Total Pageviews

Friday, November 25, 2016

மேல்தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!

மேல்தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!
செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமை படத் தெரிந்த அளவிற்கு,

 
அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!

'எவ்வளவு தேறும் இவருக்கு...' என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, 'இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா...' என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.

சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் காரணங்கள் பிடிபடுவதில்லை.

'எப்படித்தான் இந்நிலைக்கு வந்தனரோ...' என்று, நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கின்றனர்.

'சிபாரிசுக்கும், பொருளாதார உதவிக்கும், இவர்கள் எந்த அளவுக்கு நமக்கு பயன்படுவர்...' என்று தான் இவர்களை சுற்றியிருப்போர் கணக்கு போடுகின்றனரே தவிர.. எத்தகைய தனித்திறமைகளால்,  தங்கள் நிலைகளை தக்க வைத்தோ, உயர்த்திக்கொண்டோ செல்கின்றனர் என்கிற ஆராய்ச்சியில், இறங்குவது இல்லை.

நன்கு வளர்ந்தவர்களைப் பொறாமைக் கோணத்துடன் பார்ப்பது வயிற்றில் வைக்கப்படும் நெருப்பை போன்றது.

இது வயிறெரியத்தான் பயன்படுமே தவிர, வேறு பயன் இல்லை.

'என்னோட தான் படிச்சான்;
எப்பவும் கடைசி பெஞ்சுல தான் உட்காருவான்.

இன்னைக்கு என்னடான்னா, எங்கேயோ போயிட்டான். வயிறு பத்திக்கிட்டு எரியுது...' என்று பள்ளித் தோழர் ஒருவர், காதில் புகை வெளிவரும்படி எட்டி நின்று பேசினால், அவர் இன்னும் கீழே போகப் போகிறார் என்று தான் பொருள்.

மாறாக, நெருப்பை நெஞ்சில் வைத்து, அந்த நெருப்பை, நம் வாழ்க்கை நிலை எனும் வாகனத்தை, முன்னோக்கி தள்ளும் எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.

'வாடா நண்பா... நல்லா வந்துட்டே...  உன் கூட படிச்சேன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு.

எனக்கும் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறது, உன்னைப் போல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு சொல்லித் தரக் கூடாதா...' என்று அண்டிச்சென்று கேட்கிற அணுகுமுறை, எத்தனை பேருக்கு இருக்கிறது?

இப்படி கேட்டே விட்டார் ஒருவர்... உடனே, இதை பாராட்டாகவும், பூரிப்பாகவும் எடுத்து கொண்ட பால்ய நண்பர்,  'நல்ல நேரத்தில் வந்தே... கர்நாடகத்துல ஒரு கிளை திறக்கலாம்ன்னு முடிவு செய்து, யாரை போடலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.

நீதான் என், 'மேனேஜிங் பார்ட்னர்' ஓ.கே. வா?'' என்று கேட்க, திக்கு முக்காடி போனார் நம்மவர்.

இந்தளவிற்கு எல்லாராலும் நிர்வாக பங்குதாரராக முடியாவிட்டாலும், நெருங்கி பழகவாவது இடம் கொடுக்க, இந்த வாய்ப்பை கொண்டே, இவரது வெற்றி சூத்திரங்களை தெரிந்து கொண்டு விடலாம்.

பின் என்ன... புழுவாகக் கிடந்தவர்களின் உடலில், புலியின் ரத்தம் ஏறிய கதைதான்.

'நம்மை பார்த்து பொறாமைப் படும் கூட்டத்தில், இதோ என்னை கதாநாயகன் போல எண்ணி வியக்க ஒருவன் இருக்கிறான்; இவனுக்கு, நம் இதயத்தில் இனி நல்லிடம் தான்...' என்று வளர்ந்தவர்கள் இடம் கொடுக்க, வியந்து பேசியவர் வாழ்க்கையில், புது அத்தியாயம் ஆரம்பிப்பது உறுதிதான்.

'அதெல்லாம் முடியாது... இவன் கிட்டப்போய் எவன் நிப்பான்; நான் மானஸ்தன், தன்மானம் கொண்டவன்...' என்கிற வீராப்பு மனநிலை இருக்குமானால், எட்டி நின்று இவரது வளர்ச்சிகளை வியந்து நோக்கலாம்.

மேல்தட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன்...

இவை உங்களுக்கு பயன்படுமானால் மகிழ்ச்சி.

நன்கு வளர்ந்தவர்கள் அனைவருமே..

வெகு சீக்கிரம் எழுகின்றனர்..

நீண்ட நேரம் உழைக்கின்றனர்..

எப்போதும் வளர்ச்சி வளர்ச்சி என்று அடங்காமல் வலம் வருகின்றனர்..

