Total Pageviews

Wednesday, November 13, 2024

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

 வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை


1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்  6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்திய பிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; புற்று நோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம். வாழ் நாளைக் குறைக்கும்.குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
 

தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!


கீரை வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
ராகியை கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!


ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!


தினமும் சாப்பிடக்கொடுங்கள்!


உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???


தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!


தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக் கட்டாயப்படுத்துங்கள்!


கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!


உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???


🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை, மாவு வகைகளை கொடுக்காதீர் சீரகத் தண்ணீர், சோம்புத் தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும்!
 

*நம் முன்னோர்கள் பயன் படுத்திய உணவுப் பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன் படுத்துவோம் *


 இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.


இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்...

Tuesday, November 12, 2024

ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் !

 

1. குளியல் அறைகுள் செல்போன் !

2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது !

3. வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது !

4.சிறிய விசயத்திற்கும் அதிகமாக கோபப்படுவது !

5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது!

6.நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது !

7. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக் கொள்வது !

8. திட்டமிடாத பயணம் !

9. ஆபாச வலைத்தளம்!

10. தேவை இல்லாமல் வெட்டியாக கண்விழித்து காலை 4 மணிக்கு தூங்க செல்வது !

11. எந்த வேலை செய்வதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையற்று தள்ளிப்போடுவது !

12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது!

13.இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது!

14. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை !

15. எக்காலத்திற்கும் உதவாத கட்டுப்பாடற்ற இன்பம் தேடுதல்! அது ஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரி!

16. நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்னும் மனநிலை!

17. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக்கொண்டே செல்வது !

18.இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது!

மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விசயத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம் , நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் , இரவு'10.30மணிக்குள் படுத்து விடுங்கள் !      5 நாட்களுக்கு காலை 6 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள் எவ்வளவு நீண்டது என்று !

கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டு இருக்கும் வேலை வீணானது என்று தோன்றும் வரை நம் செயலுக்கான காரணம் நம்மால் கொடுக்க முடியும் ஆனால் விளைவுகளை புரிந்து கொண்டு சற்று திருத்திக்கொண்டால் ஒருமுறை வாழும் இந்த விலைமதிப்பில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளலாம்!

Wednesday, November 6, 2024

அன்பு என்பது !

 அன்பு என்பது !


 

அன்பு என்பது தெய்வமானது !

அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது....

கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது...
 
உள்ளமென்பது உள்ளவர்க்கு உண்மையானது....
 
உலகமென்பது உள்ளவரை உறுதியானது.....
 
 அன்பு என்பதே தெய்வமானது...
 
அன்பு என்பதே இன்பமானது....
 
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது....
 
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது....
 
.இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது....
 
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது....

Sunday, November 3, 2024

வாழ்க்கை என்பது !

வாழ்க்கை வேடிக்கையானது, நீங்கள் ஒன்றுமில்லாமல் வருகிறீர்கள், பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் போராடுகிறீர்கள், பிறகு எதுவுமில்லாமல் போகிறீர்கள்.

இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் இழக்கவும் ஏதுமில்லை. தொலைக்கவும் ஏதுமில்லை. உரிமை கொண்டாடவும் ஏதுமில்லை. உங்கள் உடலும் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.

கவலை இல்லையெனில் மனிதனும் இல்லை. சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும். சிலரது வாழ்க்கையும் மாறும்.

ஆகவே எதற்கும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இருக்கும் வரை உங்கள் வாழ்வை சிறப்பாக வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்.

வாழ்வில் ஒழுக்கமும் நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும் கலையுணர்வும் வந்து விடுவதை உங்களால் காண முடியும்.

மனமே கடவுளின் இருப்பிடம் அதை  தூய்மையாக வைத்திருப்பது உங்கள் கடமை.

சில நேரங்களில் 


பிறர் உங்களை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

நல்ல சக்தியும் புத்தியும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கிறார்.அதன் மூலம் நீங்கள் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

உண்மையான அன்பை மற்றவர்களுடன் பகிருங்கள். அது பல மடங்காக உங்களுக்கு வேறு விதங்களில் திரும்ப கிடைக்கும்.

இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே.


எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள்ளுங்கள்.✍🏼🌹

வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்ள மூன்று இடங்கள் உள்ளன: ரத்தன் டாடா !

File:Ratan Tata photo.jpg - Wikipedia 

 வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்ள மூன்று இடங்கள் உள்ளன:  ரத்தன் டாடா !

Ratan N. Tata 

*₹8,85,56,75,90,000/- மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த ரத்தன் டாடாவின் மரணத்திற்கு முந்தைய கடைசி வார்த்தைகள்...*

வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்துள்ளேன். மற்றவர்களின் பார்வையில் என் வாழ்க்கை ஒரு சாதனை. இருப்பினும், வேலையைத் தவிர எனக்கு மகிழ்ச்சி இல்லை. பணம் என்பது நான் பயன்படுத்தும் உண்மை.  

இந்த நேரத்தில், மருத்துவமனை படுக்கையில் படுத்து, என் வாழ்நாள் முழுவதையும் நினைவில் வைத்துக் கொள்ளும்போது, ​​​​நான் பெருமைப்பட்ட அடையாளமும் பணமும் மரணத்திற்கு முன் பொய்யாகவும் மதிப்பற்றதாகவும் மாறிவிட்டன என்பதை உணர்கிறேன்.  

உங்கள் காரை ஓட்டுவதற்கு அல்லது பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் ஒருவரை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், கஷ்டப்பட்டு சாவதற்கு யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது.  

இழந்த பொருள்கள் கிடைக்கலாம். ஆனால் தொலைந்தால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று இருக்கிறது - அதுதான் "வாழ்க்கை".  

வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், காலப்போக்கில் இதயம் நின்றுவிடும் நாளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

உங்கள் குடும்பம், மனைவி மற்றும் நண்பர்களை நேசியுங்கள்...🙏 அவர்களை நன்றாக நடத்துங்கள், அவர்களை ஏமாற்றாதீர்கள், ஒருபோதும் நேர்மையற்றவர்களாகவோ அல்லது துரோகமாகவோ இருக்காதீர்கள்.  

நாம் வயதாகி, புத்திசாலியாக மாறும்போது, ​​300 அல்லது 3000 அல்லது 2-4 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிவது - எல்லாமே ஒரே நேரத்தை பிரதிபலிக்கிறது என்பதை படிப்படியாக உணர்கிறோம்.  

நம்மிடம் 100 அல்லது 500 ரூபாய் பர்ஸ் இருந்தாலும் - உள்ளே இருக்கும் அனைத்தும் ஒன்றுதான்.  

5 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டினாலும் சரி, 50 லட்சம் மதிப்பிலான காரை ஓட்டினாலும் சரி. பாதையும் தூரமும் ஒன்றுதான், நாம் ஒரே இலக்கை அடைகிறோம்.  

நாம் வசிக்கும் வீடு, அது 300 சதுர அடியாக இருந்தாலும் சரி, 3000 சதுர அடியாக இருந்தாலும் சரி - தனிமை எல்லா இடங்களிலும் ஒன்றுதான்.  

உங்கள் உண்மையான உள் மகிழ்ச்சி இந்த உலகத்தின் பொருள்களிலிருந்து வரவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.  

நீங்கள் முதல் வகுப்பில் பறந்தாலும் சரி, எகானமி வகுப்பிலா இருந்தாலும் சரி, விமானம் கீழே விழுந்தால், நீங்களும் கீழே இறங்குவீர்கள்.  

எனவே.. உங்களுக்கு நண்பர்கள், சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன், நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், சிரிக்கிறீர்கள், பாடுகிறீர்கள், மகிழ்ச்சி மற்றும் துக்கத்தைப் பற்றி பேசுகிறீர்கள், அதுதான் உண்மையான மகிழ்ச்சி!  

மறுக்க முடியாத வாழ்க்கை உண்மை:  

பணக்காரர் ஆவதற்காக உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காதீர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் வளரும்போது, ​​பொருள்களின் விலையை அல்ல, மதிப்பை அறிவார்கள்.  

வாழ்க்கை என்றால் என்ன?  

வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்ள மூன்று இடங்கள் உள்ளன:  
- மருத்துவமனை  
- சிறை  
- சுடுகாடு  

ஆரோக்கியத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்பதை மருத்துவமனையில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.  
சுதந்திரம் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை சிறையில் நீங்கள் காண்பீர்கள்.  
சுடுகாட்டில் வாழ்க்கை ஒன்றுமில்லை என்பதை உணர்வீர்கள்.  

இன்று நாம் நடக்கும் நிலம் நாளை நமதாக இருக்காது.  

இனிமேல் கண்ணியமாக நடந்துகொள்வோம், பெற்ற பெற்றோருக்கு நன்றி செலுத்துவோம்.  

