Total Pageviews

Monday, October 28, 2019

டெங்கு காய்ச்சல் !

டெங்கு காய்ச்சல் பற்றிய ஓர் விழிப்புணர்வு கட்டுரை. படித்து, அனைவருக்கும் பகிருங்கள்.


 டெங்கு- மழை காலங்களில் தீவிரமாக பரவும் ஒரு கொடிய நோய். மக்களிடம் இதை பற்றின ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:
  • டெங்கு
  •  
  • கொசுக்கள் உற்பத்தியாகும் விதம்
  •  
  • நோய் பரவும் விதம்
  •  
  • மருத்துவ சிகிச்சை
  •  
  • டெங்கு அறிகுறிகள்
  •  
  • வீடு வைத்தியம்
  •  
  • தடுக்கும் முறை

டெங்கு


டெங்கு காய்ச்சல் ஒரு வகையான வைரஸ் கிருமி யினால் ஏற்பட கூடியது. ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) என்ற வகையை சேர்ந்த பெண் கொசுவால் மட்டுமே இந்நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும் திறன் கொண்டது. உடல் மற்றும் கால்களில் கறுப்பு, வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை `புலிக்கொசுக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன.

கொசுக்கள் உற்பத்தியாகும் விதம்

தெருக்கள் மற்றும் வீட்டை சுற்றி தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் `ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. தண்ணீரில் முட்டையிட்டு கொசுக்கள் வளர 7 முதல் 10 நாள்களாகும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டு வரையிலும் அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நீர் தேங்கியிருக்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோயைப் பரப்ப ஆரம்பிக்கின்றன.

நோய் பரவும் விதம்

இந்நோய் காற்று, தும்மல், தொடுதல் மூலம் பரவக்கூடியது கிடையாது. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு நேரடியாக பரவுவது இல்லை. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு அந்த வைரஸ் கிருமிகளை சுமந்து கொண்டு பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது மற்ற மனிதருக்கும் டெங்கு ஏற்படுகிறது.

மருத்துவ சிகிச்சை

இதன் ஆரம்ப அறிகுறிகள் அனைத்தும் மற்ற வைரஸ் காய்ச்சல்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகளை போன்று ஒத்து இருப்பதால் இதனை டெங்கு என்று உடனே உறுதி செய்ய இயலாது. முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்புதான் இதனை தீர்மானிக்க முடியும்.

டெங்கு அறிகுறிகள்

காய்ச்சலுடன் சேர்ந்து உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது டெங்குவிற்கான அறிகுறிகள். காய்ச்சல் 2 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று இரத்த பரிசோதனை செய்து முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் காய்ச்சல் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு வாரத்திற்குள் சரியாகிவிடும்.

வீடு வைத்தியம்

மழை காலங்களில் நிலவேம்பு குடிநீரை பருகி வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுரத்தை தடுக்கும் வல்லமை கொடுக்கும்.

தடுக்கும் முறை

டெங்குவை தவிர்க்க ஒரே வழி கொசுவை ஒழிப்பதே. கொசுக்கள் உற்பத்தி ஆகாதவாறு வீட்டை சுற்றியும் தெறுபகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்



No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...