எந்நேரமும், தொழில் சார்ந்த சிந்தனையாகவே இருக்கின்றனர்...

குறைந்த உழைப்பால், நிறைந்த பலன் கிடைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர்...

மிகக் குறைவாகவே பேசுகின்றனர்...

வார்த்தைகளை மிக நளினமாக கையாள்கின்றனர்...

பிடிக்காவிடில், பகைத்து கொள்ளாமல், ஒதுங்கி கொள்கின்றனர்...

எது ஒன்றையும், மனம் புண்படாதபடி மறுக்கின்றனர்.

மேல்தட்டு மக்களை வியப்பதை பொறுத்தவரை,
ஒரே ஒரு நிபந்தனை உண்டு.

சிலர், நியாயத்திற்கு புறம்பான வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களை மட்டும், கரும்புள்ளி வைத்து ஓரங்கட்டி விடுங்கள் போதும்!

வீழ்வதற்கல்ல வாழ்க்கை!

Wednesday, November 16, 2016

உடல்மொழியும் ! அதன் பாதிப்புகளும் !




**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.

Tuesday, November 15, 2016

3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்திக் கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.....

கற்பூரம் இயற்கையாகக் கொசுக்களை விரட்டக்கூடிய தன்மை உள்ளதாகும்.

பக்க விளைவுகள் ஏதுமில்லாமல், குறைவான செலவில் கற்பூரத்தைக் கொண்டு கொசுக்களை எளிதாக விரட்டி விடலாம்.

கற்பூரத்தைக் கொளுத்த வேண்டிய தேவையும் கிடையாது.

கீழ்க்கண்ட 3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்திக் கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.....

1. கடைகளில் விற்கப்படுகின்ற கற்பூரத்தில் இரண்டு வில்லை களை வெற்றுத் தரையில் வைத்திருக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படுகின்ற ஒரு மணி நேரத்தில் கொசுக்கள் இல்லாமல் போவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

இதுபோன்று காலையிலும் மாலையிலும் இரண்டு முறை செய்யும்போது அந்தப் பகுதிகளில் கொசுக்கள் இல்லாமல் போகும்.

2. அறையின் இரு வேறு மூலைகளில் கொசுக்கள் எங்கெல்லாம் தஞ்சம் அடைகின்றன என்று தெரிகிறதோ அப்பகுதிகளில்இரண்டு கற்பூர வில்லைகளை வைக்கும்போது,அவை சிறிது சிறிதாக ஆவியாகிக் கொசுக்களை விரட்டுவதுடன் காற்றையும் தூய்மைப்படுத்திவிடுகின்றன.

3. அகலமான சிறிய பாத்திரம் அல்லது தட்டில் தண்ணீரை நிரப்பி அதில் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டுவைக்க வேண்டும்.

படுக்கை அறையில் அப்பாத்திரத்தைத் தண்ணீருடன் கற்பூரத்தையும் சேர்த்து வைக்கும்போது,

தண்ணீரில் சிறிது சிறிதாகக் கற்பூரம் கரையும்.

சராசரியான தட்ப வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும்போது,அப்பகுதி முழுவதும் கற்பூரத்தின் மணம் பரவும்.

சிறிது வெதுவெதுப்புடன் உள்ள தண்ணீர் என்றால் இச்செயல் இன்னும் வேகமாக இருக்கும்.

அறையின் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் மற்றும் கற்பூரத்தின் அளவு மாறுபடும்.

ஆக, கற்பூரத்தின் தன்மையால் கொசுக்கள் எளிதில் விரட்டப்படுவதை  நேரடியாக உணரலாம்.

செய்து பாருங்கள்....

Monday, November 14, 2016

வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!

விளக்கேற்றுவது ஏன் ?



நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!

விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.


எதற்கு என்று தெரியுமா?? 


சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்! 

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. 

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. 

சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது. 

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர். 

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது….

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. 

ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க

“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போக வேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வர வேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.

கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.

மணம் வீசும் மலர்களின் வாசம்…

அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.

கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல… தாயார் மகிழ்ந்தார்……

குறிப்பு:
********
மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகு வத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்…. 

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். 

இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம்,  எதை பயன்படுத்தக்கூடாது, என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி
எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும் நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். 

இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.



விளக்கேற்றவேண்டிய நேரம்
*********************************

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.  

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.

சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
*******************************
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக   ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்  அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும் நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம்
காண்போம் 

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
***************************
1) நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். 

2) நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

3) விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

4) கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

5) எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும்
நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே
கூடாது. 

திசைகள் !

கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.

வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு -இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர்  பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,  பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக  எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான
பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக
திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்
பேறு உண்டாகும். 

மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.

தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.

வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது. 

வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

மெரினா கடற்கரையில் தினமும் இருபதாயிரம் புறாக்கள் ஒன்று கூடுகின்றன !

உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது கடற்கரை மெரினா…


 அந்த மெரினா கடற்கரையில் ஒன்றல்ல இரண்டு அல்ல… 

நூறல்ல ஐநூறு அல்ல.. ஒரு நாளைக்கு மொத்தம் 20,000 புறாக்கள்… சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே விடியற்காலையில் ஒன்று கூடுகின்றன என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
 
ஆம் தினமும் இருபதாயிரம் புறாக்கள் ஒன்று கூடுகின்றன…

நாயகன் திரைப்படத்தில் மும்பையில் சரண்யாவை அழைத்துக்கொண்டு நடந்து வரும் போது கேட்வே ஆப் இந்தியா அருகே இரண்டு பேரும் நடந்து வரும் போது புறாக்கள் பறந்து போகுமே..? அது போல அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஆனா புறாக்களும் சென்னையில் இருக்கின்றன என்பது நம்மில் பலரும் அறியாத சேதி..

20,000 புறாக்கள் ஒரே இடத்தில் நான் சென்னை வந்து இத்தனை வருடங்களில் நான் பார்த்ததே இல்லை என்பேன்… மிகச்சரியாக காலை 5,45க்கு அத்தனை புறாக்களும் அசெம்பி
ள் ஆகின்றன. 

மெரினாவில் சரியா ஏழு ஆண்டுகளுக்கு முன் அமர் சந்த் என்பர் தனது மனைவியோடு மெரினா கடற்கரையில் புறாக்களுக்கு தினமும் உணவு ((தானியங்கள்)) இட தொடங்கினார்… அன்று சும்மா டைம் பாசுக்காக தொடங்கிய விஷயம் இன்று வருடத்துக்கு அரை கோடி செலவு செய்து தானியம் இடும் அளவுக்கு வளர்ந்து இருக்கின்றது என்பது வியப்பான விஷயம்தான்..

ஆம் கடந்த ஏழு வருடங்களாக இந்த புறாக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது… எந்த நாளும் விடுமுறை அல்ல… வருடத்தில் 365 நாட்களும் சென்னையில் புறாக்களுக்கு தானியமிட்டு வருகின்றார்கள் இந்த தம்பதிகள்..

இவ்வளவு ஏன் சுனாமியில் கூட தானியம் இடுவதோடு கொட்டும் மழையிலும் தானியங்கள் புறாக்களுக்கு அளித்து வருகின்றார்கள்…

முக்கியமாக மழைகாலத்தில் இரை கிடைப்பது கடினம்… ஆனால் அமர்சந்த் உணவு இடுவார் என்று தெரிந்து அங்கே கொட்டும் மழையிலும் பறாக்கள் ஆஜர் ஆகின்றன என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை….

ஒரு புறா தினமும் 50 கிராம் சாப்பிடுகின்றது..

20,000 புறாக்கள் தினமும் சாப்பிடுகின்றன…

600 கிலோவில் இருந்து 700 கிலோ அளவுக்கு தானியங்கள் தினமும் வழங்கப்படுகின்றன…

தினமும் 12 ஆயீரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகின்றது.. மாதத்துக்கு நாலு லட்சம் செலவாகின்றது..
வருடத்துக்கு 50 லட்சம் வரை செலவாகின்றது என்கின்றார் அமர்சந்த்…

எல்லோரும் உதவுகின்றார்கள்.. யார் வேண்டுமானாலும் உதவலாம்..

வீட்டில் நடக்கு விசேஷ நாட்களுக்கு புறாக்களுக்கு தானியங்கள் வாங்கி நீங்களே நேரில் போய் இடலாம்.. அல்லது காசு பணமாக அவர்களிடம் கொடுக்கலாம்…

போட்டோ எடுக்கின்றேன் பேர்வழி என்று புறாக்கள் உணவு உண்பதை போட்டோ எடுக்கின்றேன் என்று அதனை சில நேரத்தில் சாப்பிடுவதை டிஸ்டர்ப செய்வதை தவிர்த்து வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றார் அமர்சந்த்.

மெரினாவில் ஒரு ஓரத்தில் புறாக்களுக்கு தானியங்கள் இட தனியாக ஒரு நாலு சக்கர வண்டியில் சேமித்து வைத்து இருக்கின்றார்கள்..

காலையில் 5.30 மணிக்க அமர் சந்த மற்றும் அவர் மனைவியும் தினமும் வந்து புறாக்களுக்கான உணவுகளை இடுகின்றார்கள்..

இதனை நிறைய மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்…

அமர்சந்த் தொலைபேசி எண்…9381036615

LPG சிலிண்டர் விபத்து ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!




ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை….

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை…!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்…

சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை…!

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்

அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்…!

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை…!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்….

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் நண்பர்பளே… அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.)
 
Call: 1800 2 333 555

Friday, November 11, 2016

எலும்புகளை பாதுகாக்கும் உணவுகள் !

எலும்புகளை பாதுகாக்கும் உணவுகள்

*நம் உடம்பின் அடிப்படைக் கட்டுமான அமைப்பாகத் திகழும் எலும்புகளைக் காக்க நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.

*அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவிழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.

*உடலில் உப்பு அதிகமாகும்போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்போது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்துக்கொள்ள வேண்டும்.

*பாஸ்பாரிக் அமிலம் உள்ள குளிர்பானங்கள் கால்சியம் சத்துகளை அழிக்கும் தன்மை உள்ளவை. காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதும் நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாகும்.

*பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மி.லி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் செரிமானம் ஆவதில்லை என்பதால் அவர்கள் பால் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

*அதோடு அவர்கள் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் தாராளமாக உள்ளது.

*அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனிக் கீரை மற்றும் வெற்றிலையில் கால்சியச் சத்து அதிகம்.

*எள்ளில் கால்சியச் சத்து நிறைந்திருப்பதால் அதை வெல்ல உருண்டைகளாகத் தயாரித்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

*கேழ்வரகிலும், பிரண்டையிலும் கால்சியச் சத்து அதிகம். கேழ்வரகு அடை, பிரண்டைத் துவையல் என்று தயாரித்துச் சாப்பிடலாம்.

தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்றவைகளுக்கு எளிய முறையில் வீட்டு மருத்துவம்

தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்றவைகளுக்கு எளிய முறையில் வீட்டு மருத்துவம் கூறுகிறேன்👇🏾

*இதனை மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். இதற்கான டிப்ஸ்*👇🏾

ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைகட்டு சரியாகும்.

சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.


வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியும் இருக்காது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Sunday, November 6, 2016

பானை வயிறு தட்டையாக என்ன செய்யவேண்டும்?

பானை வயிறு தட்டையாக என்ன செய்யவேண்டும்?

சிலரது வயிறைக் கவனித்திருக்கிறீர்களா? 

அவர்களது வயிறு பானை போன்று வீங்கிக் காணப்படும்.இது அவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தையும்  ஏற்படுத்தும். இந்தப் பானை வயிறு பிரச்னையால்,உலகில் ஏராளமான மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.



சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதாலும் ஏற்படும். ஆனால் இந்த வயிறு வீக்கம் ஒருவருக்கு அடிக்கடி ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்கிறது செய்தி ஒன்று.



அப்படி பானைப் போன்று வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு சில டிப்ஸ்களையும் அந்தச் செய்தி கொடுத்திருக்கிறது.அது என்னவென்று பார்க்கலாமா?



அதிகப்படியான உப்பு , உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, உடலில் உப்பு மற்றும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி, அதன் காரணமாக வயிற்றை வீக்கத்துடன் வெளிக்காட்டும்.


எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட், உப்புமிக்க ஸ்நாக்ஸ் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு அதை வருவதை உடனே நிறுத்துங்கள்.



தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக குடிக்கிறோமோ, அந்த அளவில் செல்களில் தேங்கியுள்ள நீர்மம் வெளியேற்றப்படும்.


இப்படி நீர்மம் வெளியேற்றப்பட்டால், தட்டையான வயிற்றை எளிதில் பெறலாம். எனவே உங்களுக்கு வயிறு வீங்கி இருப்பது போல் உணர்ந்தால், சில டம்ளர் நீரைப் பருகுங்கள்.



நீங்கள் எந்நேரமும் சூயிங்கம் மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அதிகப்படியான காற்றினை விழுங்கக்கூடும். இதன் காரணமாக வயிறு உப்புசத்துடன், காற்று ஊதிய பலூன் போன்று எப்போதும் வீங்கி இருக்கும். எனவே சூயிங்கம் மெல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.



கார்போனேட் பானங்களை அதிகம் பருகினாலும், வயிறு வீங்கி காணப்படும். எனவே சோடா பானங்களை அதிகம்குடிப்பவராக இருந்தால், , உடனே அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.


செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு உணவுப் பொருட்களை உட்கொண்டாலும், அது தீவிரமான இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இதனாலும் வயிறு வீங்கலாம்.


ஆகவே உணவில் இனிப்பு சுவை வேண்டுமானால், சர்க்கரைக்கு பதிலாக தேன் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Tuesday, November 1, 2016

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் :

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.

🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.

🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.

🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.

🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!

🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...