இந்தச் செய்தியை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியுமா? மேலும் எனது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், எனது உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், எனது சமூகம், எனது நாடு அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

அனைவருக்கும் ஆசிகள் கிடைக்கட்டும்.
அனைவரும் நலமாக இருக்கட்டும்.

Friday, November 1, 2024

நிம்மதி என்பது இருப்பதில் திருப்தி படுவது தானே தவிர. இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.

எதிர்பார்ப்புகள் வேறு
எதார்த்தங்கள் வேறு
இரு வேறு விசயங்களை
ஒரே தட்டில் வைத்து எடை
போடுவது நமது தவறு.

பேசும்போது அறிந்தவற்றையே திரும்பக் கூறுகிறோம்...


ஆனால், கேட்கும்போதோ புதிதாக ஒன்றை அறிய வாய்ப்பிருக்கிறது.
 

எனவே, குறைவாகப் பேசி, நிறைய கேட்போம்.

தண்ணீர் கீழ் நோக்கிப் பாய்வதால்
தாழ்ந்ததும் இல்லை !
நெருப்பு மேல்நோக்கி எரிவதால்
உயர்ந்ததும் இல்லை!
இயல்புகள் வெவ்வேறு.

குடும்பம் என்கிற அமைப்பு
கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு.

உலகப்புகழ்பெற்ற ஒரு சிறுகதை.

கணவனிடம் ‘வாட்ச்’ இருந்தது.
அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, ‘தங்க கிளிப்’ வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை. !


முதல் திருமண ஆண்டுவிழாவில்,
இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன்.

ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும்போது அங்கு அன்பு வலுவடைகிறது. நம்மை கஷ்டப்படுத்தியவர்கள் யாரையும் நமக்கு பிடிப்பதில்லை. நமக்காக கஷ்டப்பட்ட யாரையும் நாம் வெறுப்பதில்லை.

கணவன்- மனைவிக் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும்.

இதையே நாம் இனிய உறவுகள் என்போம். குடும்பம் என்பது ஒரு தனிச்சொல்லாயினும்
அதைப் பிரித்துப் பார்க்கும்போது
அதில் ‘’கொடு இன்பம்’’ என்கின்ற தொனி ஒலிக்கிறது. எனவே, இன்பத்திற்குப் பஞ்சமில்லாத உறவுகளின் சங்கமமே குடும்பம் எனப்படும்.

பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள்.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச் சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப்பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானது.

திருக்கடையூரில் எண்பது வயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திகள் சூழ எண்பதுக்கு எண்பது நடைபெறுவதை உலகில் வேறு எந்தப் பகுதியில்
காண முடியும்.

குடும்பம் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம் மட்டுமன்று. ஆண்டாண்டு காலமாய் நீண்ட மரபுகளைத் தாங்கும் காலமரமும் கூட.
 

 நிம்மதி என்பது
இருப்பதில் திருப்தி படுவது
தானே தவிர.
இல்லாததிலும் இழந்ததிலும்
தேடுவதல்ல.

அறிவுரை இலவசமாக
கிடைத்தாலும்
அனுபவம் பட்டால்தான்
புரியும்....

Tuesday, October 29, 2024

கிட்னியை சுத்தம் செய்வது எப்படி?

ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள் .அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள் .(அடக்கிவைக்கக்கூடாது.சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்ததும் கழித்துவிட்டு வேண்டும் )

உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள் இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை 3 நாள்கள் தொடர்ந்து செய்யுங்கள்

முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறை , இரண்டாம் முறை ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறை என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது.

உதாரணமாக 1 time 60 மினிட்ஸ் 2 time 30 மினிட்ஸ் 3 தடவை 15 minutes என நீர் வெளியேற வேண்டும்.

இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம் .

ஆனால் ஒன்று ஒரு சிறுநீரகம் மெல்ல மெல்ல கெட்டுப்போக எத்தனை காலம் அகின்றதோ அதே காலம் அது இயற்கையாகவே சரி செய்ய எடுத்துக்கொள்ளும்.

உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்பட தொடங்கிவிடும்.

உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக கவனம் தேவைப்படுகிறது என்றால், நீங்கள் புரோட்டின் குறைவான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியம்.

குதிரைவாலியை நாம் நமது அன்றாட உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வதில்லை. இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்.

மெக்னீசியம் சிறுநீரக கற்களை வளரவிடாமல் தடுக்கிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.

Friday, October 18, 2024

#"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது ? கவனம் தேவை !

