இன்று நம்மில் பெரும்பாலானோர் காதுகளில்
ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம். வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக,
24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக
மாறிவிட்டது. இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது.
நம்மில்
எத்தனை பேர் டிவியில் 10 - 15 சப்த அளவில் ஒலி வைத்து கேட்கிறோம்.
கேட்டால் 5.1, 7.1 ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு வேறென்ன செய்வது என கேள்வி
கேட்பார்கள். காது கேட்கும் திறன் போனால் கூட பரவாயில்லை, ஸ்பீக்கர்
பயன்பாடு தான் முக்கியமாகிவிட்டதா என்ன?
இந்த எட்டு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக காது கேட்கும் திறனை அதிகரிக்க முடியும்.
வழி #1
புகைக்க
வேண்டாம்! புகையிலை பழக்கம் அந்நபரின் காது கேட்கும் திறனை மெல்ல, மெல்ல
குறைய செய்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகைக்கும் பழக்கத்தை
கைவிட்டுவிடவும்.
வழி #2
காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் கண்டத்தைவிட்டு காதை நோண்ட வேண்டாம்.
மேற்புறமாக
தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி
ஏதேனும் பிரச்சனை போன்று உணர்ந்தால் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக்
கொள்ளுங்கள்.
வழி #3
ஆன்டி-பயாடிக்,
புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காத்து கேட்கும்
திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட
காத்து கேட்கும் திறனை பாதிக்கும். எனவே, நீங்கள் எடுத்துக் கொள்ளும்
மருந்து ஏதுனும், காதுக்கு பிரச்சனை தருவது போன்று உணர்ந்தால் உடனே
மருத்துவரிடம் அதை பற்றி கூறுங்கள்.
வழி #4
அதிக
சப்த இரைச்சல் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டாம். இருக்க வேண்டிய
கட்டாயம் நேரிடும் பட்சத்தில், காதுகளின் நலன் மீது அக்கறை எடுத்துக்
கொண்டு, பஞ்சு அல்லது காதை பொத்தியபடி துணி கட்டிக் கொள்வது நல்லது.
வழி #5
அமைதி
அவசியம். நாள் முழுக்க நான் ஓடிக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைவதை போல,
நாள் முழுக்க சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளும்
சோர்வடைந்துவிடும். எனவே, தினமும் ஓரிரு மணிநேரம் அமைதியான இடத்தில்
அமர்ந்து செவிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.
வழி #6
ஹெட்போன்,
டிவி, கேம் ஆடும் போது அதிக சப்தம் வைத்து கேட்க வேண்டாம். உங்கள் காதை
குறைந்த சப்தத்தை கேட்டுணர பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சப்தத்தை
குறைத்து கேட்கும் போது, உங்கள் காதுகள் தானாக அதற்கு ஏற்ப பழகிவிடும்.
வழி #7
காதுகளை
பாதுகாக்க வேண்டும். காதுகளின் வெளிப்புறத்தில் பஞ்சு வைத்துக் கொள்வதால்
சப்தம் குறைவாக கேட்க முடியும். இதற்கென சந்தையில் Earplug-குகள் கூட
விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் 15-30 டெசிபல் சப்தம் குறைவாக
கேட்க முடியும்.
வழி #8
- கேட்கும் திறன் குறைகிறது எனில்,
- உங்களை சுற்றி எப்போதும் அதிக சப்தம் இருக்கிறது எனில்,
- காதில் ஏதோ ரிங் அடிப்பது போன்ற சப்தம் கேட்கிறது எனில்..,
No comments:
Post a Comment