Total Pageviews

Thursday, November 10, 2022

*"அடக்கமாகும் வரை.. அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4- நபர்கள்.*


 

 

கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்.

*"அடக்கமாகும் வரை..  அடக்கமாக இரு" என்று உணர்த்தும்         4- நபர்கள்.*

 1) முதல் நபர்.

 "தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.  இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்.. இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன்  என் வீட்டிற்கு ஒரு பையன் வரும்போதெல்லாம்..

வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.

எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.

 கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகிக்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு. இளங்கோவன்.

          ------'xxx-----

2) இரண்டாவது நபர்

 

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங். செய்து கொண்டு இருந்தபோது..  கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர், "ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார். சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!

உன் டிரைவரை விட்டு,  ஒரு பாக்கெட் 'பர்க்லிசிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.

அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''

எவ்வளவு பெரிய நடிகர்..!  எம்.ஜி.ஆர்.. சிவாஜி படங்களில் நடித்த போது,

அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!  எங்கே போனது.. அந்த வாழ்வும் வளமும்..!

2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..  திரு.சந்திரபாபு அவர்கள்.

        -----xxxx-----

 3) மூன்றாவது நபர்

 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது.

ஒரு நடிகை.  ஒரு காலத்தில், தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி.

பல பெரிய தயாரிப்பாளர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டு,
வருடக்கணக்கில்  காத்திருந்த காலம் உண்டு.  என்னைப் பார்க்க  வந்தவர்,  '"வாலி சார்..

எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...    நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

          -----xxx-----

 

4) நான்காவது நபர். Image result for IMAGES FOR  ACTOR THIAGARAJA BAGAVATHAR

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,  "நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன்.  என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன்.

' நீங்கதான்  வாலியா..?’ என்று என் கைகளை பற்றுகிறார்.  அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு.

இன்று அவர் என்னைத் தொடுகிறார்.  நான் சிலிர்த்துப் போனேன்.

"அவர் தொட்டதால் அல்ல".  எந்த ரயில் நிலையத்தில்.. ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ.. அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல்.. தனியாக  அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். காலம் எப்படியெல்லாம்.. தன் ஆளுமையைக் காட்டுகிறது. அந்தப் பழைய நிகழ்வுகளை  எண்ணிப் பார்க்கிறேன்.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..  எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..

திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர். 

         --------- xxxx--------

 இவர்களை விடவா நான் மேலானவன்.  *அன்று முதல் நான்,   "'நான்’"   இல்லாமல் வாழப் பயின்றேன்.!*

*எதுவும் மரணம்வரைதான்.  இதுதான் மனிதன் வாழ்க்கை.* * வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..   மரணத்தை விட கொடூரமானது.

*பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள். முதியவர்களிடம்  பரிவு காட்டுங்கள் !. 

 படித்ததி்ல் பதறியது மனசு. !

Friday, November 4, 2022

வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள்!

1.வீட்டில் மின் பாதுகாப்பு வழி முறைகள் !

1)    எர்த்    லீக்கேஜ்    சர்குட்   பிரேக்கர்  ஒவ்வொரு    வீட்டிற்கும் அவசியம்; செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii)வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றி விட வேண்டும். தரமான சுவிச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.

iii)தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv)எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,  வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம்
டது புறத்தில் உள்ளதால்.

v)பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

vi)மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து,அந்த நடிகை  இறந்து  போயிருக்கிறார்.


ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.


எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.


அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே, ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.


ஹீட்டர் சுவிச்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிச்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.

vii)பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள்.


அதற்குப்பதிலாக எம்சிபி வைத்தால்,ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்குட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும்.


எப்போதும்,சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது.இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.

viii)ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற வற்றைக்  கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

ix)இவ்வளவு கவனமாக இருந்தும், ஆக்சி டெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,நேர்ந்து விட்டால், அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால் பாதிக்கப்  பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை  நேரடியாக தொடவேக் கூடாது.

கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து ,இறந்து போன மாமியாரையும்,
பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு  ,கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்ப் போன கணவன்  தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.


இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல்,அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.


செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால்,அடித்துக் கூட காப்பாற்றலாம்.

வீடென்றால் தொடப்பக்கட்டை!

வெளியே என்றால் செருப்பு!!!

எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான்! வேறொன்றுமில்லை!!!

தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?

x)கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.
குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிச் பாக்ஸ் வைக்கக் கூடாது.

xi)சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிச்சும் வைத்திருக்க வேண்டும்.


நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது. 


நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்.  மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம்  நமது மின் சாதனங்கள் இயங்கும்போது,அவையேதும்
பழுதுடானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர்.


 ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை  பயன்படுத்திக்கொண்டால்   மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப்  செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.

UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது.


UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,  பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து,UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால்,
சர்கூட்டின் ஃபேனோ,லைட்டோ  பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது.


இது எளிதான காரியமல்ல. அதற்குப்பதில்,RCCB இணைத்தோமானால், யுபிஎஸ்
ப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இது கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.

xiii) முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.

தமிழ்நாட்டில் சராசரியாக 342 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே அந்த சராசரி அளவை தமிழ்நாடு கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது வரை 583 மிமீ மழை பெய்துள்ளது. 


 கடந்த 1950ல் இருந்து 70 வருடங்களில் வெறும் 10 சீசனில் மட்டுமேதான் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 10 சீசனில் மட்டுமே நடந்த அதிசயம் தமிழ்நாட்டில் இந்த முறை மீண்டும் நடக்கிறது.*

எனவே,வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஈரம் தாக்கும்.குறிப்பாக,மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது.


ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்!எனவே,நாம்தான், இந்த கடும்  மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Tuesday, November 1, 2022

மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் !

மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் !

*1. உடல் பயிற்சி இன்மை / உடல்       உழைப்பின்மை


*2. இரவில் கண் விழித்திருத்தல்


*3. காலை உணவை தவிர்த்தல்


*4. ஆரோக்கியமற்ற உணவுகளின்
      மீதுள்ள நாட்டம்


*5. பணத்தை நோக்கிய ஓட்டம்


*6. பழைய உணவுகளை சூடாக்கி
      சூடாக்கி உண்ணல்


*7. கவலைகளைக் கட்டிக் கொண்டு
      இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். +

உணவை தரமாக்குங்கள்
 

கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.


இளநீர் போன்றவை மிக நல்லது


பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவைத் தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள். யோகா தியானம் உணவைப் போல் அத்தியாவசியமான ஒன்று.

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.


உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களைப் பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.

நன்றி!

Saturday, October 15, 2022

ஐஸ்வர்யம் அறக்கட்டளை ! மதுரை !

ஐஸ்வர்யம் அறக்கட்டளை#- சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் 50 படுக்கைகள் கொண்ட நேத்ராவதி வலி நிவாரண மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் நோய்வாய்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டு படுத்தபடுக்கையாக இருக்க கூடிய நோயாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை இலவசமாக மருத்துவ உதவி
செய்கின்றார்கள்.

தொடர்புக்கு 04522482747 / 9597619378

 முதுமைக்கு-மரியாதை-3072518.htm

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jan/06/88-3072518.html

For further details copy and paste the above link in Google

 

Thursday, September 15, 2022

சர்க்கரை நோயாளிகள் - உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

 


சுகர்னு  டாக்டர் கிட்ட போராங்க ..
 

அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet  கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லு
றார்..

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் டாக்டர்ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை!

1. தான் சாப்பிடற
மாத்திரை மேல சந்தேகம் வரல!

2.மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல!

3.ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை !

4.வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான் !

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை ! அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை!

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்!

பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான,

முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!


Wednesday, September 14, 2022

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை! மனநலம் சரியில்லாதவர்கள் !

காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.


நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன் என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.



ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவர்களுக்காக இதை பகிர்ந்து கொள்வோம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும்
நிம்மதி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்!
 

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...