 கவனம் தேவை !  விழிப்புணர்வு பதிவு !

சிவகங்கையை சேர்ந்த ஒருவருக்கு பத்து நாட்களுக்கு முன்பு தபாலில் ஒரு ATM கார்டு வந்திருக்கிறது. பிரித்து பார்த்தால் SBI மேலூர் கிளையில் இருந்து இவரது பெயர் விலாசமிட்ட கார்டு. மேலூரில் SBI பேங்க் எந்தப்பக்கம் இருக்கிறது என்பதுகூட தெரியாதவருக்கு எப்படி இவர் பெயரில் ATM கார்டு வந்தது?

பலவித சிந்தனைகளோடு மேலூர் போகிறார். SBI கிளை மேனேஜரை சந்தித்து நடந்ததை கூறுகிறார். அவரோ அங்கிருந்த ரெக்கார்டுகளை பரிசோதித்தபின் போன மாதம் நீங்க தான் இங்கு வந்து கணக்கு தொடங்கியிருக்கிறீர்கள். இதோ உங்க போட்டோ, கையெழுத்து என்று ரெக்கார்டுகளை காட்டவும் இவருக்கு அதிர்ச்சி. அச்சு அசலாக இவரது கையெழுத்து மற்றும் இவரது போட்டோ. தான் இங்கு வரவேயில்லை, கணக்கும் தொடங்கவில்லை. வேண்டுமானால் உங்கள் CCT கேமிராவை சோதித்து பாருங்கள் என்றபோது... அந்த மேனேஜரின் முகத்தில் சிறு அச்சம் பரவியிருக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் ஊகிக்கிறார். மேலும் இந்த போலியான கணக்கில் ஆயிரம் ரூபாய் கட்டி கணக்கு தொடங்கியிருக்கிறார்கள்.

உடனே நம்மவர் இந்த கணக்கை உடனடியாக முடிக்கும்படி கூறவும், அந்த மேனேஜரும் சட்டு புட்டென அதற்கான நடவடிக்கை எடுத்து கணக்கை குளோஸ் செய்து ரூ. 600 ஐ மட்டும் கொடுத்து அவசர அவசரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.


(கணக்கு தொடங்கி மூன்று மாதம் முடிந்தால் தான் முழுப்பணமும் கொடுப்பார்களாம்.)

இதை யார் இவ்வளவு மெனக்கெட்டு செய்திருப்பார்கள்?. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?.  இதுபோன்ற சந்தேகங்களுடன் பிரபல வக்கீலுடன் கலந்து பேசியபோது பல அதிர்ச்சியான செய்திகளை அறிய முடிந்தது!.

வழக்கறிஞர் கூறியதாவது.


இவரது ஆதார் காப்பியையும், அதிலிருந்த கையெழுத்தையும்  போர்ஜரி நபர் கைப்பற்றியதோடுஇவரது புகைப்படத்தையும் சேகரித்திருக்கிறார். பின் அந்த வங்கியில் இருக்கும் யாரோ ஒரு அதிகாரியின் கூட்டு முயற்சியோடு இந்த கணக்கு தொடங்கப் பட்டிருக்க வேண்டும். வங்கியில் இருக்கும் அந்த கருப்பு ஆடுதான் இங்கே மிக முக்கியமான குற்றவாளி. இந்த கணக்கின் மூலம் சிவில் 100% சரியாக இருந்தால், பிராப்பர்ட்டி செக்யூரிட்டி இல்லாமல் குறைந்தது ரூ. ஐந்து  லட்சம் வரை கடன் பெறமுடியும். அப்படி வாங்கிய கடனை ஒரு தவணை கூட கட்ட மாட்டார்கள். பின் இவருக்கு தகவல் வரும்போதுதான் இந்த விவரங்களே தெரியவரும்.

இப்போது இவர் இந்த வங்கி கணக்கை முடிக்காமல் இருந்திருந்தால் இந்த வங்கியின் மீது மூன்று வகையான வழக்கு தொடர்ந்திருக்க முடியும். மிகப்பெரிய தொகையை நஷ்டஈடாக பெற்றிருக்க முடியும். இதையெல்லாம் தெரிந்ததால்தான் இவரது வங்கி கணக்கை உடனடியாக முடித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது போன்ற தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நமது ஆதார் ஜெராக்ஸ் காப்பி , பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை எங்கும் விட்டு வைக்காதீர்கள். ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்கும் போது கவனமாக இருப்பதோடு, போட்டோ ஸ்டூடியோவில் கனிணியில் சேகரிக்கும்போது டெலிட் செய்யும்படி வலியுறுத்தல் அவசியம். குறிப்பாக உங்கள் கையொப்பம் இட்ட பேப்பர்களை வெளியிடங்களில் தவற விட்டுவிடாதீர்கள் என்றார்.

