Total Pageviews

Thursday, September 15, 2022

சர்க்கரை நோயாளிகள் - உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

 


சுகர்னு  டாக்டர் கிட்ட போராங்க ..
 

அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet  கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லு
றார்..

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் டாக்டர்ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை!

1. தான் சாப்பிடற
மாத்திரை மேல சந்தேகம் வரல!

2.மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல!

3.ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை !

4.வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான் !

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை ! அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை!

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்!

பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான,

முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!


Wednesday, September 14, 2022

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை! மனநலம் சரியில்லாதவர்கள் !

காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.


நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன் என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.



ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

முழுவதும் படித்த நண்பர்கள் தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவர்களுக்காக இதை பகிர்ந்து கொள்வோம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும்
நிம்மதி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்!
 

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்...அலட்சியம் வேண்டாம்! உயிரே போய் விடும்

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்...  அலட்சியம் வேண்டாம்! உயிரே போய் விடும்!

கொலஸ்ட்ரால்  இரத்தக் குழாய்களில் படிந்து தேங்க ஆரம்பித்தால், அதன் விளைவாக உயிரையே இழக்க நேரிடும்.

தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான்.

இப்போது இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கியிருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை காண்போம்.

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்...அலட்சியம் வேண்டாம்! உயிரே போய் விடும் | Cholesterol Clogged Arteries Symptoms

இரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கியுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!

பக்கவாதம் - இதயத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்பும் இரத்த குழாயில் கொழுப்புக்கள் தேங்கியிருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, அதன் விளைவாக பக்கவாதம் ஏற்படும். 

களைப்பு மற்றும் தலைச்சுற்றல் - ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் அல்லது உடலின் மற்ற உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த அளவு குறையும் போது, தலைச்சுற்றல் மற்றும் அதிகப்படியான களைப்பை உணரக்கூடும். 

மூச்சு விடுவதில் சிரமம் - இரத்தம் ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், சிரமம் ஏதுமின்றி சுவாசிக்க முடியும். ஆனால் எப்போது இரத்த ஓட்டமானது ஒருவரது உடலில் குறைவாக உள்ளதோ, அப்போது மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தை அல்லது அசௌகரியத்தை உணரக்கூடும்.

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்...அலட்சியம் வேண்டாம்! உயிரே போய் விடும் | Cholesterol Clogged Arteries Symptoms

மார்பு வலி - இதயத்தில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது தான் மார்பு பகுதியில் வலி ஏற்படும். அதுவும் மார்பு பகுதியில் வலி மட்டுமின்றி, ஏதோ ஒரு அழுத்தம், இறுக்கம், பிழிவது போன்ற உணர்வு அல்லது நெஞ்செரிச்சல் போன்றவற்றையும் உணரக்கூடும்.

கீழ் முதுகு - வலி எப்போது கீழ் முதுகுப் பகுதியில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோ, முதுகெலும்புகளுக்கு இடையிலான வட்டு உடையக்கூடியதாக மாறும். இதன் விளைவாக கீழ் முதுகுப் பகுதியில் உள்ள நரம்புகள் கிள்ள ஆரம்பித்து, கடுமையான வலியை உண்டாக்கும்.

கை மற்றும் கால் வலி - கை மற்றும் கால்களில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கி இருந்தால், வலியுடன், அடிக்கடி மரத்துப் போவது மற்றும் மிகுதியான குளிரை உணரக்கூடும்.

 Thanks to Manithan.com

Tuesday, September 13, 2022

கேட்பாரற்று அனாதையாக கிடக்கும் சொத்துக்கள்! உரிமை கோரப்படாத சொத்துக்கள் !

 


"சார், அந்த சிங்காரத்தோட [Deposit ] டெபாசிட் எல்லாத்தையும் நம்ம Head office-ல unclaimed deposit-ஆ மாத்திட்டாங்க சார்"

"ஆமாம்பா, அதுதான் பேங்க் பாலிசி. Claim செய்யப்படாத டெபாசிட்டுக் கெல்லாம் அதே கதி".

"அப்போ.... எதிர்காலத்தில் ஒரு நாள் அவருடைய வாரிசுகள் வந்து கேட்டால் எப்படி சார் கொடுப்பது?"

"வாரிசுகள் எல்லா டாக்குமெண்ட்டும் கொடுத்து, அவை சரியாகவும் இருந்தால், ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்று அவர்களுக்குக் கொடுத்து விடலாம்."

மதுரையில் ஒரு வங்கிக் கிளையில் நடக்கிற இந்த உரையாடலை நான் மேலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தான் அந்த சிங்காரம்.

