நீங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு
வைத்திருப்பீர்கள். அடிக் கடி வங்கிக்குப் போய்வர முடியாத ஏதோ சில காரணங்களால் கணக்கைச்
செயல்படுத்தாமல் விட்டிருப்பீர்கள்.அப்படி நேர்ந்தால் உங்கள் வங்கி கணக்கு காலாவதியாகி விடுமா ?
நீண்ட காலம் கணக்கைச் செயல்படுத்தாமல்
விட்டு வைத்திருக்கிறீர்கள். ஒரு நாள் வங்கிக்குப் பணம் எடுத்துச் செல் கிறீர்கள்.
வங்கியின் கணினி உங் களைப் பணம் எடுக்க அனுமதிக் காது. அப்போது வங்கி அலுவலர் உங்களைக்
காரணம் கேட்பார் எதனால் கணக்கை இயக்காமல் இருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் சொல்லக்
கூடிய காரணம் ஏற்பு டையதாக இருக்குமானால் கணக்கைத் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கும்
விதத்தில் சில மாற்றங்களைச் செய்வார்கள்.
இரண்டு
ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு இயக்கப் படாமல் இருந்த கணக்கு என்றால் ஒரு சிறு தொகையைக்
கட்டண மாகக் கழிப்பார்கள். அதன்பின் கணக்கை இயக்க கணினி அனு மதிக்கும். சில கணக்குகளில்
நீங்கள் பணத்தை கட்டிக் கொண்டு மட்டுமே வந்திருப்பீர்கள். அதிலிருந்து எடுக்க வேண்டாம்.
பெரி தாக ஒரு தொகை சேர்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பீர்கள்.
பணத்தைக்
கட்டி வைக்கும் நடடிக்கைகளை மட்டுமே மேற் கொள்வதைக் கூடத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால்
கணக்கி லிருந்து பணம் எடுக்கப்படவே இல்லை என்பதையும் வங்கியின் கணினி கணித்துக் கொண்டே
வரும். வெகு காலம் கழித்து நீங்கள் பணத்தை எடுக்கப் போகும் போது தாமதம் நேரும். கேள்விகளுக்குப்
பதில் சொல்ல நேரிடும். ஓய்வு ஊழியர்கள் சிலர் இறந்து போன பின்பும் கூட அவர்களது கணக்கில்
வரவு வைக்கப்பட்டுக் கொண்டே இருக்க நேர்வது உண்டு.
வாடிக்கையாளர்
உயிரோடு இல்லை போல் இருக்கிறது என்று கணினி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கணக்கை
நிறுத்தி வைக்க முயலும். ஆகவே எந்தக் கணக்காக இருந்தாலும் அவ்வப் போது பணத்தைப் போடவும் எடுக்கம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment