Total Pageviews

Saturday, September 28, 2019

மதுவினால் உண்டாகும் பிரச்னைகள்:

நம்மில் பலர் இன்பம் அனுபவிக்க  வேண்டும் என மதுபானம் அருந்துகின்றனர்!

உண்மையில் மது இன்பம் அல்ல ! துன்பம் ! துன்பமே! கட்டிங்க் அடிப்பவனுக்கு 4 மணி நேரத் துன்பம் !  குவாட்டர் அடிப்பனுக்கு 8 மணி நேரத் துன்பம் !

 ஆனால் சிலருக்கோ குடிப்பது தீவிர பிரச்னையாக மாறலாம் !

உண்மையில் சாராய மதுபானம், கஞ்சா மற்றும் ஹெராயினை விட அதிக தீங்கு விளைவிக்கும். மது ஒரு அமைதியூட்டி, அடிமைப்படுத்தும் தன்மையுடையது, விபத்து மற்றும் உடல்நலக்கோளாறுகளால் பல மருத்துவமனை சேர்க்கைகளுக்கு காரணமாகும்.

சாதாரணமாக மது அருந்த வேண்டும் என்றால் ஓன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள்  ஒன்றினைதந்துதான் குடிக்க செல்லுகின்றனர். எனவே குடிப்பவருடன் சகவாசம் வேண்டாம். இலவசமாக மது கிடைத்தாலும் குடிக்க மாட்டேன் என மன உறுதியுடன் இருந்தால் நல்லது.போதையால் எற்படும் சிற்றின்பத்தை விரும்பாமல் இருப்பது நல்லது ! மது  - நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும், உடல், மனது, சிந்தனை, செயல்பாடு ஆகியவற்றிற்க்கு கேடாக உள்ளது.

மதுவினால் உண்டாகும் பிரச்னைகள்:

அளவுக்கு அதிகமாக குடிப்பது, தவறான இடத்தில் அல்லது தவறான நேரத்தில் குடிப்பது பல பிரச்னைகளுக்கு காரணமாகும். மது உங்களின் மதிப்பீடும் தன்மையை பாதிக்கும் ஆதலால் நீங்கள் இயல்பாக சிந்தனைகூட செய்யாத விசயங்களை செய்வீர்கள். மதுவினால் ஆபத்துகளை குறைவாக உணர்வீர்கள் ஆதலால் நீங்கள் எளிய இலக்காவீர்கள். நீங்கள் பெரும்பாலான சமயங்களில் சண்டை, வாதங்கள்,  பணப்பிரச்னைகள், குடும்ப துன்பங்கள் அல்லது அக்கணத்தில் உந்தப்பட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவீ்ர்கள். மது வீடு, சாலை, நீர் நிலைகள் மற்றும் விளையாட்டு களங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு காரணமாகும்.

மதுவினால் உண்டாகும் உடல்நலக்கோளாறுகள்:

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் தீவிர நீட்டிப்பு (Hangovers), வயிற்று வலி, இரத்த வாந்தி, மயக்கமடைதல் மற்றும் மரணம் நேரிடலாம். மிகவும் அதிகமாக நீண்ட காலம் குடிப்பதால் கல்லீரல் நோய் மற்றும் சில வகையான புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும். 

மதுவினால் உண்டாகும் மனநலக்கோளாறுகள்:

நாம் மதுபானத்தை சந்தோஷமாக இருப்பதற்காக குடிக்கிறோம் என்று நினைத்தாலும் மிகையான குடி மனச்சோர்வை கொண்டுவரக்கூடும். தற்கொலை செய்துகொள்ளும் பலருக்கு குடிப்பழக்கம் இருப்பதுண்டு. மது ஞாபகமறதி மற்றும் மூளை பாதிப்பை உண்டாக்கும். அது குரல் மற்றும் சத்தங்களை கேட்க வைக்கும் - இவ்வனுபவம்  மிகவும் இனிமையற்றதாகவும் விடுபட கடினமானதாகவும் இருக்கும்.

