Total Pageviews

Wednesday, December 16, 2020

அழகான வரிகள் ! நீ . . .நீயாக இரு !

 அழகான வரிகள் பத்து.

 

1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
 
நாம் எல்லோரும்சாதாரண மனிதர்கள் 
🏹
2} பொறாமைக்காரரின் பார்வையில்..
 
நாம் அனைவரும் அகந்தையாளர்கள்
🏹
3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.. 
 
நாம் அற்புதமானவர்கள்
🏹
4} நேசிப்போரின் பார்வையில்.. 
 
நாம் தனிச் சிறப்பானவர்கள்
🏹
5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.
.
நாம் கெட்டவர்கள்
🏹
7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்...
 
ஒழிக்கப்பட வேண்டியவர்கள்
🏹
8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் ஏமாளிகள்
🏹
9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் குழப்பவாதிகள்
🏹
10} கோழைகளின் பார்வையில் நாம் அவசரக்குடுக்கைகள்
🏹
✅ நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
 
ஒரு தனியான பார்வை உண்டு. 
 
🕊 ஆதலால் -பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள் 🏹
🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்......
 
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
 
🥁 மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
 
🥁 இந்த மனிதர்களிடம் எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
 
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...! 
 
எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் 
 
சொத்தாக இருக்கட்டும்
👍
🎻 *வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம்.
 
நீ . . .நீயாக இரு !
 

தங்கம் விலை அதிகம்தான் . . .
 
தகரம் மலிவு தான் . . .
 
ஆனால் தகரத்தைக் கொண்டு
 
செய்யவேண்டியதை
 
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
 
அதனால் தகரம் மட்டமில்லை . . .
 
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
 
எனவே நீ . . .நீயாக இரு !
 
கங்கை நீர் புனிதம் தான் . . .
 
அதனால் கிணற்று நீர் வீண் என்று
 
அர்த்தமில்லை . . .
 
தாகத்தில் தவிப்பவருக்கு
 
கங்கையாயிருந்தால் என்ன ?
 
கிணறாகயிருந்தால் என்ன ?
 
நீ . . .நீயாக இரு !
 
காகம் மயில் போல் அழகில்லை தான் . .
 .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
 
நீ . . .நீயாக இரு !
 
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
 
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
 
நீ . . .நீயாக இரு !
 
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
 
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
 
நீ . . .நீயாக இரு !
 
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
 
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
 
நீ . . .நீயாக இரு !
 
நேற்று போல் இன்றில்லை . . .
 
இன்று போல் நாளையில்லை . . .
 
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...