Total Pageviews

Thursday, August 25, 2016

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம்.

அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :-

தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மாரடைப்பு தடுக்கப்படும் :-

திராட்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கும் .

மெட்டபாலிசம் மேம்படும் :-

திராட்சை ஜூஸ் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் :-

திராட்சை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தான் காரணம். மேலும் திராட்சை ஜூஸ் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

எடை குறைவு :-

திராட்சை ஜூஸ் நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

ஒற்றைத் தலைவலி :-

திராட்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்தம் சுத்தமாகும் :-

திராட்சை ஜூஸ் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...