Total Pageviews

Wednesday, November 7, 2012

சூரிய ஒளி மின்சார தயாரிப்பு அமைப்பை ஏற்படுத்த

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன் கூடிய கடன்

தேசிய மாற்று எரிசக்தி துறையும் தமிழக எரி சக்தி மேம்பாட்டு முகமையும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் தமிழக எரி சக்தி மேம்பாட்டு ஆணைய தலைவர் சுதீப்ஜெயின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் மாற்று எரி சக்தி மேம் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி வருகிற நவம்பர் மாதம் முதல் ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் 60 ஆயிரம் வீடுகளில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு அமைப்பை ஏற்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்காக வீடுகளில் சூரிய ஒளி மின்சார தகடுகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இதன் முலம் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வீடுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் வீட்டு பயன்பாடு போக சேமிக்கும் மின்சாரம் கிரிட் மூலம் மின் நிலையத்துக்கு வந்து விடும்.

இதற்காக மின் உற்பத்தியை கணக்கிட ஒருங்கிணைந்த மீட்டர்கள் பொருத்தப்படும். இத்திட்டத்தின் முன் மாதிரி எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஆரோசபில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் மின் அளவை கணக்கிட்டு வீட்டு உரிமையாளருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு அரசு ஊக்கத்தின் காரணமாக முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அரசு மானியத்துடன் கடன் உதவி: வீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கலாம்

தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கையை அரசு வெளியிட்டு இருப்பது பொது மக்களிடமும், நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூரிய சக்தி மின் உற்பத்திக்கான செலவு அதிகம். பராமரிப்பதும் கஷ்டம் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சூரிய சக்தி மின்சார தயாரிப்புக்கு தயக்கம் காட்டினார்கள். இப்போது அரசு அறிவிப்புக்கு பிறகு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலர் எரிசக்தி மேம்பாட்டு முகாமை அலுவலகத்தை அணுகி ஆலோசனை பெற்று செல்கிறார்கள்.

வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு அதிக பட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்ட செலவில் 30 சதவீதம் என்ற அளவில் அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் அளவுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். இதற்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும். நிறுவனங்களை பொறுத்தவரை 100 கிலோ வாட் நிறுவ திறனுக்கு மானியம் கிடைக்கும் இதற்கு வங்கி கடனும் கிடைக்கும்.

ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வீடுகளில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டி.வி. அல்லது கம்ப்பியூட்டரை இயக்க முடியும்.  இத்திட்டத்தை நிறுவிய நாளில் இருந்து முதல் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 ஊக்கத்தொகை வழங்கப்படும். அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1-ம், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசாவும் வழங்கப்படும். அடுத்த ஆண்டு (2014) மார்ச் 31-ந்தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத் தொகையை பெற முடியும்.

இத்திட்டத்தை நிறுவி தருவதற்கு ஏராளமான முகவர்கள் இருக்கிறார்கள். எரிசக்தி முகமையில் மட்டும் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூலம் நிறுவினால் மட்டுமே அரசின் மானியம் கிடைக்கும்.

ஒரு முறை நிறுவி விட்டால் 15 ஆண்டுகளுக்கு பிரச்சிணை இருக்காது. பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். அவ்வப்போது சூரிய தகடுகள் மீது தூசு படியாமல் துடைக்க வேண்டும். தூசு படிந்தால் உற்பத்தி திறன் குறையும்.

வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய சக்தி திட்டத்தை நிறுவ ரூ. 2 முதல் 2 1/2 லட்சம் செலவாகும். இதில் மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை முகவரிடம் செலுத்தினால் போதும் உடனடியாக நிறுவி தருவார்கள்.

Thanks to Vizhiyepaysu.com


வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? பெற்ற தகவல்கள் இங்கே .

வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.

உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவனமே மானியத்தை வாங்கிக் கொள்ளும். அதாவது நீங்கள் 1.1 லட்சத்திற்கு செக் கொடுத்தால் போதும், மற்றபடி மானிய அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போட்டால், மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மானியத் தொகையை மத்திய அரசு கொடுக்கிறது. இது 100 ரூபாய் சிஸ்டத்திற்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். .