"எப்படியெல்லாம் உலகம் மாறிக்கொண்டு வருகிறது பாருங்கள். எதில்தான் கவனம் வைப்பது? யாரைத்தான் நம்புவது?. இறைவா மக்களை காப்பாற்று."!

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

 மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:


1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி

#madurai #மதுரை


Wednesday, October 16, 2024

பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டாம்! அதுவே உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது


36 வயதான ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது, அது கடைசி கட்டத்தில் இருந்தது. அவரது வயதில், அவர் இதுவரை குட்கா, சிகரெட், பான் அல்லது மது அருந்தியதில்லை. சரியான நேரத்தில் வேலைக்குச் செல்வது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது, இதுதான் அவரது வாழ்க்கை, எந்த நோயும் இல்லை, கவலையும் இல்லை.
      கடந்த 2/3 நாட்களாக வயிற்றுவலி தொடங்கியதால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையைத் தொடங்கினார், ஆனால் பலன் இல்லாததால், மூத்த மருத்துவரை அணுகினார். அங்குள்ள மருத்துவர் அவரது அனைத்து அறிக்கைகளையும் பெற்று, அவருக்கு குடலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தார்.
   

 டாக்டர். அவர் சிகிச்சையைத் தொடங்கினார், சிகிச்சையின் போது அவர் தனது முழு சேமிப்பையும் தனது வீட்டோடு விற்றார், ஆனால் அதன் விளைவாக அவர் இறந்தார். மனித குலத்தின் நலனுக்காக உடலை தகனம் செய்வதற்குப் பதிலாக ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு மருத்துவர் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார். குடும்பத்தில் பரஸ்பர விவாதத்திற்குப் பிறகு, உடலை ஆராய்ச்சிக்காக மருத்துவமனைக்கு தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


     பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து வெளியாகும் ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக்கில் சூடான உணவை உண்பதாலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடித்ததாலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு அவரது உணவு பழக்கம் குறித்து விசாரணை நடத்தியதில் அவருக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு கப் தேநீர் அருந்துவது வழக்கம். மேலும், எங்கு தேநீர் அருந்தினாலும், பிளாஸ்டிக் பைகளில் வந்து, பிளாஸ்டிக் கோப்பைகளில் வழங்கப்படுவதும் தெரியவந்தது.


அடிக்கடி மக்கள் சூடான தேநீர், சூடான காய்கறிகள் அல்லது பிற பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் ஆர்டர் செய்து அதையே சாப்பிடுவது அல்லது குடிப்பது அடிக்கடி பார்க்கப்படுகிறது. அதுவே மெதுவாக உங்கள் உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது.
     

அப்போது மருத்துவரும் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவரது சக ஊழியர்கள் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது அவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
     ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான இதுபோன்ற மோசமான பொருளை தயாரிக்க அரசு எப்படி அனுமதி அளிக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். 


     பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து நம்மை நம்ப வைக்கிறது, ஆனால் எப்படி புரிந்து கொள்வது? நம்மையும், நம் அன்புக்குரியவர்களையும் மரணத்தை நோக்கித் தள்ளும் வேலையை நாமே அச்சமின்றிச் செய்கிறோம், நம்மைப் பற்றியோ, நம் குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படாமல், மரணத்தைத் தழுவும் நாகரீகத்தின் குருட்டுப் பந்தயத்தில் ஓடுகிறோம்.


     எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மீண்டும் உங்கள் அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோள், முடிந்தவரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை சாப்பிட வேண்டாம், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக பிளாஸ்டிக் கப்பில் சூடான டீ, காபி போன்றவற்றை குடிக்கக் கூடாது.

          டாக்டர் ஏ கே பாண்டே, எம்எஸ், புற்றுநோய் மற்றும் இதய பராமரிப்பு சங்கம்.
 
தொடர்ந்து முன்னேறுங்கள், இதுவும் ஒரு புண்ணிய செயல்.*

IT வேலையை நோக்கி ஏன் ஓடுகின்றனர்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.  இது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது.  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நண்பரின் மகள் 12வது மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றாள்.  அவளுக்கு IT படிக்க வேண்டும் என்பது ஆசை.  ஆனால் நண்பர் அவளை அமரவைத்து பேசி, வேறு துறைக்கு தயார் படுத்தி விட்டார்.  பல வருடங்கள் குடும்ப உறவு என்பதால், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவரிடம் இது குறித்து பேசியது சுருக்கமாக.

