Total Pageviews

Monday, March 25, 2013

பங்கு வர்த்தக கணக்கு துவங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பங்கு வர்த்தக கணக்கு துவங்கும் முன்பு சில ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். எனினும் தேவைப்படும் ஆவணங்கள் (பங்குத்) தரகருக்கு தரகர் மாறுபடும்.
Documents Required Open An Equity Trading Account
தேவையான சில அடிப்படை ஆவணங்கள் பின் வருமாறு:
கணக்குத் தொடங்கும் விண்ணப்பப் படிவம்
தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் (Power of Attorney)(கட்டாயம் இல்லை)

வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணம்

அடையாளத்திற்கான ஆதார ஆவணம்

வங்கிக் கணக்கு மற்றும் டி.பி கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பம் (உங்களிடம் இக்கணக்குகள் இல்லாமல் இருந்தால்)

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

அடையாளத்திற்கான ஆதார ஆவணங்களாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றில் ஒன்ரை பயன்படுத்தலாம்.

ஒரு விண்ணப்பதாரரிடம் பான் கார்டு இல்லை எனில் அவர் பங்கு வர்த்தக கணக்கு தொடங்க இயலாது.

வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணமாக தொலைபேசிக் கட்டண பில், மின் கட்டண பில், மூன்று மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விவரம், வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பதிவு செய்யப்பட்ட வீட்டு வாடகை ஒப்பந்தம் அல்லது விற்பனைப் பத்திரம், ஓட்டுநர் உரிமம், வீட்டு பராமரிப்பு பில், காப்பீட்டு திட்ட நகல் ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பெயர் மற்றும் வசிப்பிட முகவரி விவரங்கள், அடையாளத்திற்கான ஆதார ஆவணம் மற்றும் வசிப்பிட முகவரிக்கான ஆதார ஆவணத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.

நீங்கள் இணையதள பங்கு வர்த்தக கணக்கு தொடங்கி பங்கு வர்த்தகம் செய்யும் போது தான் தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் தேவைப்படுகிறது. தரகர் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கை யாளருக்கும் தனித்தனியான பங்கு வர்த்தக கணக்கினைப் பராமரித்து வருவார். பங்கு வர்த்தக செயல்பாடுகள் தரகரது பெயரில் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உங்களது டீமேட் கணக்கிற்கு மாற்றப்படும். பல தரகர்கள் தமது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி அளிக்கும் விதமாக, பங்கு வர்த்தக கணக்கு, டீமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றை ஒரே கணக்கில் இயக்கும் வண்ணம் வசதிகளை அளிக்கின்றனர். சில தரகர்கள் இத்தகைய "ஒன்றில் மூன்று" கணக்கினை விருப்பத் தேர்வாகவும் அளிக்கின்றனர்.

தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணம் மேற்குறிப்பிட்ட "ஒன்றில் மூன்று" கணக்கினைத் தவிர மற்ற எந்தக் கணக்கு தொடங்கவும் கட்டாயமானது அல்ல. மேலும் தரகருக்கு அதிகாரம் அளிக்கும் ஆவணமானது இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம் அளிக்கும் ஆவணத்தினைத் தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அதிகாரம் அளிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். "ஒன்றில் மூன்று" வகை கணக்கினைத் தொடங்கும் பொழுது டீமேட் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்காமல், பங்கு வர்த்தகக் கணக்கிற்கு மட்டும் அதிகாரம் அளித்து கையொப்பம் இடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Thanks to One india.com

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...