Total Pageviews

Friday, April 16, 2021

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? 
 

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 
 
1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.
 
2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 
 
3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது
 
4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
 
5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
 
6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
 
7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
 
8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
 
9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
 
10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
 
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். 
 
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). 
 
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

 

Friday, April 2, 2021

வாக்குரிமை !

 

 
200 ரூபாய் பணத்திற்கும், 

ஒரே ஒரு பிரியாணி 
 
பொட்டலத்திற்கும் ,

வறண்ட நாக்கோடு, கொளுத்தும் 
 
கொடும் வெயிலில், உயிரையும் 
 
இழக்கத் தயாராகிப்போன ஒரு 
 
சமூகத்தில்,
 
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
 
அயோக்கியன் என்று தெரிந்த 
 
பின்னும்,
 
அவனுக்கு ஆரத்தி எடுத்து,
 
ஆரத்தித் தட்டில் விழப்போகும் 
 
சில்லரை பணத்திற்காக,
 
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் 
 
மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
 
எத்தனை கொடுமைகள் 
 
இழைத்தாலும்
 
அதனையெல்லாம் மறந்துவிட்டு 
 
மீண்டும் மீண்டும் சின்னங்களை 
 
மட்டுமே பார்த்து
 
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் 
 
மாற்றம் எப்படி நடக்கும்?
 
🙊🙉🙈
 
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற 
 
சமூகத்தில் முன்னேற்றம் எந்த 
 
வழியில் வந்து சேரும்?
 
🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா
 
 அந்தக் கட்சி ...
 
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் 
 
அந்தக் கட்சிக்குத்தான் 
 
ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன்
 
 வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர்
 
 குடிக்கிற மகன்கள் இருக்கிற 
 
தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி 
 
உருவாகும்?
🙊🙉🙈
 
கட்சி எது? சின்னம் எது? தலைவர் 
 
யார்? எது சரியான பாதை? என்ற
 
 அடிப்படை அரசியல் அறிவுகூட 
 
இல்லாத பட்டதாரிகள் மலிந்த 
 
இளைய தலைமுறையினால் 
 
மாற்றம் எப்படி வந்து சேரும்?
 
🙊🙉🙈
தேர்தல் என்றால் ஒரு நாள் 
 
விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு
 
 செல்லாமல் விடுமுறை 
 
கொண்டாடுகிற தேசத்தில் புதிய 
 
அரசு எப்படி சாத்தியம்?
 
🙊🙉🙈
எமது மக்கள் எப்போதும் தற்காலிக
 
 சுகங்களிலே நிறைவடைந்து 
 
விடுபவர்களாய் இருக்கிற 
 
வரையிலும்
 
நிம்மதியான வாழ்க்கையை வாழவே
 
 போவதில்லை...
 
People deserves the Government..... 
 
மக்களின் தரத்திற்குத் தக்கபடிதான் 
 
அரசு அமையும்..
 
*முதலில் மாற வேண்டியது 
 
அரசியல்வாதி அல்ல.. "நாம்தான்"....*

 

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...