Total Pageviews

Thursday, November 13, 2025

இரத்த சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானம்.., தினமும் குடிக்கலாம்

உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில், வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தண்ணீர்- 2 கப்
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • கருவேப்பிலை- 2 கொத்து
  • இஞ்சி- சிறிதளவு
  • இலவங்கப்பட்டை- சிறிதளவு

தயாரிக்கும் முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சேர்த்து அதில் வெந்தயத்தை சேர்க்கவும்.

பின் அதில் கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை நன்றாக இடித்த அதில் சேர்த்து கலந்துகொள்ளவும்.

இரத்த சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும் பானம்.., தினமும் குடிக்கலாம் | Homemade Natural Drink To Control Diabetes

பின்னர் அதில் இலவங்கப்பட்டை இடித்து சேர்த்து இதை 3 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி குடிக்கவும்.

இந்த பானத்தை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

மாரடைப்பு வருவதை எச்சரிக்கும் முக்கிய 5 அறிகுறிகள்.., என்ன தெரியுமா?

 இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்தஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.

மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.

பொதுவாக மாரடைப்பு ஏற்படும் முன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.

மாரடைப்பு வருவதை எச்சரிக்கும் முக்கிய 5 அறிகுறிகள்.., என்ன தெரியுமா? | 5 Warning Heart Attack Symptoms In Tamil

அந்த அறிகுறிகளை உணர்ந்து முன்கூட்டியே போதுமான மருத்துவ வசதி எடுத்துக்கொண்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.

அந்தவகையில், மாரடைப்பு வருவதற்கான முக்கியமான 5 அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?

வலிமிக்க கட்டிகள்- விரல்கள் அல்லது கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள்இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

உதடு வெடிப்புகள்- உதடு வறண்டு போய் இரத்தக்கசிவு ஏற்பட்டால் இதய நோய் போன்ற கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

வளைந்த நகங்கள்- ஒருவரது விரல் நகங்கள் முன்பக்கமாக வளைந்து, விரல்களின் முனைப்பகுதி வீங்கி இருந்தால், இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது.

சருமத்தில் வளர்ச்சி- சருமத்தில் மஞ்சள் நிற மெழுகு போன்று ஏதேனும் வளர்ச்சியைக் கண்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகளவில் இருக்கும்.

கால் வீக்கம்- கால்கள் மற்றும் பாதங்களில் திடீரென்று வீக்கம் உண்டானால் இதயம் சரியாக செயல்படவில்லை என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும்.

Tuesday, November 11, 2025

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...

 

ஒரு மனிதன்....

எந்தக் குறையும் இல்லை அவனுக்கு...

ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.

படுத்தால் தூக்கம் வரவில்லை...

சிரமப்பட்டான்...

அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.

பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு...

அங்கே ஒரு பெரியவர் இருக்கார்...

போய்ப் பாருங்கள்!"

ஆசிரமத்துக்குப் போனான்...

பெரியவரைப் பார்த்தான்.

ஐயா....

மனசுலே நிம்மதி இல்லே...

படுத்தா தூங்க முடியலே!"

அவர் நிமிர்ந்து பார்த்தார்...

தம்பி...

உன் நிலைமை எனக்குப் புரியுது...

இப்படி வந்து உட்கார்!"

பிறகு அவர் சொன்னார்:

உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...

தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!

அது எப்படிங்க?

சொல்றேன்...

அது மட்டுமல்ல...

மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!

ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே!

புரியவைக்கிறேன்....

அதற்கு முன் ஆசரமத்தில்

விருந்து சாப்பிடு.

வயிறு நிறையச் சாப்பிட்டான்.

பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,

இதில் படுத்துக்கொள் என்றார்.

படுத்துக் கொண்டான்...

பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...

கதை இதுதான்:

ரயில் புறப்படப் போகிறது...

அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை...

ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.

ரயில் புறப்பட்டது...

தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...

எதிரே இருந்தவர் கேட்கிறார்:

"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?

இறக்கி வையேன்.

அவன் சொல்கிறான்:

"வேணாங்க!

ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!

என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'

பெரியவர் கதையை முடித்தார்.

படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.

ஏன் சிரிக்கிறே?

பைத்தியக்காரனா இருக்கானே...

ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?

அது அவனுக்கு தெரிய வில்லையே

யார் அவன்? இயல்பாக கேட்டான்

நீதான்!"

என்ன சொல்றீங்க?