மேலிருந்து? ஆமாம், மேலே இருந்துதான். நான் பூலோகத்தை விட்டு
ப் போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பூலோக கணக்கில் 10 வருடம். பத்து நாள் என்று தான் இங்குள்ள கணக்கு!

இப்போது நான் இருப்பது சொர்க்க பூமி இல்லை. நரக லோகமும் இல்லை. விஷ்ணு லோகமும் இல்லை. இது என்ன லோகம் என்று எனக்கே தெரியாது. மறுபிறவி எடுக்க வேண்டியவர்கள் இங்குதான் இருப்பார்களாம். இன்னும் எவ்வளவு காலம் இங்கு இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

என்னைப் போல் பூலோகத்தில் வாழ்க்கையை முடித்தவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். என் மனைவியும் கூட!

நான் 'போய்' மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளும் 'போய்'ச் சேர்ந்தாள். அதாவது இங்கு வந்து சேர்ந்து விட்டாள்.

இது ஒரு parking place என்று நினைக்கிறேன். மறுபடியும் பூலோகத்தில்தான் பிறக்கப் போகிறேனா, அப்படியே பிறந்தால் மனிதனாகப் பிறப்பேனா, மாடாகப் பிறப்பேனா, சிங்கமாகப் பிறப்பேனா, புழு பூச்சியாகப் பிறப்பேனா...... எதுவும் எனக்கு இப்பொழுது தெரியாது. எனக்குத் தெரிந்தால் தான் உங்களுக்கு சொல்ல முடியும். அதுவரை பொறுக்கவும்!

யம கிங்கரர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவருக்கு நான் இப்போது நண்பன்.

நான் சூசகமாக விசாரித்த வரை, எமதர்மராஜன் இன்னும் முடிவெடுக்கவில்லையாம். என்ன காரணம் என்று தெரியவில்லை.  அதுவரைக்கும் இந்த ரெண்டுங்கெட்டான் லோகத்தில் வெயிட்டிங்!

அந்த வங்கியில் உள்ள டிபாசிட்டுகள் என்னுடையது தான்! எங்கள் இருவர் பேரில் இருந்தன. நான் 'போன' பிறகு என் மனைவி தான் அவற்றுக்குச் சொந்தக்காரி! இப்பொழுது அவளும் 'போய்'ச் சேர்ந்து விட்டபடியால் என் மகனும் மகளும் தான் ஜாயிண்ட் சொந்தக்காரர்கள். அதாவது..... Joint Nominees.

என் மகன் புதுடில்லியில் சகல வசதிகளுடன் வாழ்கிறான். மகள் திருமணமாகி ஜெர்மனியில் எங்கோ செட்டிலாகிப் பல ஆண்டுகள் கழிந்து விட்டன.

மகன் அந்த வங்குக்கு சென்று என்னுடைய டெபாசிட்களை Claim செய்தான். ஜாயிண்ட் நாமினேஷன் ஆனபடியால் அண்ணன் தங்கை இருவருடைய KYC papers-உம் கேட்டார்கள். என் மகளுக்கும் அவளுடைய கணவனுக்கும் இதில் எந்த அக்கறையும் இல்லை. அவளுக்குத் தன் அண்ணனுடன் தொடர்பும் இல்லை. பிறகு என்ன செய்வது?

நான் ஏன் இவ்வளவு பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனேன் என்று தெரியவில்லை. என் வாழ்நாளில் நானே அனுபவித்துவிட்டுப் போயிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது.

ஏழைக் குழந்தைகளுக்கும் அனாதைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்திருந்தேன். வேத பாடசாலைகளுக்கும் கோசாலைகளுக்கும் உதவி செய்திருக்கிறேன். சிறிய கோவில்களுக்குத் திருப்பணிக்குப் பண உதவி செய்திருக்கிறேன்.

இருந்தும், இவ்வளவு பணம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. குறைந்தது, அந்தப் பழைய காரை விற்றுப் புதிய கார் வாங்கி நான் அனுபவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. வீட்டில் உள்ள பழைய பொருட்களை போட்டு புதிய பொருட்களை வாங்கி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது உலகச் சுற்றுலா சென்று வந்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

வயதான காலத்தில் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப் படும் என்று என் மனைவி அடிக்கடிக் கூறுவாள். எனவே அந்த டெபாசிட்டுகளைத் தொட முடியவில்லை‌.

நானும் அனுபவிக்க முடியவில்லை. இப்போது என் சந்ததியினரும் அதை அனுபவிக்கவில்லை. வட்டி கொடுக்காமல் வங்கி அனுபவித்துக் கொண்டிருக்கிறது!

