Total Pageviews

Friday, November 30, 2012

வாழ்க்கை சிறப்படைய அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்!



1 சிந்தனை :

1 அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும்.

பகை அழிவில் கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தலாம்.  இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை.- காந்திஜி

2 புத்திமதி:

2. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவை யாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.

பிறர் குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே கேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர்

3 கடமைகள்:
1)  பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்
2). துஷ்டனை நல்லவனாக்குதல்
3). படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்

4 குறைகள்:.
1)மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை
2). வீட்டின் குறை பழுது பாராமை
3). அழகின் குறை சிரத்தை இன்மை
4). காவலாளியின் குறை கவனக்குறைவு

5 போதுமே:  

1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு      அல்லாஹ் போதுமானவன்.

    2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.

 3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ, அவருக்கு மரணம் போதுமானதாகும்.

 4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ, அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.

5.எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம்


6 மனமே ஆறு:
1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.
2. பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன், .
3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார் தாவீது ராஜா.
4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.
5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம் தவிர்க்கப்பட வேண்டியது.
6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். 

இந்த 6 மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.

7 நன்முத்து:

 1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.
 2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்
 3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.
 4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.
 5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில் எடுத்து விடு
 6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.
 7.வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.

8ம் உன் சொத்து:

1. வீண் பேச்சு பேசாதே
2. ஒழுக்கத்தைப் பேணு
3. நல்லவனாக வாழ்
4. கெட்டவனுடன் சேராதே
5. பேச்சில் இனிமை சேர்
6. ஆராய்ந்து செயலில் இறங்கு
7. பெரியவர்களுடன் சேர்ந்திரு
8. பொய்யை மெய்யாக்காதே! 

9 கட்டுப்பாடுகள்: 

 
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
 7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
 8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
 9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி

10 அறிவுரை: 

 
1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5. சோம்பலை நுழைய விடாதே
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
8. எவரையும் ஏளனமாகப் பேசாதே
9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.


வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள். வறுமைக் காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். - சட்டன் காலின்ஸ்

Thanks to
Sri Kallikambal.com

Wednesday, November 28, 2012

யார் அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கு நாட்டுக்கு நல்லது ?




1) நன்றாக படித்தவர், 

 2) தர்ம சிந்தனை உடையவர்
 
 3) மனித பண்பு , மனித நேயம் உள்ளவர்
 
 4) சேவை மனப்பான்மை கொண்டவர்,
 
 5) தன்னடக்கம் உள்ளவர்
 
 6) தனி மனித ஒழக்கம் உடையவர்
 
 7) பிறர் நலத்தில் அக்கறை உடையவர்
 
 8) குற்ற பிண்ணனி அற்றவர்
 
 9) ஊழலலுக்கு எதிரனவர்
 
10) சாதீய கொள்கைகளுக்கு எதிரானவர்
 
11) சமுதாய முற்போக்கு சிந்தனை உடையவரும்,
 
12) பொது நலத்திற்க்கு மட்டுமே உழைக்க வேண்டும் என                          எண்ணுவோரும்,
 
13) அரசியல் கோட்பாடுகள், மற்றும் சட்ட திட்டத்திற்க்கு உட்பட்டு நடப்பவரும்,
 
14) ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவரும்,
 
15) தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் சொத்து சேர்க்க வேண்டும் என எண்ணம் இல்லாதவர்.
 
16) எதிர் கட்சி என்னதான் கூறுகின்றது என்பதனை கேட்பவரும்,
 
17) சர்வாதிக போக்கு இல்லாதவரும்.  பிறரை கலந்து ஆலோசிப்பவரும்,
 
18)  நீதீ,  மற்றும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவரும்
 
19) சம நிலையை கடைபிடிப்பவரும்
 
20) தீர்க்கமான முடிவுகளை எடுப்பவரும்.

      அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கும்  நாட்டுக்கும் நல்லது. 


K.P.Sithayan Sivakumar, Madurai. 

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்தாலும், அவை நிச்சயம் வந்தே தீரும் - காங்கிரீவ்
 
உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும் உன் நண்பர்கள் அல்லர். - தாமஸ் ஏ. பெக்கட்.
 





Friday, November 23, 2012

ஜலதோசம் சளி ஏற்ப்படாமல் இருக்க



உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.

இஞ்சியால் தடுக்க முடியும்...

என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.

வெங்காயம் - பூண்டும் கை கொடுக்கும்...

அதேபோல, வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.

ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாமாம்.

வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.

மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து இலகுத்தன்மையாக்குகிறது.


இன்னொன்று பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

தவறு செய்வதில் பிழையில்லை. ஆனால், தவறு என்று தெரிந்தபின் அதை திருத்திக்கொள்ளாமல் இருப்பது தான் மிகப்பெரிய பிழை - மகாத்மா காந்தி

Tuesday, November 20, 2012

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும்?

