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.திட்டம் 2: 101 முதல் 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150+ 18% ஜிஎஸ்டி என 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 3: 126 முதல் 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 + 18% ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 4: 151 முதல் 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 + 18% ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திட்டம் 5: 176 முதல் 200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 + 18% ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.
மேலே பார்த்த திட்டங்கள் இலவச சேனல்களுக்கு மட்டுமே. சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.

கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு அடிப்படை திட்டம் 1-ஐ நீங்கள் தேர்வு செய்து இருந்தால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் செய்தி உள்ளிட்ட 4 சேனல் மட்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.

செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.

மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும், வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் பிப்ரவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...