என்னைப் போல்

ஆயிரமாயிரம் பேர் தாங்கள்
 

சேர்த்து வைத்த பணம் 

இப்படித்தான் அவர்களும் அனுபவிக்காமல் 

சந்ததியினரும் அனுபவிக்காமல் வங்கிகளில் கிடக்கிறது.

இதே போலத்தான் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும் கூட!


Unclaimed policy மற்றும் lapsed policy-களில் எத்தனையோ கோடி ரூபாய் கேட்பாரற்றுக் குவிந்து கிடக்கிறது!

நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்திச் சம்பாதித்துச் சேர்த்த சேமிப்புக்குத் தான் இந்த கதி என்றால், மதுரையில் நான் வசித்த அதிநவீனக் குடியிருப்பும் இப்படியே கேட்பாரற்றுக் கிடந்தது. unclaimed property ஆகிவிட்டது.

இந்தச் சொத்தை மீட்க யாரும் வரமாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு அந்த builder அந்த வீட்டுக்கு ஒரு புது விற்பனைப் பத்திரம் தயார் செய்து கதவு எண் 20 என்பதை 20 A என்று மாற்றி இன்னொருவருக்கு விற்று விட்டார்!

நான் சாவதற்கு முன்பே அதை விற்றுப் பணமாக்கி இருக்கலாம். குறைந்தது ரூபாய் 50 லட்சம் கிடைத்திருக்கும். இன்று அதற்கு மார்க்கெட் விலை ஒரு கோடிக்கு மேல்!

அந்த வீட்டை மகன் பெயருக்கு மாற்றி, பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஏனோ, நான் அதை செய்யவில்லை. என் கண் முன்னே கஷ்டப்படும் உறவினர்களுக்காவது அதை எழுதி வைத்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யத் தவறி விட்டேன்.

ஆயிரமாயிரம் பேர் என்னைப் போலவே தங்கள் சொத்துக்களை அப்படியே அனாமதேயமாக விட்டு விட்டுப் போயிருப்பார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவற்றை யாராவது அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.

இதுதான் தலைவிதி என்பதா?

அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறந்தாலும் கூட இவற்றை நான் மீண்டும் அடைய முடியாது. புதிய பிறவி எடுத்த உடனேயே பழைய பிறவியின் நினைவுகள் மறந்து போய் விடுமாம்.

இதற்கு என்ன தீர்வு? யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 


வாய்ப்புக் கிடைத்தால் எமதர்மராஜனிடமே கேட்டு விடுகிறேன். என்ன சொல்கிறார் பார்ப்போம்.

யாரோ கிங்கரர் என்னைக் கூப்பிடுகிறார். உள்ளே போகுமாறு கட்டளை இடுகிறார். உள்ளே யம  தர்பார்.

சரி, விடைபெறுகிறேன். உள்ளே போய் விஷயம் அறிந்து கொண்டு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

Sunday, September 11, 2022

இளமையில் ஏன் இத்தனை # மரணங்கள்??

இன்றைய உலகில் பார்க்கும் பக்கமெல்லாம் இள மரணங்கள் பெருகி வருகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகளற்ற அந்நியர்களையும் உலுக்கி போடுகிறது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன.

இது விதியேயல்ல. இன்றைய மனிதனின்  அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்......

மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் 

பின்வருவனவையே ஆகும்...
 

(1) உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை!
 

(2) இரவில் கண் விழித்திருத்தல் !
 

(3) காலை உணவை தவிர்த்தல்!
 

(4) ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்!
 

(5.) பணத்தை நோக்கிய ஓட்டம்!


(6) பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் !


(7)  கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்!

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். 

உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள்.

நேரத்துக்கு உறங்குங்கள்! இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது !

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்!

தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள் !

போதியளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது!

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரி பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள்!

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தொடர்ந்து உட்கார்வதை குறையுங்கள் !

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி சந்தோசமாக இருங்கள். உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்!

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்!

ஆளை கொல்லும் கவலைகளை புறந்தள்ளி ஆளுமையை தரும் தன்னம்பிக்கையை ஆடையாக பூணுங்கள். மிதிவண்டி பயணம் பழகுங்கள்.

என் அனுபவத்தில் சொல்கிறேன்....
 

வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
 

அவமதித்து விடாதீர்கள்.........!!

விளையாடுவதை நாம் நிறுத்திக்கொள்ளும் போது....


நம்முடன் விளையாட ஆரம்பிக்கிறது "வாழ்க்கை" !

வாழ்க்கை ஒரு நெடிய முடிவில்லா பயணம்..