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும்போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்.

அதனால் தான் மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கிறார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.

அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும், மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும்.

அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

எனவே மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது


ஆர்வத்துடன் செயல்படாதவனுடைய, உள்ளத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை - குஸ்டாவ் க்ராஸ்மேன்.  

விழிப்புணர்வு.


காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம்.

பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை.

Monday, November 19, 2012

வாழ்க்கை என்பது



 



"பணம் தான் வாழ்க்கை" என்பான்.                                      -  பணக்காரன்

 "வாழ்க்கை ஒரு போரட்டம்" என்பான்.                             - ஏழை

 "வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்"என்பான்                -   அரசியல்வாதி

"வாழ்க்கை சவால்கள் நிறைந்த பாதை" என்பான்.  -  அறிவாளி

 "காதல் தான் வாழ்க்கை" என்பான்.                                -     கவிஞன் 

"கடவுளை அடையும் வழிதான்  வாழ்க்கை" என்பான்.   - ஆன்மீகவாதி

"கனவுதான் வாழ்க்கை" என்பான்.                                        - இலட்சியவாதி

"வாழ்க்கை வெறும் போர்" என்பான்.                                  -  அவசரக்காரன்

 வாழ்க்கையே ஒரு விளையாட்டு ...என்பான்.            -  வெற்றி வீரன்

 வாழ்க்கையே வீண்   . என்பான்.                                          -  சராசரி மனிதன்

தங்களுக்கு எப்படியோ இந்த வாழ்க்கை?..................



ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
 

Saturday, November 10, 2012

தீபாவளி : இப்படியும் கொண்டாடலாம் !

ஊரெங்கும் வெடிக்கும் பட்டாசுகள், சாலைகளெங்கும் பறந்து திரியும் காகிதக் குப்பைகள், காற்றுடன் கைபிடித்துத் திரியும் கரிய புகை, வீட்டுக்கு வந்து சேரும் பலகாரங்கள், விடியல் முதல் இரவு வரை தொலைக்காட்சியில் சிரிக்கும் அரிதார முகங்கள்,  புத்தம் புதிதாய் காத்திருக்கும் பட்டாடை இவற்றைத் தவிர தீபாவளி என்றவுடன் என்னென்ன நினைவுக்கு வருகின்றன ?

இதைத் தவிர தீபாவளிக்கு வேறென்ன நினைவுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா ?

 இந்த தீபாவளியை எப்படி வித்தியாசமாகக் கொண்டாடவேண்டும் என யோசிக்கிறீர்களா ? இதை முயன்று பாருங்களேன்.

 சில நிமிடங்களில் வெடித்தும், எரித்தும் கரைக்கும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ, இல்லாத ஏழைகளுக்கோ வழங்கிவிடுங்கள். ஏழையின் சிரிப்பில் நரகாசுரன் அழிவான்.

• பலகாரங்களை இந்த முறை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஏழைகளின் குடிசைக் கதவைத் தட்டி பலகாரம் கொடுத்து மனிதத்தின் ஆழத்தை அறிவியுங்கள்.

• விழா நாட்கள் உறவுகளைப் பலப்படுத்தும் நாட்களாக இருக்கட்டும். உங்கள் குடும்பத்தில் யாரோடேனும் மனத் தாங்கல் இருந்தால் இந்த விழா நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று உறவை மீண்டெடுத்துக் கொள்ளுங்கள்.

• குடும்பத்தினரோடு இந்த தீபாவளிக்கு ஒரு அனாதை இல்லத்தைச் சென்று சந்தியுங்கள். உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள்.

• தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அருகில் இருக்கும் குடும்பத்தினரும் முழு நேரமும் பேசுங்கள். நீங்கள் இழந்து கொண்டிருப்பது என்ன என்பது புரிய வரும்.

• நீண்ட நாட்களாக பேசாத நண்பர்கள் உறவினர்களை அழையுங்கள்.  யாரிடமேனும் சண்டையிட்டுப் பிரிந்திருக்கிறீர்களெனில் அவர்களை முதலில் அழைத்து வாழ்த்துச் சொல்லி நட்பைப் புதுப்பியுங்கள்.

• விழாக்கள் உறவுகளை வளர்க்க வேண்டும். பிறரைப் புண்படுத்துவதற்காக விழாக்களை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள்.

• விழா நாட்கள் என்றாலே சுற்றுப் புறத்தை மாசுபடுத்துவதற்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதாதீர்கள். சுற்றுப் புறத்தைத் தூய்மையாய் வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

• விழா நாளில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் முதியவர் தனிமையில் இருந்தால் குடும்பத்துடன் அங்கே சென்று அவர்களுடன் உங்கள் நாளைச் செலவிடுங்கள்.

