Total Pageviews

Wednesday, April 29, 2015

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் 7500/- என வரையறை செய்யப்பட வேண்டும் !


குறைந்த பட்ச பிஎஃப் ஓய்வூதியம் ரூ.1000: திட்ட நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது.

டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில் இதைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் 20 லட்சம் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பலன் அடைவர். இது தவிர கம்பெனிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங் களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களையும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன.

 
Comments :
ஓரு காபி மற்றும் டீ யின் விலை 10 ருபாய்  ஒரு நாளைக்கு  2 தடவை  கணவன் - மனைவி 2 நபர்கள் காபி  சாப்பிட்டால்  40 ரூபாய்  தேவைப் படும். [40 x 30 = 1200 ]

மற்ற செலவிற்க்கு எங்கே செல்வார்கள்! சாப்பாடு, மருத்துவம், மின்சாரம், கேஸ், பால், காய்கறி செலவுக்கு எங்கே போவார்கள் !

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் 7500/- என வரையறை செய்யப்பட வேண்டும் ! 

3 comments:

  1. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  2. இவர்களை பாராளுமன்ற கேன்டீனுக்கு அனுப்பினால் பிழைத்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

ராஜராஜ சோழன் நான்!

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட...