Total Pageviews

Monday, November 14, 2016

மெரினா கடற்கரையில் தினமும் இருபதாயிரம் புறாக்கள் ஒன்று கூடுகின்றன !

உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது கடற்கரை மெரினா…


 அந்த மெரினா கடற்கரையில் ஒன்றல்ல இரண்டு அல்ல… 

நூறல்ல ஐநூறு அல்ல.. ஒரு நாளைக்கு மொத்தம் 20,000 புறாக்கள்… சென்னை விவேகானந்தர் இல்லம் எதிரே விடியற்காலையில் ஒன்று கூடுகின்றன என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
 
ஆம் தினமும் இருபதாயிரம் புறாக்கள் ஒன்று கூடுகின்றன…

நாயகன் திரைப்படத்தில் மும்பையில் சரண்யாவை அழைத்துக்கொண்டு நடந்து வரும் போது கேட்வே ஆப் இந்தியா அருகே இரண்டு பேரும் நடந்து வரும் போது புறாக்கள் பறந்து போகுமே..? அது போல அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஆனா புறாக்களும் சென்னையில் இருக்கின்றன என்பது நம்மில் பலரும் அறியாத சேதி..

20,000 புறாக்கள் ஒரே இடத்தில் நான் சென்னை வந்து இத்தனை வருடங்களில் நான் பார்த்ததே இல்லை என்பேன்… மிகச்சரியாக காலை 5,45க்கு அத்தனை புறாக்களும் அசெம்பி
ள் ஆகின்றன. 

மெரினாவில் சரியா ஏழு ஆண்டுகளுக்கு முன் அமர் சந்த் என்பர் தனது மனைவியோடு மெரினா கடற்கரையில் புறாக்களுக்கு தினமும் உணவு ((தானியங்கள்)) இட தொடங்கினார்… அன்று சும்மா டைம் பாசுக்காக தொடங்கிய விஷயம் இன்று வருடத்துக்கு அரை கோடி செலவு செய்து தானியம் இடும் அளவுக்கு வளர்ந்து இருக்கின்றது என்பது வியப்பான விஷயம்தான்..

ஆம் கடந்த ஏழு வருடங்களாக இந்த புறாக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது… எந்த நாளும் விடுமுறை அல்ல… வருடத்தில் 365 நாட்களும் சென்னையில் புறாக்களுக்கு தானியமிட்டு வருகின்றார்கள் இந்த தம்பதிகள்..

இவ்வளவு ஏன் சுனாமியில் கூட தானியம் இடுவதோடு கொட்டும் மழையிலும் தானியங்கள் புறாக்களுக்கு அளித்து வருகின்றார்கள்…

முக்கியமாக மழைகாலத்தில் இரை கிடைப்பது கடினம்… ஆனால் அமர்சந்த் உணவு இடுவார் என்று தெரிந்து அங்கே கொட்டும் மழையிலும் பறாக்கள் ஆஜர் ஆகின்றன என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை….

ஒரு புறா தினமும் 50 கிராம் சாப்பிடுகின்றது..

20,000 புறாக்கள் தினமும் சாப்பிடுகின்றன…

600 கிலோவில் இருந்து 700 கிலோ அளவுக்கு தானியங்கள் தினமும் வழங்கப்படுகின்றன…

தினமும் 12 ஆயீரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகின்றது.. மாதத்துக்கு நாலு லட்சம் செலவாகின்றது..
வருடத்துக்கு 50 லட்சம் வரை செலவாகின்றது என்கின்றார் அமர்சந்த்…

எல்லோரும் உதவுகின்றார்கள்.. யார் வேண்டுமானாலும் உதவலாம்..

வீட்டில் நடக்கு விசேஷ நாட்களுக்கு புறாக்களுக்கு தானியங்கள் வாங்கி நீங்களே நேரில் போய் இடலாம்.. அல்லது காசு பணமாக அவர்களிடம் கொடுக்கலாம்…

போட்டோ எடுக்கின்றேன் பேர்வழி என்று புறாக்கள் உணவு உண்பதை போட்டோ எடுக்கின்றேன் என்று அதனை சில நேரத்தில் சாப்பிடுவதை டிஸ்டர்ப செய்வதை தவிர்த்து வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றார் அமர்சந்த்.

மெரினாவில் ஒரு ஓரத்தில் புறாக்களுக்கு தானியங்கள் இட தனியாக ஒரு நாலு சக்கர வண்டியில் சேமித்து வைத்து இருக்கின்றார்கள்..

காலையில் 5.30 மணிக்க அமர் சந்த மற்றும் அவர் மனைவியும் தினமும் வந்து புறாக்களுக்கான உணவுகளை இடுகின்றார்கள்..

இதனை நிறைய மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்…

அமர்சந்த் தொலைபேசி எண்…9381036615

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...