• ஏற்கனவே இருளில் தடவி நடக்கும் சூழல் நமது. மின்சாரத்தைச் சிக்கனமாய்ச் செலவழியுங்கள்.

• நீங்கள் வெடிக்க நினைக்கும் பட்டாசுகளை எதிர் சேரியிலிருந்து ஆவலுடன் எட்டிப்பார்க்கும் குழந்தைகளின் கைகளில் கொடுத்துவிடுங்கள். அவர்கள் புன்னகை மத்தாப்புக்களில் விழா கொண்டாடுங்கள்.

விழா நாட்கள் மனிதம் விழா நாட்களாக அமைவதே எந்த ஒரு விழாவுக்கும் சிறப்பானதாய் இருக்க முடியும்.  இந்த விழா நாள் அதற்கான முதல் சுவடை உங்கள் இல்லங்களில் எடுத்து வைக்கட்டும்.

அனைவருக்கும் இதயம் நிறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்


சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல். 

Wednesday, November 7, 2012

சூரிய ஒளி மின்சார தயாரிப்பு அமைப்பை ஏற்படுத்த

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன் கூடிய கடன்

தேசிய மாற்று எரிசக்தி துறையும் தமிழக எரி சக்தி மேம்பாட்டு முகமையும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் தமிழக எரி சக்தி மேம்பாட்டு ஆணைய தலைவர் சுதீப்ஜெயின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் மாற்று எரி சக்தி மேம் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி வருகிற நவம்பர் மாதம் முதல் ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் 60 ஆயிரம் வீடுகளில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு அமைப்பை ஏற்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்காக வீடுகளில் சூரிய ஒளி மின்சார தகடுகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இதன் முலம் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வீடுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் வீட்டு பயன்பாடு போக சேமிக்கும் மின்சாரம் கிரிட் மூலம் மின் நிலையத்துக்கு வந்து விடும்.

இதற்காக மின் உற்பத்தியை கணக்கிட ஒருங்கிணைந்த மீட்டர்கள் பொருத்தப்படும். இத்திட்டத்தின் முன் மாதிரி எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஆரோசபில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் மின் அளவை கணக்கிட்டு வீட்டு உரிமையாளருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு அரசு ஊக்கத்தின் காரணமாக முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அரசு மானியத்துடன் கடன் உதவி: வீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கலாம்

தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கையை அரசு வெளியிட்டு இருப்பது பொது மக்களிடமும், நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூரிய சக்தி மின் உற்பத்திக்கான செலவு அதிகம். பராமரிப்பதும் கஷ்டம் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சூரிய சக்தி மின்சார தயாரிப்புக்கு தயக்கம் காட்டினார்கள். இப்போது அரசு அறிவிப்புக்கு பிறகு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலர் எரிசக்தி மேம்பாட்டு முகாமை அலுவலகத்தை அணுகி ஆலோசனை பெற்று செல்கிறார்கள்.

வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு அதிக பட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்ட செலவில் 30 சதவீதம் என்ற அளவில் அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் அளவுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். இதற்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும். நிறுவனங்களை பொறுத்தவரை 100 கிலோ வாட் நிறுவ திறனுக்கு மானியம் கிடைக்கும் இதற்கு வங்கி கடனும் கிடைக்கும்.

ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வீடுகளில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டி.வி. அல்லது கம்ப்பியூட்டரை இயக்க முடியும்.  இத்திட்டத்தை நிறுவிய நாளில் இருந்து முதல் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 ஊக்கத்தொகை வழங்கப்படும். அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1-ம், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசாவும் வழங்கப்படும். அடுத்த ஆண்டு (2014) மார்ச் 31-ந்தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத் தொகையை பெற முடியும்.

இத்திட்டத்தை நிறுவி தருவதற்கு ஏராளமான முகவர்கள் இருக்கிறார்கள். எரிசக்தி முகமையில் மட்டும் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூலம் நிறுவினால் மட்டுமே அரசின் மானியம் கிடைக்கும்.

ஒரு முறை நிறுவி விட்டால் 15 ஆண்டுகளுக்கு பிரச்சிணை இருக்காது. பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். அவ்வப்போது சூரிய தகடுகள் மீது தூசு படியாமல் துடைக்க வேண்டும். தூசு படிந்தால் உற்பத்தி திறன் குறையும்.

வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய சக்தி திட்டத்தை நிறுவ ரூ. 2 முதல் 2 1/2 லட்சம் செலவாகும். இதில் மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை முகவரிடம் செலுத்தினால் போதும் உடனடியாக நிறுவி தருவார்கள்.

Thanks to Vizhiyepaysu.com


வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? பெற்ற தகவல்கள் இங்கே .

வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.

உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவனமே மானியத்தை வாங்கிக் கொள்ளும். அதாவது நீங்கள் 1.1 லட்சத்திற்கு செக் கொடுத்தால் போதும், மற்றபடி மானிய அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போட்டால், மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மானியத் தொகையை மத்திய அரசு கொடுக்கிறது. இது 100 ரூபாய் சிஸ்டத்திற்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். .

நியாயமாகப் பார்த்தால், வீட்டிற்கு சோலார் செல் வாங்க, இந்த 1.1 லட்சம் கூட உங்கள் கையில் இருக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் திட்டப்படி, வங்கிகள் குறைந்த வட்டி (7.5%) கடன் கொடுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இது எப்படி வாங்குவது , எந்த வங்கியில் சுலபமாகக் கிடைக்கும் என்ற விவரம் தெரியவில்லை.

வீட்டில் சோலார் செல் மின்சாரம் பயன்படுத்துவதில் இன்னொரு விசயம் இருக்கிறது.. ஏ.சி. மற்றும் வாசிங் மெசின், வாட்டர் ஹீட்டர் மற்றும் போர்வெல் பம்பு, இவை நான்கும் சுவிட்சு பட்டதும் ஆரம்பத்தில் அதிக கரண்டு இழுக்கும். இவற்றை சமாளிக்க இந்த 1 கிலோவாட் சிஸ்டம் பத்தாது.

"எனக்கு எல்லாமே சோலாரில் ஓட வேண்டும்" என்றால் என்ன செய்வது?

இதற்கு குறைந்த பட்சம் 2 கிலோ வாட் சிஸ்டமாவது வேண்டும். இது தவிர, 'சாஃப்ட் ஸ்டார்ட்" (Soft start) அல்லது "மெதுவாக தொடங்கும்" சாதனம் தேவைப்படும். இதனால் விலை கொஞ்சம் அதிகமாகும். இதை வைத்து ஏசி, வாசிங் மெசின், வீட்டிற்கு போர்வெல் பம்பு ஓட்டலாம்.

வாட்டர் ஹீட்டருக்கு, நேரடியாக சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதுதான் நல்லது. அது சுமார் ரூபாய் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஆகலாம். சோலார் செல்லில் மின்சாரம் எடுத்து, பேட்டரியில் சேர்த்து, அப்புறம் சாப்ட் ஸ்டார்டர் வைத்து எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது "ரொம்ப ஓவர்" என்று நண்பர் சொன்னார்!

"மொத்தத்தில் நீங்கள் ரெகமண்ட் செய்வது என்ன" என்று கேட்டால், "வீட்டில் இருக்கும் விளக்குகள், மின் விசிறி , ஃப்ரிஜ், கம்ப்யூட்டர், டி.வி. , மிக்சி இதை எல்லாம் சோலாரில் ஓட்டுங்கள். ஏசி, வாசிங் மெசின் இதை எல்லாம் அரசு மின் இணைப்பில் ஓட்டுங்கள், அதுதான் சுலபம், எகனாமிகல்".


"நாலு நாள் மேக மூட்டமாக இருந்தால் சோலார் கரண்டு வராதே, என்ன செய்வது?"

"உங்கள் வீட்டில் அரசு மின் இணைப்பு இருக்கட்டும், துண்டிக்க வேண்டாம். சோலார் மின்சாரம் இல்லாவிட்டால், தானாகவே (automatic) அரசு மின் இணைப்பு மூலம் மின்சாரம் வரும் வகையில் இணைப்பை கொடுக்கலாம். "

அதாவது, பேட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை அரசு மின்சார மீட்டர் ஓடாது. பேட்டரி தீர்ந்து விட்டால், மீட்டர் ஓடும். மறுபடி பேட்டரி சார்ஜ் ஆனால், அரசு மீட்டர் ஓடாது என்ற வகையில் இருக்கும்.

இந்த பேட்டரிகள், 'லோ மெயிண்டெனன்ஸ் " (Low maintenance) என்ற வகையைச் சார்ந்தவை. வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவில் "AMC" (annual maintenance contract) போட்டால், கம்பெனி ஆள் 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து இவற்றை கிளீன் செய்து செல்வார். இந்த பேட்டரியில் தண்ணீர் அல்லது ஆசிட் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது.

வியாபாரத்திற்கு: இதையே உங்கள் கடைக்கு சோலார் செல் மின்சாரம் வேண்டும் என்றால், மானியம் வீட்டுக்கு கிடைப்பது போலவே கிடக்கும். ஆனால் கடன் மட்டும் இவ்வளவு குறைந்த வட்டியில் கிடையாது. கமர்சியல் ரேட்டில்தான் கிடைக்கும்.

Thanks  to Egarai.com

நிறைகுடம் தளம்பாது.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
 

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...