Total Pageviews

Monday, October 28, 2019

இரத்த(ம்) தானம் !


தானத்தில் சிறந்தது இரத்தம் தானம்!


உலக இரத்தம் தானம் நாள் – ஜூன் 14

+ ive positive நேர்மறை

– ive negative எதிர்மறை

A+ ive இரத்த வகை உடையவர் –

A+ ive, AB+ ive இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

A-இரத்த வகை உடையவர் –
A+,AB+,AB-,A-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

B+இரத்த வகை உடையவர் –
B+,AB+இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

B-இரத்த வகை உடையவர் –
B+,B-,AB+,AB-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

O+இரத்த வகை உடையவர் –
A+,B+,AB+,O+இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

O-இரத்த வகை உடையவர் –
A+,A-,B+,B-,O+,O-,AB+,AB-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

AB+இரத்த வகை உடையவர் –
AB+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

AB-இரத்த வகை உடையவர் –
AB+, AB-இரத்த வகை உடையவர் களுக்கு பகிரளாம்.

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்தம் தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்ய நல்ல ஆரோக்கியத்துடனும்50கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்.

ஒருவர் 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம்.

ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.

பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை
இரத்த தானம் செய்யலாம்.

ரத்தம் தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின்குறைந்தபட்சம் 12.5% ஆக இருக்கவேண்டும்.

இரத்தம் தானம் செய்வீர் !
 
பல உயிர்களை காப்பிர் !

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

  • 1.தானம்
  •  
  • 2. அடமானம்
  •  
  • 3. முன் கிரயம்
  •  
  • 4. முன் அக்ரிமெண்ட்,
  •  
  • 5. உயில்
  •  
  • 6. செட்டில்மெண்ட்,
  •  
  • 7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
  •  
  • 8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
  •  
  • 9. வாரிசு பின் தொடர்ச்சி,
  •  
  • 1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
  •  
  • 11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
  •  
  • 12.சொத்து ஜப்தி,
  •  
  • 13.சொத்து ஜாமீன்,
  •  
  • 14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
  •  
  • 15.வங்கி கடன்கள்,
  •  
  • 16.தனியார் கடன்கள்,
  •  
  • 17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
  •  
  • 18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
  •  
  • 19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
  •  
  • 20.நிலகட்டுப்பாடு ,
  •  
  • 21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
  •  
  • 22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
  •  
  • 23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
  •  
  • 24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

நன்றி

வாழும் நாட்கள் நலமாக இருக்க !

நம்மில் யாருமே 101 ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை!
 
போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை !

ஆகவே சிக்கனமாக  இருக்காதீர்கள்.
 
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்!
 
மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்!
 
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
 
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
 
நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
 
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
 
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
 
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
 
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
 
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? க்கான பட முடிவு
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
 
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது!
 
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
 
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும்.
 
பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
 
பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
 
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
 
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
 
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கும்.
 
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
 
உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
 
நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!
 
அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?
 
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!! 

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!

  தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
 à®ªà®¾à®•à¯à®Ÿà¯€à®°à®¿à®¯à®¾à®•à¯à®•à®³à¯ˆ கொல்லும்
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கப்ஹா, பிட்டா மற்றும் வடா போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

பாக்டீரியாக்களை கொல்லும்

 

தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.


தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்

தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
 

கீல்வாத வலியை குணப்படுத்தும்

 

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

புண்களை வேகமாக குணப்படுத்தும்

 

புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
 

மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்

 

மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

 

வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
 

இரத்த சோகையை எதிர்க்கும்

 

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.


கர்ப்ப காலத்தின் போது:

 

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
 

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்

 

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
 

வயதாகும் செயல்முறை குறையும்

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

ஹெட்போன் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் !

இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்கள் போலியான ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது, தங்களின் பொழுது போக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.


நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.
நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை அதிக நேரம் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றன..அதே போல வேகமாக பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன...
தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்ற மனநோய் வரும். இதனால் அவர்களுக்கு ஹெட்போனை கழற்றிய பிறகும் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும் இருக்கும்.
ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்ப டைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால் ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக் கொள்ளுங்கள்!!!!

டெங்கு காய்ச்சல் !

டெங்கு காய்ச்சல் பற்றிய ஓர் விழிப்புணர்வு கட்டுரை. படித்து, அனைவருக்கும் பகிருங்கள்.


 டெங்கு- மழை காலங்களில் தீவிரமாக பரவும் ஒரு கொடிய நோய். மக்களிடம் இதை பற்றின ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:
  • டெங்கு
  •  
  • கொசுக்கள் உற்பத்தியாகும் விதம்
  •  
  • நோய் பரவும் விதம்
  •  
  • மருத்துவ சிகிச்சை
  •  
  • டெங்கு அறிகுறிகள்
  •  
  • வீடு வைத்தியம்
  •  
  • தடுக்கும் முறை

டெங்கு


டெங்கு காய்ச்சல் ஒரு வகையான வைரஸ் கிருமி யினால் ஏற்பட கூடியது. ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) என்ற வகையை சேர்ந்த பெண் கொசுவால் மட்டுமே இந்நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும் திறன் கொண்டது. உடல் மற்றும் கால்களில் கறுப்பு, வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன.

கொசுக்கள் உற்பத்தியாகும் விதம்

தெருக்கள் மற்றும் வீட்டை சுற்றி தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் `ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. தண்ணீரில் முட்டையிட்டு கொசுக்கள் வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டு வரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்ப ஆரம்பிக்கின்றன.

நோய் பரவும் விதம்

இந்நோய் காற்று, தும்மல், தொடுதல் மூலம் பரவக்கூடியது கிடையாது. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவுவது இல்லை. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு அந்த வைரஸ் கிருமிகளை சுமந்து கொண்டு பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது மற்ற மனிதருக்கும் டெங்கு ஏற்படுகிறது.

மருத்துவ சிகிச்சை

இதன் ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் மற்ற வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகளை போன்று ஒத்து இருப்பதால் இதனை டெங்கு என்று உடனே உறுதி செய்ய இயலாது. முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்புதான் இதனை தீர்மானிக்க முடியும்.

டெங்கு அறிகுறிகள்

காய்ச்சலுடன் சேர்ந்து உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது டெங்குவிற்கான அறிகுறிகள். காய்ச்சல் 2 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று இரத்த பரிசோதனை செய்து முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் காய்ச்சல் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு வாரத்திற்குள் சரியாகிவிடும்.

வீடு வைத்தியம்

மழை காலங்களில் நிலவேம்பு குடிநீரை பருகி வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுரத்தை தடுக்கும் வல்லமை கொடுக்கும்.

தடுக்கும் முறை

டெங்குவை தவிர்க்க ஒரே வழி கொசுவை ஒழிப்பதே. கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு வீட்டை சுற்றியும் தெறுபகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்



சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...