நியாயமாகப் பார்த்தால், வீட்டிற்கு சோலார் செல் வாங்க, இந்த 1.1 லட்சம் கூட உங்கள் கையில் இருக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் திட்டப்படி, வங்கிகள் குறைந்த வட்டி (7.5%) கடன் கொடுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இது எப்படி வாங்குவது , எந்த வங்கியில் சுலபமாகக் கிடைக்கும் என்ற விவரம் தெரியவில்லை.

வீட்டில் சோலார் செல் மின்சாரம் பயன்படுத்துவதில் இன்னொரு விசயம் இருக்கிறது.. ஏ.சி. மற்றும் வாசிங் மெசின், வாட்டர் ஹீட்டர் மற்றும் போர்வெல் பம்பு, இவை நான்கும் சுவிட்சு பட்டதும் ஆரம்பத்தில் அதிக கரண்டு இழுக்கும். இவற்றை சமாளிக்க இந்த 1 கிலோவாட் சிஸ்டம் பத்தாது.

"எனக்கு எல்லாமே சோலாரில் ஓட வேண்டும்" என்றால் என்ன செய்வது?

இதற்கு குறைந்த பட்சம் 2 கிலோ வாட் சிஸ்டமாவது வேண்டும். இது தவிர, 'சாஃப்ட் ஸ்டார்ட்" (Soft start) அல்லது "மெதுவாக தொடங்கும்" சாதனம் தேவைப்படும். இதனால் விலை கொஞ்சம் அதிகமாகும். இதை வைத்து ஏசி, வாசிங் மெசின், வீட்டிற்கு போர்வெல் பம்பு ஓட்டலாம்.

வாட்டர் ஹீட்டருக்கு, நேரடியாக சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதுதான் நல்லது. அது சுமார் ரூபாய் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஆகலாம். சோலார் செல்லில் மின்சாரம் எடுத்து, பேட்டரியில் சேர்த்து, அப்புறம் சாப்ட் ஸ்டார்டர் வைத்து எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது "ரொம்ப ஓவர்" என்று நண்பர் சொன்னார்!

"மொத்தத்தில் நீங்கள் ரெகமண்ட் செய்வது என்ன" என்று கேட்டால், "வீட்டில் இருக்கும் விளக்குகள், மின் விசிறி , ஃப்ரிஜ், கம்ப்யூட்டர், டி.வி. , மிக்சி இதை எல்லாம் சோலாரில் ஓட்டுங்கள். ஏசி, வாசிங் மெசின் இதை எல்லாம் அரசு மின் இணைப்பில் ஓட்டுங்கள், அதுதான் சுலபம், எகனாமிகல்".


"நாலு நாள் மேக மூட்டமாக இருந்தால் சோலார் கரண்டு வராதே, என்ன செய்வது?"

"உங்கள் வீட்டில் அரசு மின் இணைப்பு இருக்கட்டும், துண்டிக்க வேண்டாம். சோலார் மின்சாரம் இல்லாவிட்டால், தானாகவே (automatic) அரசு மின் இணைப்பு மூலம் மின்சாரம் வரும் வகையில் இணைப்பை கொடுக்கலாம். "

அதாவது, பேட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை அரசு மின்சார மீட்டர் ஓடாது. பேட்டரி தீர்ந்து விட்டால், மீட்டர் ஓடும். மறுபடி பேட்டரி சார்ஜ் ஆனால், அரசு மீட்டர் ஓடாது என்ற வகையில் இருக்கும்.

இந்த பேட்டரிகள், 'லோ மெயிண்டெனன்ஸ் " (Low maintenance) என்ற வகையைச் சார்ந்தவை. வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவில் "AMC" (annual maintenance contract) போட்டால், கம்பெனி ஆள் 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து இவற்றை கிளீன் செய்து செல்வார். இந்த பேட்டரியில் தண்ணீர் அல்லது ஆசிட் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது.

வியாபாரத்திற்கு: இதையே உங்கள் கடைக்கு சோலார் செல் மின்சாரம் வேண்டும் என்றால், மானியம் வீட்டுக்கு கிடைப்பது போலவே கிடக்கும். ஆனால் கடன் மட்டும் இவ்வளவு குறைந்த வட்டியில் கிடையாது. கமர்சியல் ரேட்டில்தான் கிடைக்கும்.

Thanks  to Egarai.com

நிறைகுடம் தளம்பாது.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
 

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...