வளைவிலும்.. நேர்ப் பாதையிலும்.. எதிர்பாரா.. திருப்பங்கள்..மற்றும் திருப்பு முனைகள் நிறைந்த பக்கங்கள் உண்டு..

அவறறை சந்திக்கும் துணிச்சலும்..மன உறுதியும் அமையப் பெற்றவருக்கே..வெற்றி உறுதியாகிறது!

வாழ்க்கை வாழ்வதற்கே !  வாழ்க வளமுடன் !


 

Friday, September 9, 2022

ஆண் என்பவன்...

ஆண்களை பற்றி ஒருபெண்  எழுதியது!

ஆண் என்பவன்...

இறைவனின் உன்னதமான படைப்பு !

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்!

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி செய்பவன்!

மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்!

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்!

இந்த போராட்டங்களுக்கு இடையில்,
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,
தாங்கிக்கொண்டே ஓடுபவன்!

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்!

அவன் வெளியில் சுற்றினால்,
'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில்,
'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்
'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.

தாய் சொல்வதை கேட்டால்,
'அம்மா பையன்' என்போம்.

மனைவி சொல்வதை கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்' என்போம்.

ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்

பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...
ஆண் அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..

கரடுமுரடானவன் அல்ல ..
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..

இன்று சர்வதேச
 ஆண்கள் தினம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என் நண்பர்கள் அனைவருக்கும்
ச     ம     ர்     ப்     ப     ண     ம்
"""""""""""""""""""""""""""""""


Sunday, September 4, 2022

பணம்! பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது!

பணம்!


சமீபத்தில் தன், 62வது வயதில் காலமான, பல நுாறாயிரம் கோடிக்கு சொந்தமான, பங்குச் சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா இறப்பதற்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய பணம் பற்றிய சொற்பொழிவு:

'பணம் தான் எல்லாம் என்பதே' வாழ்க்கை நமக்கு முகத்தில் அறைந்து கற்றுக் கொடுக்கும் பாடம். பணத்தை சிலர் நேசிக்கின்றனர்; அதற்காக, சிலர் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.

 

சிலர் அதை நன்கு பயன்படுத்துகின்றனர்; சிலர் வீணடிக்கின்றனர்: சிலர் அதற்காக சண்டை போடுகின்றனர்; சிலர் வெறுமனே ஆசைப் படுகின்றனர். முதல் மில்லியனை சம்பாதிப்பது கடினம்; இரண்டாவது மில்லியனுக்கு அத்தனை கஷ்டம் இருக்காது; மூன்றாவது மில்லியனை சம்பாதிப்பது அதைவிட சுலபம். இத்தனை ஆண்டுகளில், இவ்வளவு சம்பாதித்து நான் உணர்ந்த உண்மை... எவ்வளவு பணம் நிறைவு தரும் என்பதற்கு, முடிவான கணக்கு எதுவும் கிடையாது.

 

 பணம் உங்களுக்கு ஐந்து கோடி நன்மைகளை தரலாம். கெட்ட விஷயம் என்னவெனில், நீங்கள் போகும் போது, அதை எடுத்துப் போக முடியாது.

 

என்னையே [ ராகேஷ் ஜுன்ஜுன் வாலா ] உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்... 

தினமும், 25 சிகரெட் பிடிக்கிறேன்; ஆறு, 'பெக்' விஸ்கி குடிக்கிறேன். உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை; ஒரு பன்றி போல சாப்பிடுகிறேன். பணத்தை அனுபவிக்க, ஓர் எல்லை இருக்கிறது. 

 

இத்தனை ஆண்டுகளாக இரவும், பகலும் உழைத்து சம்பாதித்த பணம், இதற்கு மேல் எனக்கு எதையும் செய்யாது. என் பிள்ளைகளுக்கும், ஓர் அளவுக்கு மேல் இது உதவாது.பணம் தலைமுறைகளை தாண்டி, நாடுகளை தாண்டி, கலாசாரங்களை தாண்டி, மதத்தை தாண்டி நிலைத்திருக்கும் விஷயம். வாழ்வில் பணத்துக்கு அர்த்தம் உண்டு. அது, உங்களுக்கு பொறுப்புணர்வையும் கூடுதலாக கொடுக்கிறது.பணத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஆனால், பணம் உங்களை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். 

 

உங்களுக்குள் இருக்கும் மனித இயல்புகளை, அது மாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். உங்கள் குடும்பத்தை, நண்பர்களை, இளமைக்காலம் முதல் உங்களுடன் இணைந்து இருப்பவர்களை, நீங்கள் நடத்தும் விதத்தை, உங்களிடம் சேரும் பணம் மாற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...