Total Pageviews

Friday, October 26, 2012

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? அதனை தடுப்பது எப்படி?



டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. ஒரு வகையான கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.

நோய் அறிகுறிகள் :

1. காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.

2. சருமத்தில் வேனற்கட்டிகள், அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.

3. தசை வலி.

4. மூட்டுகளில் வலி.

5. தலைவலி.

நோய்க் கணிப்பு :

வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.

த்ராம்போசைட்டோபீனியா : டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (platelets) எண்ணிக்கை குறைவாக காணப்படும்.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

1990 ஆம் ஆண்டுகளில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்துள்ளனர். இது ஒரு தொற்று நோயாக பரவும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. வெப்பமண்டல நாடுகளில் இது மிகவும் சகஜமாக தோன்றுகிறது. மக்கள் நெரிசல், தண்ணீரை திறந்த வெளியில் சேமிப்பது, பாசன கால்வாய்கள் ஆகியவைகளில் இந்த வகை கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன. டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒன்பது மாதங்களில், 4,500க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’ என, மாநில சுகாதார துறை அதிகாரிகள் மூலம், மத்திய சுகாதார அமைச்சர் வரை, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்
.
ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) பொன்னுராஜேஸ்வரி, பேட்டி:

டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது?
எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்’ வகை கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்
.
டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
Outline of a human torso with arrows indicating the organs affected in the various stages of dengue fever
டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.

டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.

இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.

டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.

ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

Thanks to
Webdunia & Seythivayal.com

ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
 

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...