Total Pageviews

Thursday, August 22, 2013

கியாஸ் கசிவு ஏற்பட்டால்




இரவில் தூங்க செல்லும் போது அனைவரும் கியாஸ் சிலிண்டரை மூடிச் செல்ல வேண்டும். சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறையில் கியாஸ் பரவி வெளியேற ஜன்னல் கதவுகள் திறந்து இருக்காவிட்டால் வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது. எனவே கியாஸ் சிலிண்டர் உள்ள அறையின் ஜன்னல் கதவுகள் கண்டிப்பாக திறந்து இருக்க வேண்டும்.


Sunday, August 18, 2013

மனஅமைதி



மனித மனம் பற்பல ஆசைகளைக் கொண்டது. 

ஆசைகளை கனவுகளுக்கு ஓப்பிடலாம். - கார், வண்டி, வீடு, நிலம், பொருள், சொத்து, பணம், பொன்,பெண், சுற்றுலா என ஆசைகளைஅடுக்கி கொண்டே போகலாம். 

தேவைகள் எனபது மனித வாழ்வுரிமை போராட்டம் - தினமும் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், உணவு, உடை, கல்வி, இருப்பிட வசதி, வேலை,வருமானம்  போன்றவைகளாகும்.

இன்றைய சூழலில் மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்வதே எட்டாக் கனியாக உள்ளது.

எப்படி ஆசைகளை நிறைவேற்றுவது.

ஆகவே தான் புத்தர் போன்ற மகான்கள் ஆசையே துன்பத்திற்க்கு காரணம் என்றனர்.


வாழ்வில் மனிதனுக்கு ஆசை, சலனம். குறையக் குறைய  தீயஎண்ணங்களும் குறையும்..எவ்வளவுக்கெவ்வளவு தீயஎண்ணங்கள் குறைகின்றனவோ அந்த அளவுக்கு  வாழ்வில்  மனஅமைதி அதிகரிக்கும்..  

வேலை செய்யும் நிறுவனத்தில் நம் வளர்ச்சிக்கு கடைபிடிக்க வேண்டிய நல்ல 10 பண்புகள்





வேலை செய்யும் நிறுவனத்தில் நம் வளர்ச்சிக்கு கடைபிடிக்க  வேண்டிய நல்ல 10 பண்புகள்

1) எல்லோரிடத்திலும் எப்போதும், எந்த சூழலிலும் அன்பான அணுகு முறையை கையாளுவது.

2) திட்டமிட்ட அயராத உழைப்பு.

3) அனைவரையும் சமமாக பாவித்து, அவர்களும் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுதல்

4) எளிதில் கவலைப்படாத உறுதியான மனம்.

5) நல்லவற்றைச் செய்வதற்க்கு அன்சாத துணிவு

6) எந்த நிலையிலும் நேர்மையை கடைப்பிடிக்கும் பிடிவாதக்குணம்.

7) எவரையும் புண்படுத்தாத மென்மையாத் தன்மை

8) ஒப்பற்ற ஒழக்கம்

9) குன்றாத உற்ச்சாகம்

10) மாறாத விசுவாசம்


வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...