 IT துறையில் தற்போது லட்சக் கணக்கில் சம்பளம் கிடைப்பதன் பின்னால் ஒரு மிகப்பெரிய ஜியோபொலிடிகல் ஸ்ட்ராடஜி உள்ளது.  ஒன்று நமது பாரத வளர்ச்சியை தடுப்பது இன்னொன்று நமது கலாசாரத்தை குடும்ப உறவுகளை சிதைப்பது.

சமீப காலங்களில் பொறியியல் படித்த மாணவர்கள் கூட ஏதோ ஒரு  IT வேலையை நோக்கி ஓடுகின்றனர்.  ஏனெனில் மற்ற துறைகளில் சம்பளம் குறைவு (விதிவிலக்குகள் தவிர்த்து), உற்பத்தி பணி இடங்களில், இயந்திரங்களுக்கு நடுவே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  இதனை இன்றைய தலைமுறை விரும்பாத அளவிற்கு மனதை மாற்றி விட்டனர்.  

இதனால் மற்ற துறைகளில் வளர்ச்சி என்பது 2000ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்து, சீனாவில் இருந்து சிறு பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.  பாரதம் காலங்காலமாக சுயதொழிலில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த நாடு.  

ஆனால் இதனை பிரிட்டிஷார் மாற்றி முதலில் அரசு வேலை என்ற மாயை உருவாக்கி, (அதிகபட்சம் ஒரு 5-8% பேர் இருக்கலாம்) அவர்களுக்கு எல்லா சலுகைகள் அதிகம் உடல் உழைப்பு தேவையில்லை, நல்ல வருமானம், அதையும் தாண்டி தங்கள் கடமையை செய்யவும் செய்யாமல் இருக்கவும் வருமானம், பென்ஷன் என எல்லோரையும் அதன் பின்னால் ஓடவிட்டு, தொழில்வளராமல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினர்.

ஒரு கால கட்டத்தில் இது முடியாத போது பிரிண்ட் செய்யப்பட்ட டாலர்களை கொடுத்து,  IT துறையை வளர்த்து விட்டனர்.  இதன் மூலம் ஆராய்ச்சி, புதிய தொழில் நுட்பங்கள் அனைத்தும் இந்த 70-80 ஆண்டுகளில் முடங்கி, உடல் உழைப்பும் குறைந்து, தொழில் வளர்ச்சியே மந்தமாகும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.

இன்று எந்த இளைய தலைமுறையினரையும் கேளுங்கள், ஒரு ஏசி அறையில் நாள் முழுவதும் உட்கார்ந்து, வேலை செய்வதை 90% பேர் விரும்புகின்றனர்.  வேறு வழியில்லாமல் வேறு வேலைகளுக்கு சென்றவர்களும், எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளாமல் விதியே என வாழுகின்றனர்.

இதில் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு நடக்கிறது.  இதனால் பல பெண்கள் குறைந்தபட்சம்              28


வயது - 30 வயது வரை திருமணம் என்பதையே ஏற்பதில்லை.  அப்படியே வரன் தேடினாலும் அவர்களுக்கு இணையாக அல்லது அதிக சம்பளம் வாங்கும் மற்றதுறை இளைஞர்கள் கிடைப்பதில்லை.

பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பு காலத்தை தள்ளி போடுவதால் மக்கள் தொகை இளைஞர்கள் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.   இதே நிலை ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா, சீனாவிலும் பெரும் பிரச்சினையாகி உள்ளது.

மொத்தத்தில் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள்


- தொழில் வளர்ச்சி இன்றும் பெரும் பிரச்சினை


-அடிப்படை மனவளர்ச்சி, திறன், ஆராய்ச்சி, குறைந்து கொண்டே வருகிறது.


-குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டே வருகின்றன.


- பெண்களின் உடல் நிலை பாதிப்புகள் குறித்து சொல்லவே வேண்டாம்.


-பல குழந்தைகள் ஒற்றை குழந்தைகளாக மனஆரோக்கியமின்றி, தனிமைப் பட்டு போகின்றனர்.
 

- இந்த கவர்ச்சிகரமான வேலைகளில் 40 வயதுக்கு பிறகு இவர்கள் ஒதுக்கப்படும் போது ஏற்படும் மன அழுத்தம் ஏராளம்.


- நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை கூடுவதால், பல பிரச்சினைகள்.


-வயதானவர்கள் தனித்து விடப்படுதல், குழந்தைகள் பெண்கள் மீதான வன்முறைக்கு சூழல் அதிகரிக்கிறது.


- மருத்துவ மாஃபியா இதனை பெரிய அளவில் கொண்டாடி பணம் பார்க்கின்றனர்.


- பாரம்பரிய உணவுகள் மறந்து, வீடுகளில் உணவு தயாரிப்பது குறைந்து, ஆரோக்கியம் பாதிக்கப் படுகிறது.


-ஸ்விக்கி ஜொமாட்டோ நல்ல காசு பார்க்கின்றனர்.  அதே சமயம் கலப்பட உணவுகள், தரமற்ற ஆரோக்கியமற்ற ரெடி உணவுகள் மூலம் பெரும் பணம் பார்க்கின்றனர்.

இப்படி பலவற்றை சொல்லிய அவர், எங்கள் குடும்பத்தில் ஆண்கள் அதிக அளவு சம்பாதிப்பதும், பெண்கள் (திறமையானவர்கள், ஸ்பெஷலிஸ்ட்டுகள், விதி விலக்குகள் தவிர்த்து) மற்றவர்கள் குடும்பத்தை பாதிக்காத அளவு வேலை பார்த்தால் அல்லது வேரு சிறு தொழில்களில் ஈடுபட்டால் போதும் என்று முடிவெடுத்துள்ளோம்.

பெண்கள் ஃப்ரீயாக இருப்பதால் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றனர், மத, இன, கலாச்சார் சம்மந்தமான விழாக்களை முன்னெடுத்து செய்வது, உறவினர் வீடுகளுக்கு எந்த நேரமும் சென்று வருவது, சுற்றுலா அல்லது பில்கிரிமேஜ் செல்வது என மனநலத்துடன் உள்ளனர்.  குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை இழப்பதில்லை.

சரியான நேரத்தில், சரியான ஆட்களுடன் திருமணங்கள், நல்ல குடும்ப உறவுகள் என சந்தோஷமாக இருக்கிறோம்.  தேவையான அளவு சம்பாதிக்கிறோம்.  நன்றாக போகும் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார்.

அவர் சொன்னதை அவர் மகள் முழுமையாக ஏற்றுக் கொண்டார்.  

நான் இன்னமும் யோசித்துக் கொண்டு உள்ளேன்.

நீங்கள்?

Friday, September 27, 2024

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..




பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை


 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது


 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 


FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*******
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர்

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி          - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட்

100 சென்ட்                     - 1  ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர்

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள்

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி

1 குழி (Square Yard)           = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)

1 ச.மீ(Square Meter)            = 1.190 குழி

1 குழி                                  = 9 சதுர அடி

1 ச.மீ(Square Meter)           = 10.76 சதுர அடி

1 குந்தா (Guntha)             = 121 குழி = 101.17 சதுர மீட்டர்

1 குந்தா (Guntha)             = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி                             = ஒரு மா

20 மா                                  = ஒரு வேலி

3.5 மா                                 = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்                        = ஒரு வேலி

16 சாண்                             = 1 கோல்

18 கோல்                           = 1 குழி

100 குழி                              = 1 மா

240 குழி                              = 1 பாடகம்

Thursday, September 26, 2024

வசப்படும் வாழ்க்கை !

 வசப்படும் வாழ்க்கை .



_*நாற்பது  வயதுக்கு மேல் வாழ்க்கையில் தைரியம் என்பது,
நம் கையில் இருக்கும் பணத்தை பொருத்தே அமைகிறது.*_

_*வாழ்க்கையில் பணம் இல்லாமல் மனிதனாக வாழ இயலும்.
 

ஆனால் பணம் ஏதும் இன்றி மனிதர்களிடம் வாழ இயலாது.*_

சாம்பாதித்ததை செலவு செய்த காலம் போய், முதலிலேயே செலவு செய்து விட்டு அதை அடைக்க சம்பாதித்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சம்பாதிப்பது சொத்து இல்லை. அனுபவித்ததுதான் சொத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்.

 கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான் மனிதன்..