எச்சரிக்கை அறிகுறிகள்:

கீழே குறிப்பிட்டுள்ளவை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

  • குடிக்காமல் இயல்பாக இருக்க இயலாதது அல்லது குடிக்காமல் ஒரு நாளை தொடங்க முடியாமல் இருத்தல்.
  •  
  • குடித்து முடித்த சில மணி நேரத்தில் வேர்வை, நடுக்கம் மற்றும் மனப்பதட்டம் ஏற்படுதல்.
  •  
  • அதிகமாக குடித்தாலும் போதை இல்லாமல் இருப்பது
  •  
  • அதே விளைவைப்பெற மேலும் மேலும் குடிக்க நேரிடும்
  •  
  • குடியை நிறுத்த முயன்றாலும் முடியாமல் போதல்
  •  
  • வேலை, குடும்பம் மற்றும் உறவுகள் குடியினால் பாதிக்கப்பட்டாலும் உங்கள் குடிப்பழக்கம் தொடரும்
  •  
  • உங்களுக்கு “நினைவக வெற்றிடங்கள்” (Memory blanks) ஏற்படும் அதனால் சில மணி நேரங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்ன நடந்தது என்று நினைவில் இருக்காது   

மதுவினால் வரும் பிரச்னைகளை கையாள்வது:

நீங்கள் உங்களுடைய அல்லது  உங்கள் நண்பரின் குடிப்பழக்கத்தைப் பற்றி கவலைப்பட்டால் உடனடியாக மாற்றங்களை செய்யவேண்டும். உடல்நலத்தை பாதிப்பதற்கு முன் மிக எளிதாக குடியை குறைத்து கொள்ளலாம், குடிப்பழக்கம் கைமீறிவிட்டால் சிரமமாகிவிடும்.

முதல் படி:

உங்கள் குடிப்பழக்கத்தை ஒரு நாட்குறிப்பில் குறியிடுங்கள் - நீங்களே உங்கள் குடியின் அளவைக் கண்டு வியந்து போவீர்கள் மற்றும் இது உங்கள் குடியை குறைக்க ஊக்குவிக்கும். நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ உங்கள் திட்டங்களைப்பற்றி பேசுவது உதவி செய்யும். பிறரிடம் பேசுவதற்கு வெட்கப்படாதீர்கள். மிகவும் உண்மையான நண்பர்கள் உதவ சந்தோஷப்படுவார்கள் - அவர்களும் சில நேரம் உங்களைப்பற்றி கவலை கொண்டிருப்பதை உணர்வீர்கள்.

உதவி பெறுவது:

உங்கள் குடிப்பழக்கத்தை மாற்றுவது கடினமாக இருந்தால் மருத்துவரிடம் பேச முயற்சி செய்யலாம் அல்லது உள்ளூர் மது அமைப்பிடமிருந்து ஆலோசனை பெறலாம். குடியை குறைக்க முயல்கையில் மிதமிஞ்சிய நடுக்கமோ, அமைதியற்ற நிலையோ குடிப்பழக்கத்தை நிறுத்த தடையானால் உங்கள் மருத்துவர் குறுகிய காலத்திற்கு சில மருந்தளித்து உதவமுடியும். இதற்கு பின்னும் குடிப்பழக்கத்தை மாற்றுவது சிரமமாக  இருந்தால் உங்களுக்கு சிறப்பு உதவி தேவைப்படும்.

பழக்கத்தை மாற்றுதல்:

நாம் அனைவரும் ஒரு பழக்கத்தை மாற்ற சிரமப்படுவோம். குறிப்பாக அப்பழக்கம் நம் வாழ்வின் ஒரு பெரும்பகுதியாய் இருக்கும் பொழுது. இந்த பிரச்னை தீர மூன்று வழிகள் உண்டு

  • பிரச்னை உள்ளது என்பதை உணர்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்
  •  
  • பழக்கத்தை மாற்ற உதவி பெறுதல்
  •  
  • ஒருமுறை மாற்றங்கள் செய்ய தொடங்கியபின் அவற்றை தொடர்ந்து செய்தல்

குடிப்பவர் எவராயினும் அவருக்கு மது சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம் - சிலர் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் - மது வீடற்ற நிலைக்கு முக்கிய காரணமாகும். சிலருக்கு வெறும் ஆதரவு மற்றும் பேசுவது மட்டுமே போதுமானாலும் மற்றவருக்கோ வேலைக்கு செல்ல, ஏதோ ஓரிடத்தில் வாழ மற்றும் உறவு முறைகளை தொடங்க  நீண்ட கால உதவி தேவைப்படும்.

குடிப்பழக்கத்தை கண்காணிப்பது மிகவும் கடின உழைப்பாயினும் இறுதியில் அது உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணி பலனளிக்கும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...