பெரியவர் சொன்னார்:

வாழ்க்கை என்பதும் ஒரு ரயில்

பயணம் மாதிரிதான்...

பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்

நிம்மதியாக வாழமுடியாது.

தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!

அவனுக்கு தனது குறை மெல்ல

புரிய ஆரம்பித்தது.

🥹"கசப்பான உண்மைகள்"🥹

 🥹"கசப்பான உண்மைகள்"🥹

1. உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் நம்மால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள் அல்லது நாம் விலக்கப்படுவோம்.

2, வீட்டிற்கு வந்த மருமகள் உ.யிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும், தன் மாமியார் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள் (மருமகளின் பெருமை தான் பெற்ற மகளின் ஒரு சிணுங்கலில் (அ) ஒரு சொட்டுக் கண்ணீரில் கரைந்து விடும்)

3. வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடம் இருக்கவே விரும்புவார்கள்.

4. கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ குழந்தைகளோ ஒரு குறிப்பிட்ட வயதில் 'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?.." என்று கேட்காமல் விட மாட்டார்கள்.

5. 70 வயதுக்கு மேல் வாழாமல் இருப்பது உத்தமம். நான் பார்த்தவரை பெரும்பாலான வயதானவர்கள் நாய்படாத பாடு படுகிறார்கள்.

6. உடன் பிறந்த அண்ணன் தம்பியை தவிர, வேறு எந்த நபரும் அடுத்த வீட்டுப் பெண்களைச் சகோதரிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அக்கா மாதிரி, தங்கை மாதிரி எல்லாம் எப்பவுமே நம்பாதீங்க..

7. தோள் கொடுக்கும் உறவுகளை விட, காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்.

8. ஒருமுறை பொருளாதாரத்தில் வீழ்ந்த குடும்பம் எவ்வளவு போராடி எழுந்தாலும், நம் உறவினர்கள் அதை முதன்மைப்படுத்திப் பேசாமல் இருக்க மாட்டார்கள். (எப்படியோ கடவுள் அருளால பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவன் இன்னைக்கு நல்ல நிலைமை'ல இருக்கான்) என்று தான் பேசுவார்கள்.

9. வாழ்க்கையோட சூட்சுமம் புரியும் போது, நமக்கு நடக்க முடியாத அளவுக்கு வயசாகிடும்.. அந்த வயசுல எல்லாம் தெரிஞ்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல.

10. நாம நல்லா இருக்கணும்னு எந்தச் சொந்தக்காரனும் விரும்ப மாட்டான். (யோசிச்சு பார்த்தா, நாமளும் யாருக்காவது ஒரு சொந்தக்காரனா தான் இருக்கோம்)..

11. பெண்கள் எப்பவுமே #*#÷× ஜென்மங்கள் தான்.. எவ்வளவு படிச்சிருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும் சரி..

12. முக்கியமா நம்மள பத்தி அதிகமா தப்பா பேசுறது நம்ம அப்பா அம்மா, மேரேஜுக்கு அப்புறம் மனைவி.. வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க..

50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்!

 

ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 

50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... 

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...

வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்.!

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள் !

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்!

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்!

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்!

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்!

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்!

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்! 

திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்!

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். 

உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், ! 

பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்!

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,

சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்!

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்...

முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு,உதவி தேவைப்படு பவர்களுக்கு,  ங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். 

அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...?

Thursday, October 30, 2025

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !

 

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரண மாகிவிட்டது இப்போது !🧡✨

மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும் குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர் களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை.

இது மிகப் பெரிய காரணம் எனலாம்.

"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற!

உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும் ! யோசிக்காதே !

தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து ! கெடுத்துக் கொண்டிருக் கிறார்கள்.

பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.

பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது.

அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது,

சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழு தெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.

ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.

சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.

சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே.

மாற்றப் படவேண்டியது மனங்களே! எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்!

தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண், வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்

அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?

அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !

மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.

குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக் கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் !

அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...! 48 நாள் இதை செஞ்சா கிழவனும் குமரனாகலாம்...!

 


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்ன வெனில், உஷ்ணம், காற்று,  நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு ‘அமுதம்’ என்றொரு பெயரும் உண்டு.தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி

சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.-"

கிழவனும் குமரனாக: காலை வெறும் வயிற்றில் இஞ்சி. நண்பகலில் சுக்கு. இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது?

பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஹார்மோன் காரணமாக சில ...