பாசத்தில் மனிதனை    வாழ்க்கையில் ஒவ்வொரு படிநிலையும்
ஒவ்வொரு ஆசான்...
எந்த படிநிலையும்
வந்தபடியே செல்வதில்லை...
ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும்,
ஏதோ ஒன்றை
ஏற்கச்சொல்லும்...
கற்றுக்கொள்ளவும்,
ஏற்றுக்கொள்ளவும்
தயாராக இருந்தால்
வசப்படுமே வாழ்க்கை.

வாழ்க்கையில்

வெற்றிபெறும் கலையை  முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தர முடியாது. சுயமாக முன்னுக்கு வரும் கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து நீங்கள் முன்னுக்கு வந்த கலையைச் சொல்லிக் கொடுங்கள் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லித்தரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. இது சொல்லித் தர முடியாதது.
 

இது பலருக்கும் புரிவதிவதில்லை.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது ஒன்றை  சொல்லிக் கொடுப்பதை விட கற்றுக் கொள்வதில்தான்  வெற்றி அடங்கியிருக்கிறது.
 

சிவாஜி கணேசன் எந்தக் கல்லூரியிலும் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார்.

சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக்கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும்‌ இதனை புரிந்து கொள்ளாமல் புகழ் பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைப்பதாகக் குற்றம் சாட்டுவது தவறு.

சமைத்துப்பார் என்ற புத்தகத்தைக் படித்துச் செய்த சமையலை விட அருமையாக சமைக்கும் அம்மணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். காரணம் அனுபவம் மட்டுமல்ல,பழக்கம் மட்டுமல்ல,மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம்  விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைச் சுலபமாகத் கற்றுக்கொள்ளும்.

தூக்கத்திலிருந்து விழித்தால் மட்டும் போதாது. மனதும் விழிக்க வேண்டும். மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால்  திறக்கவேண்டும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆக முடியாது.

*படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு.
கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்.*

 தடைக்கு விடை கண்டுபிடித்தால்,
நடை போட்டு வெற்றி வரும்.

 எந்த எல்லைக்கும்
போகலாம் என்ற
நிலை இருந்தும்...
தன்னையும் ஓர்
கண்ணியமான
எல்லைக்குள்
நிறுத்தி
வாழ்பவனே...
நல்ல மனிதன்..

கேட்கப்படும்
மன்னிப்பை காட்டிலும்.
ஏற்கப்படும் மன்னிப்பே
மதிப்பு வாய்ந்தது.

Wednesday, September 18, 2024

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

 


நிம்மதி என்றால், எந்த ஒரு குழப்பமும், கவலையும், யோசனையும் இல்லாத நிலை

தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே, நிம்மதியை அடைந்து விடலாம்

தேவையற்ற எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால், நிம்மதி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று

இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.

இருப்பதில் சந்தோஷமாக இருந் தாலே நிம்மதி.

இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.

இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்.

எல்லாம் உங்கள் மனம்தான் காரணம் இல்லாததை எண்ணி அலைந்து நிம்மதியைக் கெடுக்கிறது நீங்கள் அதற்கு அடிமையாக தொலைந்துபோய் இருக்கின்றீர்கள் அதனால் நிம்மதி இருப்பது தெரியாமல் எங்கோ தேடுகிறீர்கள்.

இருக்கும் இடத்தில் இருந்த பொருட்களை வைத்துக் கொண்டு இன்பமாக இருங்கள் நிம்மதி தானாய் தெரியும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தபடியே வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் முயற்சி இருக்கட்டும் ஆனாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முயன்றவரை நேர்மையான வழியில் உழைத்து சம்பாதித்து இருப்பதில் சந்தோஷமாக வாழ கற்று உங்கள் நிம்மதியை தொலைக்காமல் இருங்கள்!

மனதில் நிம்மதி, வீட்டில் நிம்மதி, பொருளாதாரத்தில் நிம்மதி எல்லாம் இறைவனை நினைவுக் கூர்ந்து வாழ்வதில் உள்ளது.

 நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

1.ஆரோக்கியமான உடல்

2.திருப்தி அடையும் மனம்

3.நேர்மையாக சம்பாதித்த பணம்

4.அனுசரணையான குடும்பம்

5.ஊக்கப்படுத்தும் துணை

6.உற்சாகம் தரும் நட்பு

7.சரி தவறு கணிக்கும் பக்குவம் !

8.சில சறுக்கல்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை !

9.தேவை ஆசை வித்தியாசம் உணர்வது !

10.இறை நம்பிக்கை அல்லது இயற்கையின் மீது நம்பிக்கை !

செல்வம் தான் நிம்மதியா ?

அதுவும் ஒரு காரணம் !

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...